குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 8 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

பத்திரிகா தர்மம்

15.07.2011கடந்த 29 ஆம் தேதியன்று புதுடில்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் ஒரு சில பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்து கலந் துரையாடினார்.  சென்னையைச் சேர்ந்த பத் திரிகை ஆசிரியர்கள் எவரும் இக்கலந்துரை யாடலுக்கு அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இந்தியத் தலைமைத் தணிக்கை அலு வலர், கணக்குத் தணிக்கை அறிக்கை பற்றி  பத்திரிகையாளர் கூட்டம் நடத்தியதை பிரதமர் மன்மோகன் சிங் கண்டித்திருந்ததைப் பற்றி 1-7-2011 நாளிட்ட இந்து ஆங்கில நாளி தழின் முதல் பக்கத்தில்   பி. முரளிதர் ரெட்டி யின் செய்திக்கட்டுரை ஒன்று வெளியிடப் பட்டுள்ளது. பத்திரிகையாளர் கூட்டம் நடத் துவதற்கு தலைமைத் தணிக்கை அலுவல ருக்கு உள்ள உரிமையை சென்னை உயர்நீதி மன்றம் 2004 ஆம் நடைபெற்ற W.P.23408 வழக்கில் உறுதி செய்து தீர்ப்பளித்து உள்ள தாக தெரிவித்துள்ளார். எனவே, தலைமைத் தணிக்கை அலுவலர் பத்திரிகையாளர் கூட் டம் நடத்தியதை பிரதமர் கண்டித்தது சரியல்ல என்று கட்டுரையாசிரியர் கருதுகிறார். தணிக்கை அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்படும் முன்னர் ஊடகங்களுக்கும், பத்திரிகைகளக்கும்  கசிந்தது எப்படி என்பது பற்றி எவரும் கவலைப்படவில்லை. அதற்கு யார் பொறுப்பு?   நாடாளுமன்றம் இந்த விவகா ரத்தை எடுத்துக் கொள்ளும்  முன்னதாகவே ஊடகங்கள்  அது பற்றி  தங்கள் மனம் போன போக்கில் செய்திகளை வெளியிடத் தொடங்கி விட்டன. தலைமைத் தணிக்கை அலுவலர் அரசின் கொள்கை முடிவுகளைப் பற்றி கேள்வி கேட்க முடியாது என்று பிரதமர் கூறியதைப் பற்றி கட்டுரையாளர் கருத்து எதுவும் தெரிவிக் காமல் மவுனம் சாதிக்கிறார். 2ஜி பற்றிய தணிக்கை அறிக்கை தணிக்கை அலுவ லரின் அதிகார வரம்பைத் தாண்டியது அல்ல என்று தலைமைத் தணிக்கை அதிகாரி முன் னர் கூறியதை மட்டுமே நினைவுபடுத்துவ துடன் நிறுத்திக் கொள்கிறார்.

அரசின் கொள்கை முடிவுகள் பற்றி கேள்வி கேட்கும் அதிகாரம் படைத்தவை நாடாளு மன்றமும், சட்ட மன்றங்களும் தான்.

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஏல முறையில் விற்பனை செய்யாமல், உரிமம் மூலம் வழங்குவது, முதலில் விண்ணப்பிப்பவர் களுக்கு முன்னுரிமை அளிப்பது  என்ற மத்திய அமைச்சரவையின் கொள்கை முடிவு கடந்த பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசினால் 1999 இல் மேற்கொள்ளப் பட்டதாகும். இந்த முடிவுதான் தே.ஜ.கூ. அரசின் காலத்திலும், காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முதல் அய்ந்தாண்டு கால ஆட்சியிலும், அதனைத் தொடர்ந்து இரண்டாவது ஆட்சியிலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

அதுவரை வழங்கப்படாமல் இருந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை உரிமங்கள் மத்திய அமைச்சர் ஏ. இராசா காலத்தில் ஏராளமாகவும், தாராளமாகவும் வழங்கப் பட்டன. அதனால் நிறுவனங்களிடையே ஏற்பட்ட போட்டியின்  காரணமாகத்தான், கைபேசி இணைப்புகளின் எண்ணிக்கை 30 கோடியிலிருந்து 72 கோடிக்கு உயர்ந்தன என்பதையோ,  கைபேசி அழைப்புக் கட்ட ணங்கள் கணிசமாகக் குறைந்து போனது என்பதையோ எவராவது மறுக்க முடியுமா?

