குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 18 ம் திகதி வியாழக் கிழமை .

07.03.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

பிரதமர் மோடியின் பயண விவரம்

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி வரும் 10-ம் தேதி முதல் மூன்று நாடுகளுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொள்கிறார்.இதற்கான பயண திட்டம் இன்று வெளியிடப்பட்டது.

இது தொடர்பாக மத்திய வெளியறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமர் நரேந்திர மோடி வரும் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை மூன்று நாடுகளுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொள்கிறார்.

பயண விவரம்:

மார்ச் 11-ம் தேதி செஷல்ஸ் தீவு நாட்டிற்கு சென்று அந்நாட்டு அதிபர் ஜேம்ஸ் அலெக்ஸ் மிகேலை சந்தித்து இருநாட்டு ஒத்துழைப்புகுறித்து பேசுகிறார்.

மார்ச் 12-ம் தேதி மொரீஷியஸ் செல்கிறார் அங்கு அந்நாட்டு பிரதமர் அனிருத் ஜெகநாத்தை சந்தித்து பேச உள்ளார். பின்னர் அந்நாட்டு தேசிய தினத்தையொட்டி நடக்க உள்ள விழாவில் சிறப்பு விருந்தினராக பஙகேற்கிறார்.

மார்ச் 13 மற்றும் 14-ம் தேதிகளில் இலங்கை சென்று அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா உள்ளிட்ட அரசியல் தலைவர்களை சந்தித்து பேசுகிறார். இவ்வாறு மத்திய வெளியுறவுதுறை வெளியிட்டுள்ள பயண திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

விரைவில் அமெரிக்காவிலும் நிர்பயா படம்

டில்லி : சர்ச்சைக்குரிய நிர்பயா ஆவணப்படத்தை பிபிசி நிறுவனம் வெளியிட்டதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனையடுத்து நிர்பயா ஆவண படத்தை வெளியிடுவதற்கு சுப்ரீம் கோர்ட்டும், மத்திய அரசும் தடை விதித்தன. இருப்பினும் இந்த எதிர்ப்பையும் மீறி இங்கிலாந்தில் அப்படத்தை பிபிசி நிறுவனம் சமீபத்தில் ஒளிபரப்பியது. தற்போது வரும் 9ம் தேதி அமெரிக்காவிலும் ஒளிபரப்ப உள்ளதாக பிபிசி அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

கூடங்குளத்தில் தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம்

சென்னை : சென்னையில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், கூடங்குளம் 2வது அணுஉலையில் தயாரிக்கப்படும் மின்சாரத்தில் தமிழகத்திற்கு கூடுதலாக 100 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

 

அதிமுக பேரணியில் மோதல்

கோவை : கோவையில் முன்னாள் மேயர் வேலுச்சாமி தலைமையில் ஒரு அணியாகவும், தற்போதைய மேயரும் மாவட்ட செயலாளருமான ராஜ்குமார் தலைமையில் ஒரு அணியாகவும் அதிமுக.,வின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் எழுச்சி பேரணி நடைபெற்றது. அப்போது முன்னாள் மேயர் வேலுச்சாமி அணியினர் வந்த பாதையில் அதிமுக நிர்வாகிகள் பலர் குறுக்கிட்டுள்ளனர். அவர்களை வேலுச்சாமி அடித்து தள்ளி விட்டு, வழிவிட சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பதற்றம் காணப்படுகிறது.

 

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே-சுஷ்மா சந்திப்பு

கொழும்பு: இலங்கை சென்றிருந்த இந்திய வெளியறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயை சந்தித்து பேசினார். அப்போது தமிழக மீனர்கள் பிரச்னை குறித்து ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்வோம்என ரணில் கூறியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து ரணிலிடம் சுஷ்மா விவாதிப்பாரா என்பது தெரியவில்லை.

 

உலக மகளிர் தினம்: தமிழக தலைவர்கள் வாழ்த்து

சென்னை: உலக மகளிர் தினத்தையொட்டி தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்து விவரம்:

மகளிர் உரிமைக்காகவும் மேம்பாட்டிற்காகவும் சிந்திக்க வேண்டும்: இளங்கோவன் , தமிழக காங். தலைவர்.

