குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

03.03.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

இப்படியும் ஒரு முதல்வர்!

தாராஓரி: அரியானா முதல்வர் மனோகர் லால் கத்தாரின் கான்வாய் மோதியதில், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் பலியானார். இந்த விபத்தில் கான்வாய் காரில் சென்ற பாதுகாப்பு வீரர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

விபத்து நடந்ததையறிந்த முதல்வர், தனது பயணத்தை நிறுத்திவிட்டு, காயம் அடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தார். அவர்கள் மருத்துவமனைக்கு சென்றதும், அவர் தனது பயணத்தை தொடர்ந்தார்.

இன்சூரன்ஸ் மசோதா: ஆதரவு 131;எதிர்ப்பு 45
புதுடில்லி: லோக்சபாவில், 49 சதவீத அன்னிய முதலீட்டுக்கு வகை செய்யும் இன்சூரன்ஸ் மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. நிதித்துறை இணை அமைச்சர் ஜெயந்த்சின்ஹா இந்த மசோதாவை தாக்கல் செய்தார். மசோதாவை தாக்கல் செய்வதற்கு ஆதரவாக 131 பேரும், எதிர்ப்பாக 45 பேரும் ஓட்டளித்தனர். இதையடுத்து, மசோதா தாக்கல் ஏற்கப்பட்டது.
திகார் ஜெயில் பேட்டி: காங்., நோட்டீஸ்
புதுடில்லி: நிர்பயா கற்பழிப்பு வழக்கில் கொலை குற்றம் சாட்டப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முகேஷ்சி்ங்கிடம், பி.பி.சி., செய்தி நிறுவனம் பேட்டி எடுத்து வௌியிட்டுள்ளது. இந்த பிரச்னை குறித்து ராஜ்யசபாவில் விவாதிக்க வேண்டும் என, காங்கிரஸ் சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ராஜ்யசபா காங்கிரஸ் எம்.பி., ஹனுமந்த்ராவ் காங்., தரப்பில் இந்த நோட்டீசை கொடுத்துள்ளார்.
கெஜ்ரிவால் 'லீவு': சிசோடியா 'இன்சார்ஜ்'
புதுடில்லி: ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், தீராத இருமல் தொல்லையால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக சிகிச்சை பெற வேண்டி அவர் 10 நாள் விடுமுறையில் செல்கிறார். அவர் இல்லாத நாட்களில், துணை முதல்வராக உள்ள மணீஷ் சிசோடியா, முதல்வர் பொறுப்பை கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 5ம் தேதி, கெஜ்ரிவால், இயற்கை முறை சிகிச்சை பெற பெங்களூருவிற்கு செல்ல உள்ளார்.
இந்தியாவுக்கு "ஹோலி': எங்களுக்கு வெற்றி
பெர்த்: ''இந்திய வீரர்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடட்டும். நாங்கள் வெற்றியை கொண்டாடுகிறோம்,'' என, வெஸ்ட் இண்டீஸ் வீரர் டேரன் சமி நகைச்சுவையாக தெரிவித்தார். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் இந்திய அணி 'ஹாட்ரிக்' வெற்றி பெற்று பலமான அணியாக வலம் வருகிறது. இந்நிலையில், வரும் 6ம் தேதி பெர்த்தில் நடக்கவுள்ள 'பி' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இது குறித்த சமி கூறியது: இந்திய அணி பலமானது. அதே நேரம், எங்கள் அணியில் ஒவ்வொரு வீரரும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் கனவுடன் உள்ளோம். எனவே, பெர்த்தில் நடக்கவுள்ள போட்டியில் எங்களை வீழ்த்துவது கடினம். இந்திய வீரர்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடட்டும். நாங்கள் வெற்றியை கொண்டாடுவோம். இவ்வாறு சமி கூறினார். இந்தியாவில் 'ஹோலி' பண்டிகை கொண்டாடப்படும் (மார்ச் 6) அன்று, நடக்கவுள்ள போட்டியில் சமியின் பேச்சுக்கு, இந்திய வீரர்களின் பதிலடி என்னவென்று தெரியும்.
கேவலமான சர்ச்சை:கெஜ்ரிவால் வேதனை