2000-2001 ஆம் ஆண்டிலிருந்து 2008-09 ஆம் ஆண்டுவரை  2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு ஏல முறையில் விற்கப்படாததைப் பற்றி இந்தியத் தலைமைத் தணிக்கை அலுவலர்  எந்த ஆட்சேபணையும் எழுப்பவில்லை. ஆனால் 2009-10 ஆம் ஆண்டின் தணிக்கை அறிக் கையில் மட்டும் இப்பிரச்சினையை எழுப்பி யுள்ளார். அது ஒரு புறமிருக்க, 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட்ட தொகையை அடிப்படையாக வைத்துக் கொண்டு 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலம் விடப்பட்டிருந்தால் அரசுக்கு என்ன வருவாய் கிடைத்திருக்கும் என்று அவர் ஒரு குருட்டுக் கணக்குப் போட்டிருக்கிறார். 2ஜி ஸ்பெக்ட்ரம் அலை வரிசையும், 3ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையும்  ஒன்றல்ல என்பது அனைவரும் அறிந்ததே.  இவ்வாறு கணக்கிட்டு 1.76 லட்சம் கோடி ரூபாய் அரசுக்குக் கிடைத்திருக்கும் என தணிக்கை அலுவலர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் வருவாயில் பங்கு அளிக்கும் திட்டத்தின் (Profit Sharing Method)   கீழ் இவ்வாறு உரிமம் அளிக்கப்பட்ட நிறுவனங் களின் மூலம் ஆண்டு தோறும் அரசுக்குக் கிடைத்து வந்த வருவாய் என்ன என்பதை அவர் கணக்கிட்டுக் காட்டியுள்ளாரா? இதன் மூலம் இதுவரை ஆண்டு தோறும் அரசுக்குக் கிடைத்துள்ள வருவாய் என்ன, இனி வரும் ஆண்டுகளில் கிடைக்க இருக்கும் வருவாய் என்ன என்பதைக் கணக்கிட்டுக் காட்டி யுள்ளாரா? அரசின் கொள்கை முடிவுகளை நடை முறைப்படுத்துவதில் பிறழ்தல் ஏற்பட்டிருந் தாலோ, தவறுகள் நேர்ந் திருந்தாலோ, அவற்றால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருந் தாலோ அதனைத் தலைமைத் தணிக்கை அலுவலர் சுட்டிக்காட்டுவது தவறானதல்ல. ஆனால், இப்படி செய்திருந் தால் அரசுக்கு இவ்வளவு வருவாய் கிடைத்திருக்கும், இப்படி செய்யாததால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறியிருப் பதுதான் சரியானது அல்ல.

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஏலம் விடுவதில்லை என்பது அரசு மேற் கொண்ட கொள்கை முடிவு. எனவே அந்தக் கொள்கை முடிவைப் பற்றி கேள்வி கேட்க தணிக்கை அலுவல ருக்கு அதிகாரம் இல்லை என்பதுதான் பிரதமரின் கருத்து.

பிரதமர் மன்மோகன்சிங் தனது ஏழாண்டு பதவிக் காலத்தில் இரண்டு பத்திரிகையாளர் சந்திப்புகளையும், பத்திரிகை ஆசிரியர்களுடன் இரண்டு கலந் துரையாடல்களையும் மட்டுமே மேற் கொண்டுள்ளார் என்று இந்து தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது. ஒரே ஒரு முறைதான் இந்திய நாளிதழுக்கு பேட்டி அளித்து அதன் கேள்விகளுக்கு பிரதமர் பதில் அளித்தார் என்று குறிப்பிட்டுள்ளது.

பத்திரிகையாளர்களை சந்திப்பதற்கோ, பேட்டி அளிப்பதற்கோ பிரதமர் அஞ்சுவது போன்ற தோற்றத்தை இது தருகிறது. பிரதமர் பத்திரிகையாளர்களை அடிக்கடி சந்திக்க வேண்டும் என்று இதற்கு முன் எவராவது  அவரிடம் கேட்டிருக்கின்றனரா? தங்களது துறைகளில் நிலவும் பிரச்சினை கள் பற்றி ஒவ்வொரு அமைச்சரும் தனித் தனியாக பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேட்டிகள் அளித்துக் கொண்டு இருக்கும் நிலையில், தேசிய முக்கியத்துவம்  வாய்ந்த பிரச்சினைகள் எழும்போது பிரதமர்  பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசவே செய்கிறார்.

