குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கிளிநொச்சியில் 65 ஆயிரம் பேர் வாக்களிக்கத் தகுதி!

15.07.2011.த.ஆ-2042--   வடக்கே விடுதலைப்புலிகளின் அரசியல் தலைநகரமாகத் திகழ்ந்த கிளிநொச்சி மாவட்டத்தில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் மக்கள் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெறவிருக்கின்றன. இந்த சனநாயக சந்தர்ப்பம் குறித்து கிளிநொச்சி மக்கள் அதிகம் அக்கறை கொள்ளாதவர்களாகவே காணப்படுகின்றார்கள் என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பிரதேச சபைகளுக்கான தேர்தல் நடைபெறவிருக்கின்றது.

 இந்தத் தேர்தலில் 65 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றிருப்பதாகக் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 இம்முறை தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் கிளிநொச்சி அரச செயலகத்தினால் கையாளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். போரினால் பாதிக்கப்பட்டு சகல ஆவணங்களையும் இழந்துள்ள இந்த மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான மக்கள், தேர்தலில் வாக்களிப்பதற்குத் தேசிய அடையாள அட்டைகளின்றி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

 இவ்வாறானவர்களுக்குத் தேர்தலின்போது பயன்படுத்துவதற்கு வசதியாகத் தற்காலிக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, யாழ்ப்பாணத்தைப் போன்று கிளிநொச்சியிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த வேட்பாளர்கள் நெருக்கடிகளுக்கு ஆளாகி வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. பல இடங்களில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் தடைகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தெரிவிக்கின்றனர்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.