புதுடில்லி: ஆம் ஆத்மி கட்சிக்குள் ஏற்பட்டுள்ள புகைச்சல், அரவிந்த் கெஜ்ரிவாலை ரொம்பவே அப்செட் ஆக்கி உள்ளது. யோகேந்திர யாதவ், மற்றும் பூஷன் ஆகியோர் கிளப்பி உள்ள பிரச்னை, கெஜ்ரிவாலை வெறுப்படையச் செய்துள்ளது. இப்பிரச்னை குறித்து கருத்து தெரிவித்துள்ள கெஜ்ரிவால், 'கட்சிக்குள் நடக்கும் விஷயங்கள் வேதனையை தருகின்றன. இத்தகைய சர்ச்சைகளைப் பெரிதாக்குவது தேர்தலில் வெற்றி பெறச் செய்த டில்லி மக்களுக்கு செய்யும் துரோகமாகும். இந்த கேவலமான சர்ச்சைக்குள் சிக்க நான் விரும்பவில்லை. என் முழு கவனமும் டில்லி மாநில நிர்வாகத்திலேயே இருக்கும்" என்றார்.
கும்பாபிஷேகத்தில் கோஷ்டி மோதல்
சேலம்: சேலம், திருமலைகிரி, தோப்புக்காட்டில், குறிப்பிட்ட சமூகத்தினருக்கு சொந்தமான, ஆயிரம் ஆண்டுகள் பழமையான சைலகிரீஸ்வரர் மற்றும் வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலை, அந்த சமூகத்தினர் புனரமைத்து, நாளை கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்தனர். இந்நிலையில், மற்றொரு பிரிவினர், கோவிலில் தங்களுக்கும் உரிமை உள்ளது என்றும், தங்களையும் விழாவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கோரினர். இதனால் ஏற்பட்ட பிரச்னையை தொடர்ந்து, கோவிலுக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துள்ளது. இதை கண்டித்து 21 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அருகில் உள்ள மலைப்பகுதிகளில் குடியேறி உள்ளனர். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பொருளாதர வளர்ச்சி: ஜெட்லி கணக்கு
புதுடில்லி: அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது 9 முதல் 10 சதவீதம் என்ற நிலையை எட்ட வேண்டும், அப்போது தான் சிறந்த கட்டமைப்புக்களை நாட்டில் உருவாக்க முடியும் என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறி உள்ளார். இந்த ஆண்டு 8 சதவீதத்தை எட்டிவிட்டால், 10 சதவீத வளர்ச்சி என்பதை எளிதாக அடைந்துவிட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரூ. 2 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்
தூத்துக்குடி: தூத்துக்குடியில், வௌிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருந்த 2 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக, தனியார் குடோன் ஒன்றையும் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
லோக்சபாவில் எதிர்கட்சிகள் அமளி
புதுடில்லி: காஷ்மீர் முதல்வர் முப்தி முகம்மது சயீதின் பாக்., ஆதரவு பேச்சு, லோக்சபாவில் நேற்று முதல் புயலை கிளப்பி வருகிறது. இன்றும் இப்பிரச்னையை கையில் எடுத்த லோக்சபா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 'பிரதமர் மோடி அவைக்கு வந்து இப்பிரச்னை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்,' என்றார். இதைத் தொடர்ந்து, அப்சல் குரு குறித்து பி.டி.பி., எம்.எல்.ஏ.,க்கள் சிலர் பேசிய பிரச்னை லோக்சபாவில் வெடித்தது. பி.டி.பி., எம்.எல்.ஏ.,க்களின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரசார் கோஷமிட்டனர். இதனால், தொடர்ந்து அமளி நிலைவியதால், லோக்சபா சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
காளை மேல கையைவச்சா 'காப்பு' தான்
