குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

08.03.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

அரசியல் பணிகளுக்கு நாளை திரும்புவாரா ராகுல்?

புது டில்லி:காங்கிரஸ் கட்சிப் பணிகளில் இருந்து துணைத் தலைவர் ராகுலுக்கு அளிக்கப்பட்டிருந்த 2 வார விடுப்பு இன்றுடன் (மார்ச் 8) முடிவடைகிறது. எனினும், அவர் எப்போது அரசியல் பணிகளுக்கு திரும்புவார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.

இந்நிலையில், உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ள சமாஜவாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் விரைவில் குணமடைய ராகுல் நேற்று வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

வினோத் மேத்தா மரணம்:சோனியா இரங்கல்
புதுடில்லி : மூத்த பத்திரிக்கையாளர் வினோத் மேத்தா காலமானதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா இரங்கலும், அதிர்ச்சியும் தெரிவித்துள்ளார்.
குண்டுவெடிப்பில் உயிர்தப்பினார் ஹசீனா
தாக்கா : தாக்காவில் மிகவும் பரபரப்பான பகுதியில் அடுத்தடுத்தடு நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் இருந்து வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நூலிழையில் உயிர்தப்பினார். அவரது கார் கடந்த சென்ற சில நிமிடங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் ஒரு போலீஸ்காரர் காயமடைந்துள்ளார்.
விளம்பரங்களுக்கு டில்லி அரசு எச்சரிக்கை
புதுடில்லி : கடைகள் முன் வைக்கப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் தொடர்பான விளம்பரங்கள் உடனடியாக அகற்ற வேண்டும் என பல நிறுவனங்களுக்கும் டில்லி அரசு கடிதம் அனுப்பி உள்ளது. புகையிலை பொருட்களுக்கு எதிரான விளம்பரங்களை பொது இடங்களில் வைக்க வேண்டாம் என டில்லி அரசு எச்சரித்துள்ளது.
வாழப்பாடியில் மர்ம விலங்குகள்
வாழப்பாடி : வாழப்பாடி அருகே உள்ள பெருமாபாளையம் ஊராட்சி பள்ளியின் பின்புறம்,ராஜா என்பவருக்கு சொந்தமான பாக்கு தோப்பு உள்ளது. இதில் கடந்த சில நாட்களாக வினோத விலங்குகளின் கால் தடங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது புலியாக இருக்குமோ என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இது குறித்து ஆய்வு செய்வதற்காக வனச்சரகர் அன்பழகன் தலைமையிலான வனத்துறையினர் வனத்திற்குள் சென்றுள்ளனர்.
2016க்குள் டாஸ்மாக்கை மூடவேண்டும்:தமிழிசை
சென்னை : சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், 2016ம் ஆண்டு மகளிர் தினத்திற்குள் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை அரசு மூட வேண்டும். பிரதமர் மோடியின் இலங்கை பயணம் தமிழர்களுக்கு நிச்சயம் நன்மையை ஏற்படுத்தும். மோடியை விமர்சிக்க வைகோ, திருமாவளவன், இளங்கோவனுக்கு உரிமை இல்லை. அரசியல் நோக்கத்திற்காகவே அவர்கள் மோடியின் இலங்கை பயணத்தை கையில் எடுத்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு மதிப்பளியுங்கள்:கெஜ்ரிவால்
புதுடில்லி : டில்லியை பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக மாற்ற டில்லி ஆண்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் இந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளதற்கு என் தாயும், மனைவியும் தான் காரணம். ஊழலுக்கு எதிரான எனது போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி, துணையாக இருப்பவர்கள் அவர்கள் தான்.பெண்களிடம் இருந்து ஆண்கள் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் பலர் பெண்களை தவறாக விமர்சிக்கிறார்கள். வெளியில் இருக்கும் பெண்களை மதிக்காத மனிதன், வீட்டில் இருக்கும் பெண்களையும் மதிக்க மாட்டான். டில்லியில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் சுதந்திரமாகவும், மகிழச்சியாகவும் வாழ வேண்டும். அதற்கு ஆண்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்
சென்னை : பட்ஜெட் குறித்து விவாதம் நடத்துவதற்காக தமிறழக அமைச்சரவை கூட்டம் இன்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது.
மகளிர் தினம்: சோனியா வாழ்த்து
