குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

05.03.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

சன் பார்மாவின் சங்வி இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்

மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக கடந்த 8 ஆண்டுகளாக இருந்து வந்த ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் இன் தலைவர் முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி விட்டு சன் பார்மாவின் திலிப் சங்வி, இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆகி விட்டார்.

சங்கிக்கு 1.39 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களும், முகேஷ் அம்பானிக்கு 1.38 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களும் இருப்பதாக சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

 

பதவி போனாலும் பணி தொடரும்:யாதவ்

புதுடில்லி: ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழுவில் இருந்து யோகோந்திர யாதவும், பூஷனும் நீக்கப்பட்டுள்ளனர். இது குறித்து யோகேந்திர யாதவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'என் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை அடிப்படையாக கொண்டு தொண்டர்கள் நம்பிக்கையை இழந்துவிடக்கூடாது,' என்றார். 'பதவி போய்விட்டது என்பதற்காக எனது பணி நிற்காது,' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

காங்.,கிற்கு புதிய செய்தி தொடர்பாளர்

புதுடில்லி: காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளாரக இருந்த அஜய்மக்கான், டில்லி காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, கட்சியின் புதிய செய்தி தொடர்பாளராக ரந்தீப் சர்ஜ்வாலாவை அக்கட்சி நியமித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

பி.பி.சி., மீது சட்டரீதியான நடவடிக்கை

புதுடில்லி: நிர்பயா ஆவணப் படத்தை ஔிபரப்பிய விஷயத்தில், பி.பி.சி., நிறுவனம் மீது இந்திய அரசின் சார்பில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறி உள்ளார். மேலும், இந்த ஆவண படத்தை ஔிபரப்ப வேண்டாம் என்று கூறியும், பி.பி.சி., நிறுவனம் அதை ஔிபரப்பியது வேதனையை தருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இலங்கை பார்லி.,யில் பேசுகிறார் மோடி

புதுடில்லி: இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள பிரதமர் நரேந்திரமோடி, அந்நாட்டு பார்லிமென்ட்டில் மார்ச் 13ம் தேதி உரையாற்ற உள்ளார். வௌியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா இலங்கை சென்று, மோடியின் பயணத்திட்டத்தை இறுதி செய்துள்ளார். மோடி பிரதமர் ஆன பின்னர் முதன் முதலாக இலங்கை செல்கிறார். மேலும், 1987ம் ஆண்டுக்கு பிறகு அங்கு செல்லும் இந்திய பிரதமர் மோடியே.

 

டில்லி 'மாடல்' நகரமாகும்:கெஜ்ரிவால்

பெங்களூரு: டில்லியை ஒரு முன்மாதிரி நகரமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார். பெங்களூருவில் சிகிச்சை பெறுவதற்கு வந்த அவர், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 'கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் நான் வேதனை அடைந்துள்ளேன். இனி எனது கவனமும் முழுவதும் டில்லியின் வளர்ச்சியில் தான் இருக்கும். டில்லியை ஒரு முன்மாதிரி நகரமாக மாற்றும் முயற்சியை மேற்கொண்டுள்ளோம்,' என்றார்.

 

தி.மு.க., செயற்குழு தீர்மானங்கள்

சென்னை: சென்னை அறிவாலயத்தில் தி.மு.க., செயற்குழு கூட்டம், தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்தது. இதில், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என மத்திய அரசை கோருதல்; கரும்பு, நெல்லுக்கு உரிய விலையை அளிக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துதல் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

என்ன செய்கிறார் கெஜ்ரிவால்?