நிச்சயமற்ற சூழ்நிலையின் கீழ் அரசு எடுக்கும் முடிவுகளைக் குறை கூறிக் கொண்டே இருப்பது அரசை செயலிழக்கச் செய்வதுடன், தொழில் முனைவோரின் ஆர்வத்தைக் குலைத்துவிடும் என்று பிரதமர் கூறியதை வைத்து, நடந்து போன ஊழல்களை மறைக்கவே அவர் இவ்வாறு கூறுவதாக நினைப்பது ஏற்புடையதல்ல. முடிவுகள் எடுப்பதற்கு முன்னர் நிலவும் சூழ்நிலைகள், தெரிந்துள்ள உண்மைகளில் இருந்து, முடிவுகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் ஆய்வு செய்யும்போது நிலவும் சூழல், தெரிய வரும் உண்மைகள்  முற்றிலும் மாறுபட்டவை என்றுதான் பிரதமர் குறிப்பிட்டார்.

ஊழல்கள், தவறுகள் நடந்திருந்தால் அதனைச் செய்தவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவதில் எவருக்கும் எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால்  அண்மைக்காலமாக நாட்டில் என்ன நடந்து வருகிறது? லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்று அன்னாஹசாரே பட்டினிப் போராட்டம்  நடத்தினார்.  வரைவு மசோதாவைத் தயாரிக் கும் குழுவில் அவருக்கும் அவர் சுட்டிக் காட்டிய நால்வருக்கும் இடம் அளிக்கப் பட்டது. ஆனால், வரைவு மசோதா தயாரிப் பதில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.  தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தின்  சட்டம் இயற்றும் அதிகாரத்தைத் தனிப்பட்ட நபர்களுக்கு எவ்வாறு அளிக்க முடியும்? மறுபடியும் தான் பட்டினிப் போராட்டம் நடத்துவதாக ஹசாரே அறிவித்துள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசை பிளாக் மெயில் செய்வதுதான் காந்திய வழிமுறையா?

மற்றொரு பக்கம் பாபாராம்தேவ் டில்லியில் ஒரு பெரும் கூட்டத்தைக் கூட்டி கருப்புப் பணத்தை வெளிக் கொண்டு வரப் போராட்டம் நடத்தினார். யோகா பயிற்சி முகாம் நடத்துவதாக அனுமதி பெற்று, அரசுக்கு எதிரான போராட்ட முகாமாக மாற்ற அவர் முயற்சி செய்தாரா இல்லையா? பாபாராம்தேவின் இந்த செயல்பாடுகளின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்.சின் பங்கு இருப்பதை எவரும் அறியமாட்டார்களா?

காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் ஆட்சியில் லஞ்சமும், ஊழலும் மலிந்துவிட்டது என்ற எண்ணத்தையும், வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களால் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை வெளிக் கொண்டுவர அரசு விரும்பவில்லை என்பது போன்ற தோற்றத் தையும் அன்னா ஹசாரே, பாபாராவ்தேவ் ஆகியோர் மூலம்  நாட்டில் உருவாக்கிட பா.ஜ.கட்சியும், ஆர்.எஸ்.எஸ்.சும் முயற்சி செய்து வருகின்றன. இதற்குப் பெரிய அளவில் விளம்பரம் அளித்து ஊடகங்களும், பத்திரிகைகளும் உதவி வருகின்றன. அதனால்தான், பத்திரிகைகளும் ஊட கங்களும் புகார் அளிப்பவர் களாகவும், குற்றம் சாற்றும் வழக்கறிஞர்களாகவும், நீதிபதிகளாவும் இருக்கக்கூடாது என்று பிரதமர் கூறியுள்ளார்.

நாட்டு நடப்புகளை உள்ளது உள்ளபடி, விருப்பு வெறுப்பு இன்றி மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் மாபெரும் கடமையும் பொறுப்பும் பத்திரிகைகளுக்கும் ஊடகங் களுக்கும் உள்ளது. துவேஷம், மாச்சர்யம், வெறுப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தனிப்பட்டவர்களாலும் கட்சியினராலும் மேற்கொள்ளப்படும் செயல்பாடுளுக்கும், வெளியிடப்படும் செய்திகளுக்கும் கண், காது, மூக்கு ஆகியவற்றை இணைத்து அலங்காரம் செய்து வெளியிடுவது பத் திரிகை தர்மம் அல்ல. எந்தப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளாமலும், எவருக்கும் பதில் கூறக் கடமைப்பட்டு இருக்காமலும், எவர் பற்றி வேண்டுமானாலும் என்ன வேண்டு மானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்று பத்திரிகையாளர்கள் நினைப்பது பத்திரிகா தர்மம் அல்ல.