புதுடில்லி : சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா வாழ்த்து தெரிவித்துள்ளார். பெண்களின் சமஉரிமை, கண்ணியம், சுயசிந்தனை ஆகியவற்றிற்கு உரிய மரியாதை வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஏற்றுமதியை ஊக்குவிக்க புதிய குழு
புதுடில்லி : ஏற்றுமதி துறையை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு ஆலோசனைக் குழு ஒன்றை அமைக்க உள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.
டில்லி காங்., தலைவராகிறார் மக்கான்
புதுடில்லி : டில்லி காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அஜய் மக்கான், இன்று முறைப்படி பதவியேற்றுக் கொள்ள உள்ளார்.
விமானத்தை கண்டுபிடிப்போம்:மலேசியா
கோலாலம்பூர் : எம்.ஹச்.370 மலேசிய விமானம் மாயமாகி இன்றுடன் ஓராண்டு ஆகும் நிலையில், விமானத்தை நிச்சயம் கண்டுபிடிப்போம் என மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அரசு மாறுவதால் எதுவும் மாறாது:ஆலம்
புதுடில்லி : சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள காஷ்மீர் பிரிவினைவாத இயக்க தலைவர் மசராத் ஆலம், அரசுகள் மாறுவதால் எதுவும் மாறி விடாது என்பதே உண்மை. சிறுவயது முதலே நான் பெரும்பாலான காலங்களை சிறைகளிலேயே கழித்து விட்டேன். அதனால் நான் மீண்டும் கைது செய்யப்பட்டால் கூட அது என்னை பெரிய அளவில் பாதிக்காது என தெரிவித்துள்ளார்.
குன்னூர்:ஆற்றில் மிதக்கும் வாகனங்கள்
ஊட்டி : நீலகிரி மாவட்டம் குன்னூரில் நேற்று நள்ளிரவு கனமழை பெய்தது. இதில் கிருஷ்ணாபுரம் பகுதியில் ஆற்றின் கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 கார்கள், 8 ஆட்டோக்கள் மற்றும் 10 பைக்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அவற்றை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பல வாகனங்கள் ஆற்றிற்குள் சிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
புதிய கல்வி கொள்கை:அரசு திட்டம்
புதுடில்லி : பள்ளிகளில் புதிய கல்வி கொள்கையை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் வேத கணிதத்தை கட்டாய பாடமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் வளர்ச்சிக்கு புதிய கண்டுபிடிப்புகள் அவசியம்: ஜனாதிபதி
புதுடில்லி:புது டில்லியில், ஜனாதிபதி மாளிகையில், , "கண்டுபிடிப்புகளின் திருவிழா' நிகழ்ச்சியை நேற்று தொடங்கி வைத்து, பேசிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி,நாட்டின் வளர்ச்சிக்கும், வளமைக்கும் புதிய கண்டுபிடிப்புகள் அவசியம் என்று கூறினார்.மேலும் அவர் கூறுகையில்,இன்றைய இளைஞர்கள், ஏழ்மையைப் போக்கவும், வேலைவாய்ப்புக்களை உருவாக்கவும், சமுதாயத்தை மகிழ்ச்சியாக வைப்பதற்கும் தேவையான வழிமுறைகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.கண்டுபிடிப்புகளின் முன்னோடி நாடாக இருப்பதில், இந்தியாவுக்கு எல்லா தகுதிகளும் உண்டு. இருப்பினும், இதற்குத் தேவையான ஊக்குவிப்பு குறைவாக இருப்பதினால், நாடு புதிய கண்டுபிடிப்புகளில் பின்தங்கியுள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கும், வளமைக்கும் புதிய கண்டுபிடிப்புகள் மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்தினார்.
வங்க தேச குண்டு வெடிப்பு: உயிர் தப்பிய பிரதமர்
டாக்கா:வங்கதேச தலைநகரமான டாக்காவில் நேற்ற குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்ட நிலையில், அந்நாட்டுப் பிரதமர் ஷேக் ஹசீனா மயிரிழையில் உயிர் தப்பினார்.டாக்கா நகரத்தின் முக்கிய சந்தைப் பகுதியான கர்வான் பஜாரில் நேற்று குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. அந்த இடத்தை ஷேக் ஹசீனாவின் வாகனம் கடந்து சென்ற சில நிமிடங்களில் குண்டுவெடிப்பு நடந்தது. அதில் காவல்துறை அதிகாரி ஒருவருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
உடுப்பி: தொகாடியாவுக்கு நுழைய தடை
உடுப்பி:கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்துக்குள் நுழைய விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச செயல் தலைவர் பிரவீண் தொகாடியாவுக்கு 7 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.உடுப்பி நகரில் நாளை (மார்ச் 9) நடைபெற உள்ள "ஹிந்து சமாஜோத்ஸவா' பேரணியில் அவர் பேச இருந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசில் தொடரும் இலாகா மாற்றம்:
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அவ்வப்போது அமைச்சரவை மாற்றம் நடந்து வந்தது. அமைச்சர்கள் எப்போது மாற்றப்படுவர் என்பது புதிராக இருந்தது. முதல்வராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்ற பின், அமைச்சரவை மாற்றம் நடைபெறவில்லை. ஆனால், துறை மாற்றம் நடந்து வருகிறது. அமைச்சர் செந்தூர்பாண்டியன் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவரிடமிருந்த இந்து சமய அறநிலையத் துறை, உணவுத் துறை அமைச்சர் காமராஜிடம், கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது. தற்போது, அக்ரி கிருஷ்ணமூர்த்தி பதவி பறிக்கப்பட்டதால், அவரது துறை, வைத்திலிங்கத்திடம், கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
17வது முறையாக அமைச்சரவை மாற்றம்
சென்னை: தமிழக அமைச்சரவையில், கடைசியாக, 16வது முறையாக, பால்வளத் துறை அமைச்சர் மூர்த்தி நீக்கப்பட்டு, ரமணா நியமிக்கப்பட்டார். இதன் பின், முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். அனைத்து அமைச்சர்களும் புதிதாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். அந்த வகையில், ஓ.பி.எஸ்., அரசில், இது முதல், அமைச்சரவை மாற்றம். ஒட்டுமொத்தமாக பார்த்தால், 17வது முறை.
மோடி வருகையால் பெரும் எதிர்பார்ப்பு
பிரதமர் நரேந்திர மோடி, வரும், 13 மற்றும் 14ம் தேதிகளில் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். மோடியின் இந்த சுற்றுப் பயணம், இலங்கையைச் சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் கூறியதாவது: இலங்கை அதிபர் சிறிசேன சமீபத்தில் இந்தியாவுக்கு சென்று, இரு தரப்பு உறவு குறித்து பேச்சு நடத்தினார். அதன் தொடர்ச்சியாக இந்திய பிரதமர் மோடி, இலங்கை வரவுள்ளார். அவரின் வருகை, எங்களைப் போன்ற கட்சிகளிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழர் பிரச்னை குறித்து, அவரிடம் சில கோரிக்கைகளை முன்வைக்க உள்ளோம். அது, எந்த மாதிரியான கோரிக்கை என்பதை தற்போது தெரிவிக்க முடியாது. இவ்வாறு, அவர் கூறினார்.
தேர்தல் தோல்வியால் கதறி அழுத கெஜ்ரிவால்
புதுடில்லி: ஆம் ஆத்மி கட்சி அமைப்பாளர் அசுதோஷ் எழுதியுள்ள நூலில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த, 2014ல், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம், பிரசாந்த் பூஷன் இல்லத்தில் நடந்தது. அதில், லோக்சபா தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, கெஜ்ரிவால், ஜனநாயக முறையில் நடக்காமல், சர்வாதிகாரமாக நடந்து கொள்வதாக, யோகேந்திர யாதவ் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதனால், மனம் உடைந்த அரவிந்த் கெஜ்ரிவால், திடீரென்று தரையில் உட்கார்ந்து, தேம்பித் தேம்பி அழத் தொடங்கி விட்டார். அந்த சமயத்தில், எங்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
நிர்பயா ஆவணப்படம் தடை செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு
புதுடில்லி: நிர்பயா ஆவணப்படம் ஒளிபரப்ப தடை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லி ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. விபோர் ஆனந்த் என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில், இந்த ஆவணப்படத்தில் சர்ச்சைக்குரிய வகையில் எதுவும் இல்லை என கூறியுள்ளார்.
புதிய கண்டுபிடிப்புகள் அவசியம்: ஜனாதிபதி வலியுறுத்தல்
புதுடில்லி: ராஷ்டிரபதி பவனில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, இன்றைய இளைஞர்கள், ஏழ்மையை போக்கவும், வேலைவாய்ப்புக்களை உருவாக்கவும், சமுதாயத்தை மகிழ்ச்சியாக வைப்பதற்கு தேவையான வழிமுறைகளை கண்டுபிடிக்க வேண்டும். கண்டுபிடிப்புகளின் முன்னோடி நாடாக இருப்பதில், இந்தியாவுக்கு அனைத்து தகுதிகளும் உண்டு. நாட்டின் வளர்ச்சிக்கும், வளமைக்கும் புதிய கண்டுபிடிப்புகள் மிகவும் அவசியம். இந்தியாவுக்கு அறிவு சார்ந்த நீண்ட பாரம்பரியம் உண்டு. நமது அறிவுசார் அமைப்பு ஆராய்ச்சிக்கு வழிவகுக்கக்கூடியது. நாட்டின் அறிவுசார் களஞ்சியத்தை தொகுத்து பாதூக்க வேண்டியது அவசியம் என கூறினார்.
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.