பெங்களூரு: கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாகவே தொடர் இருமல் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு, அவஸ்த்தைப்பட்டு வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால். லோக்சபா தேர்தல் பிரசாரம் முடிந்த கையோடு, டில்லி தேர்தல் பிரசாரத்திலும் கெஜ்ரிவால் முழு அளவில் ஈடுபட்டார். இதனால், அவரின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, முதல்வர் பதவிக்கு 10 நாள் லீவு போட்டுவிட்டு, பெங்களூருவில் உள்ள 'நெஸ்ட்' என்ற மருத்துவ நிறுவனத்தில் சிகி்ச்சை பெறுவதற்காக தனது பெற்றோருடன் இன்று வந்து சேர்ந்தார். இந்நிறுவனத்தில் சிகிச்சை பெறுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதிக கட்டுப்பாட்டுடன் இருந்தால் மட்டுமே பயன்கிடைக்கும். அதிகாலை 5.30 மணிக்கு எழுந்துவிட வேண்டும். அப்போது இருந்து இரவு 7 மணி வரை தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும். யோகா, சிரிப்பு தெரப்பி, அக்குபஞ்சர், ஜிம், பிசியோதெரபி என பல வகை சிகிச்சைகள் உண்டு. இடையில் நான்கு மணி நேர ஓய்வு கொடுக்கப்படும். இரவு 7 மணிக்கு டின்னர், 9 மணிக்கு தூங்க போய்விட வேண்டும். முதல் ஒருவார காலத்திற்கு மூலிகை மற்றும் காய்கறிகள், பழச்சாறு, சிறிது அரிசி சோறு ஆகியவை அடங்கியதாக மெனு இருக்கும். வெளியுலகத்தில் இருந்து முற்றிலும் விடுபட்டு, கட்டுப்பாட்டுடன் இந்த மையத்தில் சிகி்ச்சை பெற வேண்டும். அரவிந்த் கெஜ்ரிவால், அடுத்த 10 நாட்களுக்கு இப்படி ஒரு சிகிச்சையை இன்று முதல் பெறப் போகிறார். விரைவில் குணமடைய வாழ்த்துவோம்...

 

அக்ரி கிருஷ்ணமூர்த்தி பதவி பறிப்பு

சென்னை: திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க, செயலாளராக அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி இருந்தார். தற்போது அவரது மாவட்ட செயலாளர் பதவியை கட்சி மேலிடம் பறித்துள்ளது. அமைச்சர் முக்கூர் சுப்ரமணியம் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பை கூடுதலாக வகிப்பார் என்று கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.

 

தி.மு.க., செயற்குழு கூட்டம்

சென்னை: தி.மு.க.,வின் செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தலைமையில், அறிவாலயத்தில் துவங்கியது. இதில், கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவி்ததுள்ளன. பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

 

சவுதாலாவுக்கு கருணை: கோர்ட் மறுப்பு

புதுடில்லி: அரியானா மாநிலத்தில் ஆசிரியர்கள் நியமனத்தில் பெருமளவில் ஊழல் நடந்துள்ளது. இது தொடர்பான வழக்கில், முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா மற்றும் அவரது மகன்களுக்கு நேரடி சம்பந்தம் உள்ளது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்கள் இருவருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, ஓம்பிரகாஷ் சவுதாலாவின் வயதையும், உடல் நலத்தையும் கருத்தில் கொண்டு, தண்டனை கால அளவை குறைக்க வேண்டும் என்று டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், 'இந்த வழக்கில் ஓம்பிரகாஷ் சவுதாலா முதல் குற்றவாளியாக உள்ளார். இந்நிலையில், அவர் மீது கருணை காட்டி, தண்டனையை குறைக்க முடியாது,' என்று தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து, ஓம்பிரகாஷ் சவுதாலா மற்றும் அவரது மகனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

நிர்பயாவின் தாய் விரக்தி பேச்சு

புதுடில்லி: இந்தியாவின் மகள் என்ற பெயரில், நிர்பயா கற்பழிப்பு சம்பவம் குறித்த டாக்குமென்ட்டரி படத்தை வௌியிட வேண்டாம் என்று இந்திய அரசு கேட்டுக் கொண்டதையும் மீறி, பி.பி.சி., நிறுவனம் ஔிபரப்பி உள்ளது. இது குறித்து நிர்பயாவின் தாயிடம் கேட்டபோது, 'எனது மகளே இறந்துவிட்டாள். இனி அந்த படத்தை ஔிபரப்பினால் என்ன, ஔிபரப்பாவிட்டால் என்ன? ஒன்றும் ஆகப்போவதில்லை, ' என்று விரக்தியாக பதில் அளித்தார்.