மகளிருக்கு சமத்துவமும், சம உரிமையும் கிடைக்க வேண்டும். ராமதாஸ்., நிறுவனர் பா.ம.க.

 

ரூ.77,000 கோடிக்கு ஸ்பெக்ட்ரம் ஏலம்

புதுடில்லி : கடந்த 3 நாட்களாக நடத்த ஸ்பெக்ட்ரம் ஏலம் முடிவடைந்துள்ளது. இதில் மொத்தம் ரூ.77,000 கோடிக்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளது.

 

அதிமுக நாடகம் ஆடுகிறது:ஸ்டாலின்

கோவை : கோவையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கலந்து கொண்ட திமுக பொருளாளர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கட்சி பதவியில் இருந்து மட்டும் நீக்கி அதிமுக நாடகம் ஆடுகிறது. நேர்மையானவர்களானால் அவரை அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்கலாமே. அதிமுக.,ஆட்சியில் அதிகாரிகள் தாக்கப்படுவது வழக்கமான விஷயமாகி விட்டது. முன்னர், அதிமுக ஆட்சியின் போது ஐ.ஏ.எஸ்., அதிகாரி சந்திரலேகா மீது ஆசிட் வீசப்பட்டது. இப்போது வேளாண் அதிகாரி தற்கொலைக்கு தூண்டப்பட்டுள்ளார் என்றார். மத்திய பட்ஜெட்டில் மகளிர் நலனுக்காக கூடுதல் நிதி ஒதுக்கி உள்ளது குறித்து கேட்டதற்கு, ஒவ்வொரு முறையும் புதிய அரசு பதவியேற்றதும் கொண்டு வரப்படும் அறிவிப்பு தான். இவை வெறும் அறிவிப்புக்கள் மட்டுமே நடைமுறைக்கு வராது எனக் கூறினார். ஜெ., சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீடு மனு மீதான தீர்ப்பு வர உள்ளது குறித்த கேட்டதற்கு, தீர்ப்பு வரட்டும் பார்க்கலாம் என தெரிவித்தார்.

 

இலங்கை வெளியுறவு அமைச்சருடன் சுஷ்மா சந்திப்பு

கொழும்பு: இலங்கை சென்றிருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீராவை சந்தித்து பேசினார். சுஷ்மா உடன் இலங்கை -இந்திய பிரதிநிதிகள் குழுவினரும் சந்தித்து பேசினர்.

 

ஓசூரில் மேகதாது முற்றுகையிடும் போராட்டம்

ஓசூர் : ஓசூர் அருகே உள்ள தேங்கனிக்கோட்டை பகுதியில் காவிரி உரிமை மீட்புக் குழு, ஐ.ஜே.கே., உள்ளிட்ட 15 அமைப்புக்களைச் சேர்ந்த சுமார் 2000க்கும் மேற்பட்டோர் மேகதாது பகுதியை முற்றுகையிட பேரணியாக புறப்பட்டனர். கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்து இந்த போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்ததால், அப்பகுதியில் பதற்றம் காணப்படுகிறது. அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த போராட்டம் தொடர்பாக காவிரி உரிமை மீட்புக் குழுவின் தலைவர் மணிஅரசன் கூறுகையில், கர்நாடக அரசு சட்ட விரோதமாக காவிரியின் குறுக்கே அணைக்கட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறது. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது, கர்நாடக அமைச்சர் ஜெயச்சந்திரா காவிரியின் குறுக்கே உறுதியாக அணை கட்டுவோம் என கூறி உள்ள செய்தி அனைத்து பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகளும் எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை. காவிரியின் குறுக்கே அணை கட்டினால் தமிழகத்திற்கு உபரிநீர் வருவது தடைபடும். மேட்டூர் அணையின் நீர்வளமும் பாதிக்கப்படும். உயிரைக் கொடுத்தாவது கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுப்போம். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அனைத்துக் கட்சி குழு கூட்டி முடிவு எடுக்க வேண்டும். பிரதமரிடம் மனு அளிக்க வேண்டும். அரசியல் அழுத்தம் தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