- த.க.பாலகிருட்டினன்

அமர்நாத் குகை பனிலிங்கப் புரட்டு! 


கவுடில்யர் என்ற சாணக்கியப் பார்ப்பானிடம் கோணிப் புளுகன் கோயபல்ஸ் தோற்றுப் போகவேண்டும்.

அரசன் பொருள் ஈட்ட என்னென்ன பொய்களை, புனை சுருட்டுகளை அவிழ்த்துவிடலாம் என்ற ஒரு பெரிய பட்டியலையே கொடுத்த பார்ப்பான் அவன். அர்த்த சாஸ்திரம் எனும் நூலில் அவன் கொட்டிய அம்மணமான புரட்டுகள் இதோ:

அரசனது தோட்டத்தில் ஏதாவது ஒரு மரம் அகலமாகப் பூக்கவோ காய்க்கவோ செய்திருந்தால், அதில் கடவுள் தோன்றியிருக்கிறார் என்று பொது ஜனங்களிடையே காட்டி பிரசித்திப்படுத்த வேண்டும். அல்லது ஒரு கிணற்றில் அஞ்சு தலைகளுடைய பாம்பு ஒன்று இருப்பதாகச் சொல்லி, அதைப் பார்க்க வருவோரிடமிருந்து ஒற்றர்கள் மூலம் பணம் வசூலிக்கலாம்.

பாம்பொன்றை விக்கிரகத்தில் தொலையிட்டோ, அல்லது கோயில் இருட்டு மூலையிலோ அல்லது ஏதாவது ஒரு பொந்திலோ, பசியால் வாடிக் கிடக்கும்படி வைத்து ஜனங்களைப் பார்க்கச் சொல்லி பணம் வசூலிக்கலாம்.  இம்மாதிரி தந்திரங்களை எளிதில் நம்பாத ஜனங்களுக்கு மயக்க மருந்து கலந்த நீரைத் தீர்த்தம் என்றும், பிரசாதம் என்றும் சொல்லிக் குடிக்கும்படிச் செய்து,  அவர்கள் குடித்து மயங்கி விழவும், அதற்குக் காரணம் கடவுள் கோபம் என்று சொல்ல வேண்டியது; அல்லது தாழ்ந்த ஜாதியான் ஒருவனை பாம்பு கடிக்கும்படிச் செய்து, இம்மாதிரி துர்ச்சகுனம் நேரிடாது தடுக்கப் போவதாகப் பாசாங்கு செய்து ஒற்றர்கள் பணம் வசூலிக்கலாம் என்றெல்லாம் அர்த்த சாஸ்திரம் எனும் நூலில் சாணக்கிய பார்ப்பான் அவிழ்த்துக் கொட்டியுள்ளான்.  (மேலும் அரிய தகவல்களுக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் எழுதிய கோயில்கள் தோன்றியது ஏன்? என்ற நூலைப் படிக்கலாம்).

எந்தக் காலத்திலோ இது நடந்திருக்கலாம் - இப்பொழுது என்ன? என்று சில அதிகப் பிரசங்கிகள் வாயைத் திறக்கலாம்.

1970 ஆம் ஆண்டில் (9-9-1970) தமிழ்நாட்டின் தலை நகரமான சென்னையில் மிக முக்கியமான பகுதியான தியாகராயர்நகரில் சிவா விஷ்ணு ஆலயம் அருகில் திடீரென்று ஒரு திடீர் பிள்ளையார் என்று ஒரு கரடியை அவிழ்த்துவிட்டனர்.  பூமியைப் பொத்துக் கொண்டு கிளம்புவதாக புரூடா விட்டனர். உண்டியல் கொண்டு வந்து வைத்தனர். பண மழை கொட்டியது.

தந்தை பெரியார் அறிக்கை வெளியிட்டார். இதன் பித்தலாட்டத்தைக் கண்டுபிடிக்காவிட்டால், அந்தப் பகுதியில் பொதுக்கூட்டம் போட்டுப் பேசுவேன் என்றார்.
அப்பொழுது முதல் அமைச்சரான மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞர் அவர்கள் காவல் துறையை முடுக்கிவிட்டார்.