 

நேரடிமானிய திட்டத்தில் 11.7 கோடி பேர்

புதுடில்லி : மத்தியஅரசின் சமையல் சிலிண்டருக்கான நேரடி மானிய திட்டத்தின் கீழ் 81 சதவீதம் பேர் பயனடைந்து வருவதாக எண்ணெய் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மொத்தம் 11.7 கோடி குடும்பத்தினர் நேரடி மானிய திட்டத்தின் கீழ் பயனடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, எண்ணெய்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஜனவரி மாதத்தில் கூறுகையில் பிப்ரவரி இறுதிக்குள் 80 சதவீதம் பேரை இத்திட்டத்தின் கீழ் கொண்டு வர இலக்கு நிர்ணயித்திருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் அரசின் இலக்கை விடவும் கூடுதலான பேர் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர்.

 

வாழ்வதற்கு சிறந்த நகரம் ஐதராபாத்

ஐதராபாத் : வாழ்வதற்கு சிறந்த இந்திய நகரம் ஐதராபாத் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள சிறந்த நகரங்களில் மெர்செர் நிறுவனம் நடத்திய இந்த ஆய்வை நடத்தி உள்ளது. இந்த பட்டியலில் ஐதராபாத் 138வது இடத்தில் உள்ளது. 146வது இடத்தில் பெங்களூருவும், சென்னை 151 வது இடத்திலும், மும்பை 152வது இடத்திலும், டில்லி 154வது இடத்திலும் உள்ளன. வாழ்க்கை தரம், சுற்றுசூழல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

 

ஜெ., மீண்டும் முதல்வராக சிறப்பு யாகம்

சாத்தூர் : அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராவதற்காக சாத்தூரை அடுத்த இருக்கன்குடி மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு யாகம் மற்றும் கோ தானமும் அன்னதானமும் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.ராஜேந்திர பாலாஜி, சாத்தூர் எம்.எல்.ஏ., வைகை செல்வன் உள்ளிட்ட அதிமுக.,வினர் பலர் கலந்து கொண்டனர்.

 

ஹசாரே பாதுகாப்பு அதிகரிப்பு

புதுடில்லி : சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு பேஸ்புக் மூலம் கனடாவைச் சேர்ந்த ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதை அடுத்து அவரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது..

 

உலக புராதன சின்னம் இந்தியா கோரிக்கை

புதுடில்லி: நாடு முழுவதும் சுமார் 46 இடங்கள் தேர்வு செய்து உலக புராதன சின்னம் பட்டியலில் சேர்க்க யுனெஸ்கோவிற்கு கோரிக்கை விடு்க்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய கலாச் சாரத்துறை அமைச்சர் மகேஷ்சர்மாகூறியிருப்பதாவது: நாடு முழுவதும் உள்ள 46 முக்கிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அவை அனைத்தையும் உலக புராதன சின்னப்பட்டியலில் சேர்க்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

இந்தியாவின் மகள் ஆவணப்படம் ஒளிபரப்பு

லண்டன்: பாலியல் வன்கொடுமை குறித்த இந்தியாவின் மகள் ஆவணப்படம் பிபிசி4 சேனலில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. பி.பி.சி நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட இந்த ஆவணப்படம் இந்தியாவில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் மார்ச் மாதம் 8-ம் தேதி ஒளிபரப்பு செய்யப்படும் என்ற நிலையில் அதற்கு முன்னதாகவே இங்கிலாந்தில் ஒளிபரப்பு செய்யப்ப்ட்டு உள்ளது. இங்கிலாந்து நேரப்படி இரவு 10 மணியளவில் ஆவணப்படம் பிபிசி4-ல் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.