கேரள சபாநாயகர் கார்த்திகேயன் மரணம்

திருவனந்தபுரம்: கேரளாவில் முதல்வர் உம்மன் சாண்டி தலைமையில் காங். கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபை சபாநாயகர் ஜி. கார்த்திகேயன். புற்றுநோய் காரணமாக கடந்த மாதம் 19-ம் தேதி பெங்களூரூ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். கார்த்திகேயன் மறைவுக்கு முதல்வர் சாண்டி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

மோடி எச்சரிக்க வேண்டும்:திமுக

சென்னை : இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த திமுகவின் டி.கே.எஸ்., இளங்கோவன், இலங்கை செல்லும் பிரதமர் மோடி இது குறித்து ஆலோசிக்க வேண்டும். அவர்களை கடுமையாக எச்சரித்தால் தான் இது போன்ற கடுமையான கருத்துக்களை அவர்கள் இனி பேச மாட்டார்கள். இந்திய மீனவர்கள் இத்தாலி மாலுமிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்திலும் தனி விசாரணை நடத்த வேண்டும் என திமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

 

பிரதமருக்கு மணிஷ் திவாரி கேள்வி

புதுடில்லி : இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இந்திய மீனவர்கள் குறித்து தெரிவித்து பேசியது தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மணிஷ் திவாரி, இலங்கை கூட நம்மை எச்சரிக்க துவங்கி விட்டது. இது எந்த விதமான நல்ல காலம் என கேள்வி எழுப்பி உள்ளார்.

 

கற்பழிப்பு குற்றவாளி கொலை: இரு மாநிலங்களில் பதற்றம்

கோஹிமா: நாகாலாந்தின் திமாபூரில் நாகா இன பழங்குடி பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியை சிறையில் இருந்து வௌியே இழுத்து வந்து பொதுமக்கள் அடித்து கொன்றனர். இதனால் மாநிலம் முழுவதும் பதற்றம நிலவுகிறது. இசம்பவத்தினைஅடுத்து மாநில எஸ்.பி. மற்றும் திமாபுர் கலெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில் இச்சம்பவம் எதிரொலியாக பக்கத்து மாநிலமான அசாமிலும் வன்முறை வெடித்துள்ளது. பாதுகாப்பிற்காக போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

 

அதிகாரி தற்கொலை: சி.பி.ஐ. விசாரணைக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை:சென்னை விமான நிலையத்தில் தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் அளித்த பேட்டி, வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். சுதந்திரமான விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளிவரும் என்றார்.

 

மீடியாக்கள் மீது சர்மா குற்றச்சாட்டு

புதுடில்லி : நிர்பயா வழக்கு குற்றவாளி முகேஷ் சிங்கிற்கு ஆதரவாக ஆஜரான வழக்கறிஞர்கள் சர்மா மற்றும் ஏ.பி.சிங் ஆகியோருக்கு பார்கவுன்சில் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது தொடர்பாக சர்மா அளித்த பேட்டியில், அப்படி எந்த நோட்டீசையும் நான் பெறவில்லை. மீடியாக்கள் தான் இந்த விஷயத்தில் எனக்கு நோட்டீஸ் அனுப்ப பார்கவுன்சிலை வலியுறுத்தி வருகின்றன என தெரிவித்துள்ளார்.

 

ராகுல் மீது நம்பிக்கை இல்லை

புதுடில்லி : ராகுலிடம் காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ஒப்படைக்க அக்கட்சி தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக கட்சி தொண்டர்கள் தங்களின் கருத்தை தெரிவிக்கலாம் என கட்சி தலைமை கேட்டிருந்தது. அதில் பெரும்பாலானவர்கள் சோனியாவே கட்சி தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். மேலும் ராகுல் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என தங்களின் கடிதத்தில் வெளிப்படுத்தி உள்ளனர்.

 

இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்

சென்னை:தமிழக அமைச்சரவைக் கூட்டம், இன்று (மார்ச் 7) நடைபெற உள்ளது. தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர், விரைவில் நடைபெற உள்ளது. இதுகுறித்து ஆலோசிப்பதற்காக இன்று மாலை, 3:00 மணிக்கு, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், கூட்டம் நடைபெற உள்ளது.

