குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 13 ம் திகதி வெள்ளிக் கிழமை .

ஒப்பந்த திருமணமா? அல்லது ஒப்பந்த விபச்சாரமா?

ஓர் ஆணும், பெண்ணும் உணர்வாலும் உடலாலும் ஒருங்கிணையும் அழகான பந்தம் “திருமணம்”.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன, திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றெல்லாம் பழமொழிகள் உண்டு.

மொத்தத்தில் இருமனங்களும் கலந்து ஒருமனமாகி திருமணம் செய்து கொள்கின்றனர்.

 

இது பலவகைப்படும்,

 

நிச்சயிக்கப்பட்ட திருமணம்

காதல் திருமணம்

கள்ளக்காதலால் நடக்கும் திருமணம் என்று சொல்லிக் கொண்டே போகலாம்,

 

இதில் மேலே கூறப்பட்ட திருமணங்கள் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டாலும், தற்போது “ஒப்பந்த திருமணம்” இந்திய மக்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

 

மேலை நாடுகளை பொருத்தவரை திருமணம் உறவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுப்பதில்லை, பிடித்தால் சேர்ந்து வாழ்வதும் பிடிக்காவிட்டால் மற்றொரு நபரை தேடிச் செல்வதும் சர்வசாதரணமான விடயம்.

 

ஆனால் இந்தியாவைப் பொருத்தவரை திருமண உறவில் இந்த பழக்கவழக்கங்கள் இருந்தாலும், பெரும்பாலாக நடப்பதில்லை. ஏனெனில், இந்திய நாட்டு மக்கள் கலாசாரம் என்னும் போர்வையில் தங்களை போர்த்திக் கொண்டுள்ளனர்.

 

ஒப்பந்த திருமணங்கள்

 

தென்னிந்தியாவின் ஐதராபாத்தில் தான் ஒப்பந்த திருமணங்கள் அதிகமாக நடக்கின்றன.

 

கட்டு கட்டாய் பணங்களை வீசி தற்காலிக மனைவிகளை விலைபேசுகின்றனர் வெளிநாட்டு ஆடவர்கள்.

 

ஆம், வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வரும் ஆடவர்கள், சில மாதங்களுக்கு இங்கு தங்குகின்றனர்.

 

அப்போது சுற்றுலா, மது என்று பொழுதை கழிக்கும் அவர்களுக்கு அந்த கொஞ்ச நாட்களுக்கு மட்டும் மாது தேவைப்படுகிறாள்.

 

குறிவைக்கப்படும் பெண்கள்

 

ஒப்பந்த திருமணத்திற்கு என்றே, நகர்ப்புறங்களில் புரோக்கர்கள் அலைந்து திரிவார்கள்.

 

வெளிநாட்டு ஆடவர்களிடம் இருந்து அதிகமான தொகையை பெறும் இவர்கள், ஏழைப்பெண்களை நோக்கி தங்கள் வேட்டையை தொடர்கின்றனர்.

 

தங்களிடம் சிக்கும் குடும்பத்தினருக்கு ஒரு தொகையை கொடுத்து திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கின்றனர்.

 

பின்னர் என்ன, கெட்டிமேளம் முழங்க தாலி கட்டப்படுகிறது. ஆனால் இந்த திருமணத்தில் திருமண பதிவு இடம்பெறாது.

 

திருமணம் முடிந்த கொஞ்சம் மாதத்திற்கு மட்டும், அந்த வெளிநாட்டு ஆடவர் தன் புது மனைவியோடு உல்லாசமாக ஊர் சுற்றி திரிவார்.

 

பின்னர் நாட்கள் உருண்டோட, மாதங்கள் செல்ல மணமகன் வெளிநாடு செல்லும்போது மனைவியை கைகழுவி விடுகிறார்.

 

இறுதியில், அப்பெண்களுக்கு குறைவான பணமும், கொஞ்சம் நாட்கள் பணக்கார வாழ்க்கை மட்டுமே மிஞ்சுகிறது.

 

ஏழ்மையும் ஒரு காரணமோ?

 

ஒப்பந்த திருமணத்தில் ஏழைப்பெண்கள் ஏமாறுகின்றனர் என்று சொன்னாலும், சில குடும்பங்கள் இந்த திருமணம் பற்றிய விடயங்கள் தெரிந்திருந்தும் இதற்கு ஒப்புக்கொள்கின்றனர்.

 

அன்றாடம் பிழைப்பு நடத்த கஷ்டப்படும் குடும்ப சூழலில் வாழும் பெண்கள், கொஞ்ச நாளைக்காவது பணக்கார வாழ்க்கையும், குடும்பத்திற்கு பண உதவி கிடைக்கும் என்ற சந்தோஷத்தில் இந்த திருமணத்தை செய்து கொள்கின்றனர்.

 

ஒருபுறம் ஏழ்மை என்றாலும், மற்றொருபுறம் பெண்கள் உடல் சுகத்திற்காக இந்த திருமணத்திற்கு சம்மதிப்பதாகவும் கூறப்படுகிறது.

 

இதனை ஒருவகை விபச்சாரம் என்று கூட சொல்லலாம், ஏனெனில் பணம் வாங்கி கொண்டு ஒருநாள் பொழுதை கழிக்கும் பெண்களுக்கும், சில மாதங்களுக்கு மட்டும் பணத்தை வாங்கி கொண்டு வாழ்க்கை நடத்தும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

 

ஒப்பந்த விபச்சாரமா?

 

ஒப்பந்த திருமணம் என்ற பெயரில், ஒப்பந்த விபச்சாரம் செய்கிறார்கள் என்று தான் குறிப்பிட வேண்டும்.

 

எதுவாயினும் விலைபோக தயாராகும் மாதுக்கள்(மது) இருக்கும் வரைக்கும், அதனை குடிக்க ஆடவர்களும் தயாராகத்தான் இருப்பார்கள்.

 

இவ்வாறு நடக்கும் அவலங்களை கண்டறிந்து, அரசாங்கம் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

 

இவ்வாறு ஏமாறும், ஏமாற்றப்படும் பெண்களுக்கு அறிவுரை வழங்கி நல்வழிப்படுத்த வேண்டும்!!!

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.