 

மத்திய அமைச்சர் பதவிக்கு ராவ்சாகேப் தன்வே முழுக்கு

மும்பை: மத்திய உணவுத் துறை இணையமைச்சர் பதவியிலிருந்து, மகாராஷ்டிர மாநில தலைவர் ராவ்சாகேப் தன்வே, இன்று ராஜினாமா செய்ய உள்ளார்.மகாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. தேவேந்திர பட்நாவிஸ், மகாராஷ்டிர மாநில பா.ஜ., தலைவராக பதவி வகித்தார்; முதல்வராக பொறுப்பேற்றதை அடுத்து, அந்த பதவியை ராஜினாமா செய்தார். ராவ்சாகேப் தன்வே, அந்த பதவியில் நியமிக்கப்பட்டார். இவர் தற்போது, மத்திய அரசில், உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை இணை அமைச்சராக பதவி வகிக்கிறார். மத்திய அமைச்சராக இருப்பதால், மகாராஷ்டிராவில் கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட முடியவில்லை என, அவர் கருகிறார். இதையடுத்து, அமைச்சர் பதவியை, இன்று அவர் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். அவர் கூறுகையில், ''பா.ஜ.,வை பொறுத்தவரை, ஒருவருக்கு ஒரு பதவி தான்; எனவே, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன்; இனி, மாநிலத்தில் கட்சியை வளர்ப்பதற்கு தீவிரமாக உழைப்பேன்,'' என்றார்.

 

காஷ்மீரில் ராணுவத்தில் சேர இளைஞர்கள் ஆர்வம்

ஸ்ரீநகர்: ''காஷ்மீரில் ஏராளமான இளைஞர்கள் ராணுவத்தில் ஆர்வத்துடன் சேர்ந்து வருவது, சாதகமான மாற்றம்,'' என, சினார் ராணுவ படை லெப்டினன்ட் ஜெனரல் சுப்ரதா சாஹா தெரிவித்துள்ளார்.ஜம்மு-காஷ்மீர் ராணுவ படை பிரிவில், தேர்வு செய்யப்பட்ட வீரர்களின் அணுவகுப்பை பார்வையிட்ட பின், சாஹா பேசியதாவது:கடந்த ஆண்டு, ஜூலை - டிச., வரை, 700க்கும் மேற்பட்ட இளைஞர்கள், ராணுவத்தில் சேர்ந்துள்ளனர். இளைஞர்களின் ஆர்வம், ஊக்கமளிக்கிறது. அண்மையில், 1,301 காலியிடங்களுக்கு, 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.இதுபோன்ற அணிவகுப்பு, எங்களுக்கும் உத்வேகத்தை அளிக்கிறது. ராணுவத்தில் நாட்டை காக்கும் பணியில், இளைஞர்களை அனுப்புவதில், பெற்றோரின் பங்கும் குறிப்பிடத்தக்க அளவிற்கு உள்ளது. ராணுவத்தில் மேலும் அதிகமானோர் சேர முன்வர வேண்டும். தேசத்தை காப்பதில், இளைஞர்களின் பங்கு, மிக முக்கியமானது.இவ்வாறு, அவர் கூறினார்.

 

காஷ்மீரில் பா.ஜ., கூட்டணி அரசுக்கு 60 சதவீத பாக்., மக்கள் ஆதரவு

இஸ்லாமாபாத்: காஷ்மீரில் பா.ஜ., மற்றும் பி.டி.பி., கூட்டணி அரசுக்கு, பாகிஸ்தானை சேர்ந்த 60 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர். இது அந்நாட்டில் இணையதளம் மூலம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. இந்த கருத்துக்கணிப்பில், கலந்து கொண்ட 6,475 பேரில், 60.23 சதவீதம் பேர் பா.ஜ., கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்துள்ளனர். 39.77 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 

ஸ்பெக்ட்ரம் ஏலம்: முதல் நாளில் ரூ.60 ஆயிரம் கோடி வருமானம்

புதுடில்லி: 2ஜி மற்றும் 3ஜி ஏலம் இன்று துவங்கியது. முதல் நாளில் 6 சுற்றுக்கள் நடந்த ஏலத்தில் அரசுக்கு ரூ.60 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளது. இந்த ஏலம் மீண்டும் நாளை காலை துவங்க உள்ளது. ஸ்பெக்ட்ரம் ஏலம் மூலம் ரூ.82 ஆயிரம் கோடி வருமானம் திரட்ட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.