 

எல்லைப்பிரச்னை: குழு மாற்றியமைப்பு

மும்பை: கர்நாடக மாநிலத்துடனான எல்லைப் பிரச்னையை தீர்க்க அமைக்கப்பட்ட குழு மாற்றி யமைக்க மகாராஷ்டிரா அரசு முடிவெடுத்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் பெல்காம் உள்பட சில பகுதிகளுக்கு மகாராஷ்டிரா அரசு உரிமம் கொண்டாடி வருகிறது. இது குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. இந் நிலையில் எல்லைப்பிரச்னையை தீர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குழு மாற்றியமைக்கப் பட்டுள்ளது. இதன்படி புதிய குழுவின் தலைவராக மகாராஷ்டிரா முதல்வரும், குழு உறுப்பினர்களாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மாநில சட்டசபை எதிர்கட்சி தலைவர் , பாஜக, சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்கள் இடம் பெறுவர் என தெரிவித்துள்ளது.

 

உக்ரைனுக்கு ஆயுதம் : ஒபாமாவிற்கு கோரிக்கை

வாஷிங்டன்: ரஷ்ய ஆதரவு கிளர்ச்சி படையினருடன் சண்டையிட்டு வரும் உக்ரைன் அரசு தரப்பு படையினருக்கு ஆயுதம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க பார்லி., உறுப்பினர்கள் அதிபர் ஒபாமாவிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் சென்ட் சபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். அதில் உக்ரைன் விவகாரத்தி்ல் ஐரோப்பிய யூனியன் நாடுகள் முடிவெடுக்காத நிலையில் உள்ளன. அதிபர் ஒபாமா விரைந்து முடிவெடுத்து முன்னுதாரணமாக விளங்க வேண்டும் எனவும், உக்ரைன் விவகாரத்தி்ல் ரஷ்யா சர்வதேச விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருவதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டு்ள்ளனர்.

 

நீக்கியவர்கள் நீக்கப்படுவார்கள்: கார்த்தி சிதம்பரம் 'கடுகடு'

கோவை:''சிதம்பரம் ஆதரவாளர்களைக் கட்சியை விட்டு நீக்கியவர்கள், விரைவில் கட்சியை விட்டு நீக்கப்படுவார்கள்,'' என்று, கார்த்தி சிதம்பரம் கூறினார்.

கோவைக்கு நேற்று வந்த அவர், நிருபர்களிடம் கூறியதாவது:சிதம்பரம் ஆதரவாளர்களான கோவை செல்வம் உள்ளிட்ட ஆறு பேரை கட்சியை விட்டு நீக்கியது, ஏற்றுக்கொள்ளவே முடியாத விஷயம்.இந்த விஷயத்தை, கட்சியின் தேசியத் தலைமைக்கு எடுத்துச் சென்றிருக்கிறோம். விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.அதே நேரத்தில், அதிகார வரம்பை மீறி, செயல்பட்டு, இவர்களைக் கட்சியிலிருந்து நீக்கியவர்கள், கட்சியிலிருந்து நீக்கப்படுவர். இவ்வாறு கார்த்தி சிதம்பரம் கூறினார்.

 

பேட்டி எடுத்த பெண் நிருபர் தப்பியோட்டம்

டில்லியில், 2012 டிசம்பரில், ஓடும் பஸ்சில், 23 வயது மருத்துவ மாணவியை, ஆறு பேர் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகேஷ் சிங்கின் பேட்டி விவரங்கள், இந்த வார துவக்கத்தில், ஊடகங்களில் வெளியாகின.அதையடுத்து, யார் அந்த பேட்டியை எடுத்தது... பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம் உள்ள, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முகேஷ் சிங்கிற்கு, யார் அனுமதி அளித்தது... என்பன போன்ற கேள்விகள் எழுந்தன.இந்த விவகாரம், பார்லிமென்டிலும் பலத்த விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. 'டிவி'க்களில், இது குறித்து, காரசாரமாக பதிலளித்த, சிறைக்குள் சென்று பேட்டி எடுத்த பெண் நிருபர் லெஸ்லி உட்வின், தன் செயலை நியாயப்படுத்தினார்.

இந்நிலையில், இந்தியாவில், பி.பி.சி., 'டிவி'யில் அந்த பேட்டி அடங்கிய, டாக்குமென்டரி படத்தை ஒளிபரப்ப மாட்டோம் என, உறுதியளித்த, பி.பி.சி.,

நிறுவனம், பிரிட்டன் மற்றும் பிற நாடுகளில் ஒளிபரப்பி விட்டது.