அந்தப் பகுதியைச் சேர்ந்த  கவுன்சிலர் கே.எம்.சுப்பிரமணியன் என்ற பார்ப்பனரின் தூண்டுதலால் போலீஸ் கான்ஸ்டேபிள் செல்வராஜ் என்பவர் ரூபாய் 71க்கு பிள்ளையாரை விலைக்கு வாங்கிப் பூமிக்குள் புதைத்து வைத்து இந்தப் பித்தலாட்டத்தைச் செய்தவர் என்ற குட்டு உடைபட்டது.

அவசர அவசரமாக காஞ்சி சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதி என்பார் என்ன கூறினார்? அது சுயம்புப் பிள்ளையார், தானாகத் தோன்றும் என்றாரே - ஒரு பித்தலாட்டத்துக்குக் காப்புக் கட்டுபவர்தான் அவாள் மொழியில் ஜெகத்குரு.
சரி. இந்தப் பிரச்சினை எல்லாம் இப்பொழுது எதற்கு? காரணம் இல்லாமலா?

அமர்நாத் பனிலிங்கம் என்ற ஒரு கதையைக் கட்டி விடுகிறார்களே. கடந்த ஒரு மாதமாக அதுபற்றிய தகவல்களை வண்ணம் வண்ணமாகக் குழைத்துச் செய்திகளை ரீல் ரீல்களாக வெளியிடுகிறார்களே, அதன் உண்மை என்ன? இது பற்றி அறிவியல் என்ன கூறுகிறது?

சுண்ணாம்புச் சாற்றின் கூட்டுப் பொருள்கள் கால்சியம் கார்பனேட் (CaCo2)   ஒரு பனிக்குகையில் தரையிலிருந்து ஒரு குறிப்பிட்ட தட்ப வெப்ப நிலையில் மேல்நோக்கி வளர்ந்து வரும் (அல்லது) வெளிப்பட்டு வரும் அமைப்புதான் இது. (Upward growth of Calcium Carbonate (CaCo2) formed from the floor of a cave.) இதுதான் அமர்நாத்தில் உருவாகும் பனிலிங்கம் என்பது. இதனை விஞ்ஞானத்தில் ஸ்டாலக் மைட் (ளுவயடயப ஆவைந) என்பார்கள்.

இதே கூட்டுப் பொருள் மேலிருந்து கீழ் நோக்கி வளரும் நிலைக்கு ஸ்டாலக் சைட் (Stalag Mite) என்று பெயர். (ஆதாரம் Dictionary of Science by E.B.Uvarov and Dr. Chapaman).

அமர்நாத்தில் காணப்படுவதாகக் கூறப்படும் பனிலிங்கக் கதை இதுதான்.

இந்த அறிவியல் நிகழ்வை மதச் சாந்தில் குழைத்து, அறிவியல் கண்டுபிடித்த அச்சு இயந்திரங்களைப் பயன் படுத்தி அச்சுப் போட்டு, பனிலிங்கம் என்ற பாவலா காட்டி மக்களின் மடமைப் பக்தியைச் சாதகமாக்கிக் கொண்டு பார்ப்பனியம் தங்கள் சுரண்டல் தொழிலுக்கு வழி வகுக்கிறது என்பதைச் சொல்வதற்கு இந்த நாட்டில் திராவிடர் கழகமும் விடுதலையும் தானே இருக்கிறது?

இதே அமர்நாத்தில் மாறுபட்ட தட்பவெப்ப நிலை காரணமாக பனிலிங்கம் உருவாகாமல் போனதும் உண்டு.

சில நேரங்களில் முன்பு எப்பொழுதாவது உருவான பனிலிங்கத்தைப் பிரசுரித்து, இந்த சீசனில் பனிலிங்கம் என்று பரப்புரை செய்வார்கள் - வியாபார நோக்கோடு!

இந்தப் பனிலிங்கத்தின் பக்கத்தில் சூடான ஒரு பொருளைக் கொண்டு சென்றால் உருகித் தண்ணீராகி விடுமே! இந்தப் பரீட்சைக்குப் பக்தர்கள் தயாரா?

மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையைத் தூண்டவேண்டும். இது ஒவ்வொருவரின் அடிப்படைக் கடமை என்கிறது இந்திய அரசமைப்புச் சட்டம். 51A(h) ஆனால் விஞ்ஞான சாதனங்களான ஏடுகளோ, தொலைக் காட்சிகளோ கூட இதனைச் செய்வதில்லை. மாறாக விஞ்ஞானத்தைப் பயன்படுத்தி அஞ்ஞான மூடத்தனங்களை அல்லவா பரப்புகிறார்கள்.

வெட்கம்! மகாவெட்கம்!!

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.