 

நடவடிக்கை:அந்த காட்சிகள், இணையதளங்களில் வெளியாகி, லட்சக்கணக்கானோர், அதை, 'டவுன்லோடு' செய்துள்ளனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த மத்திய அரசு, பேட்டி எடுப்பதற்காக தவறான தகவல்களை கூறிய, உண்மை நோக்கத்தை மறைத்த, பெண் நிருபர் லெஸ்லி உட்வின் மீது, நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது.இந்நிலையில், கடந்த பல நாட்களாக டில்லியில் இருந்த அவர், நேற்று முன்தினம் இரவில், சொல்லாமல், கொள்ளாமல், லண்டன் புறப்பட்டு சென்று விட்டார்.

 

ராஜ்யசபாவில் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படவுள்ள முக்கிய மசோதாக்கள் எவை?

ராஜ்யசபாவில் அடுத்த வாரம் தாக்கலாகும் மசோதாக்கள்

* இன்சூரன்ஸ் மசோதா

*நிலக்கரி சுரங்க மசோதா

* நிலம் கையகப்படுத்தும் மசோதா

* குடியுரிமை மசோதா

*மோட்டார் வாகனங்கள் மசோதா

 

முக்கிய மசோதாக்கள் குறித்து இரவு, பகலாக பா.ஜ., ஆலோசனை

எதிர்க்கட்சிகளின் பிடிவாத போக்கால், நிலக்கரி சுரங்கங்கள் ஏலம், இன்சூரன்ஸ் துறையில், 49 சதவீத நேரடி அன்னிய முதலீடு, நிலம் கையகப்படுத்தும் மசோதா போன்ற முக்கிய மசோதாக்களும் முடங்கும் நிலை ஏற்படும் என்பதை தெள்ளத்தெளிவாக அறிந்துள்ள பா.ஜ., தரப்பினர், கடந்த சில நாட்களாக இரவு பகலாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அதில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள்:

*எதிர்க்கட்சிகள் வழிக்கு வரவில்லை என்றால், பார்லிமென்டின் கூட்டுக் கூட்டத்தை கூட்டி,

மசோதாக்களை நிறைவேற்ற வேண்டும்.

*காங்கிரஸ் தவிர்த்து, பிற கட்சிகளுடன் சமரசமாக செல்லலாம்.

*குறிப்பாக, அ.தி.மு.க., சமாஜ்வாதி, பிஜு ஜனதா தளம் போன்ற கட்சிகளின் ஆதரவை பெற

முயற்சிக்கலாம்.

* பொதுக்கூட்டத்தில் பேசுவது போல, எதிர்க்கட்சிகளை தாழ்த்தி பேசாமல், 'தாஜா' செய்யும் விதத்தில், மசோதாக்கள் அறிமுகத்தின் போது, பிரதமர் மோடி பேச வேண்டும்.

* மசோதாக்கள் ஓட்டெடுப்புக்கு விடப்பட நேர்ந்தால், பா.ஜ., - எம்.பி.,க்கள் மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.,க்கள், தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

* எதிர்க்கட்சிகளின் செயலை, மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும்.

எதிர்க்கட்சிகளின் வியூகம்:

பொதுமக்களின் எதிர்ப்பை சம்பாதிக்காமல் இருக்க வசதியாக, 'அறிமுகப்படுத்தப்பட உள்ள மசோதாக்கள் போன்ற மசோதாக்கள், ஏற்கனவே ராஜ்யசபாவில் முடங்கியுள்ளன. அத்தகைய சூழ்நிலையில், அவை போன்ற மசோதாக்களை தாக்கல் செய்வதை விரும்பவில்லை' என, தெரிவிக்க முடிவு செய்து உள்ளன.

*அந்த மசோதாக்களில் திருத்தம் செய்ய வேண்டும் என கூறி, அவற்றை நிலைக்குழுவின் பரிந்துரைக்கு அனுப்பி, மசோதாக்களை முடக்கி, அவசர சட்டங்களை காலாவதியாக்க வேண்டும்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.