மும்பை: மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பசுவை கொல்லக்கூடாது என்று ஏற்கனவே தடை உள்ளது. இந்நிலையில், காளை மாடுகள் மற்றும் கன்றுகளையும் இறைச்சிக்காக கொல்லக்கூடாது என்று ஒரு சட்டம் இயற்றப்பட்டு, அது, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இந்த சட்ட வரைவுக்கு அனுமதி அளித்ததை தொடர்ந்து, மகாராஷ்ட்ராவில் பசு மட்டுமல்லாமல், காளை மற்றும் கன்றுகளை கொல்வதற்கும் தடை வந்துவிட்டது. இந்த தடையை மீறுபவர்களுக்கு, 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் எருமை மாடுகளை இறைச்சிக்காக கொல்வதற்கு தடை விதிக்கப்படவில்லை. இருப்பினும், எருமை மாடுகளை கொல்வதற்கும் அரசின் முன் அனுமதி பெற வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
பாக்., சென்றார் வௌியுறவு செயலர்
இஸ்லாமாபாத்: சார்க் யாத்ரா என்ற பெயரில், சார்க் நாடுகளுக்கு இந்திய வௌியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் பயணம் மேற்கொண்டுள்ளார். சார்க் நாடுகளுடனான நட்புறவை மேம்படுத்தும் வகையில் இப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வகையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு ஜெய்சங்கர் இன்று சென்றார். அங்கு, காஷ்மீர் பிரச்னை உள்ளிட்ட இருநாடுகளுக்கு இடையிலான பிரச்னை குறித்து நடக்கும் செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார்.
கார் விபத்து: 5 இளைஞர்கள் பலி
யமுனாநகர்: பஞ்சாப் மாநிலம், கிஜ்ராபாத் அருகே சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் கார் மோதிய விபத்தில் 5 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பும் போது, கார் கட்டுப்பாட்டை இழந்து ஓடியதால் இந்த விபத்து நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஈரானுக்கு ஒபாமா வலியுறுத்தல்
வாஷிங்டன்: ஈரான் தங்களது அணுசக்தி ஒப்பந்த நடவடிக்கைகளை குறைந்தது 10 ஆண்டுகளுக்காவது கட்டுப்படுத்த வேண்டும் அல்லது அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும் என நேற்று வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.
அப்சல் குரு உடலை ஒப்படைக்க வேண்டும்: மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய பி.டி.பி.,
ஜம்மு:பார்லிமென்ட் தாக்குதல் குற்றவாளி அப்சல் குருவின் உடலை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும் என மக்கள் ஜனநாயகக் கட்சி கோரியுள்ளது. இதன்மூலம் அக்கட்சி மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.ஜம்மு-காஷ்மீர் முதல்வராக நேற்று முன்தினம் பதவியேற்ற பி.டி.பி., கட்சித் தலைவர் முப்தி முகமது சயீது செய்தியாளர்களிடம் பேசுகையில், மாநிலத்தில் அமைதியான முறையில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றதற்கு பாகிஸ்தானும், பயங்கரவாத அமைப்புகளும் அளித்த ஒத்துழைப்பே காரணம் என சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்தார்.
இந்நிலையில் அப்சல் குருவைத் தூக்கிலிட்டது நீதியின் தவறாகும். அவரைத் தூக்கிலிட்டதில் அரசமைப்புச் சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. அப்சல் குருவின் உடலை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எங்கள் கட்சி ஏற்கெனவே முன்வைத்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
சேலம்:சிவன் கோயில் விவகாரத்தால் 144 தடை உத்தரவு
சேலம்:சேலத்தில் பிரசித்திபெற்ற சைலகிரீஸ்வரர் சிவன் கோயிலில் இருதரப்பு பிரச்னை உடன்பாட்டிற்கு வராததால் கோயிலுக்கு சீல் வைத்துவிட்டனர்.150க்கும் மேல் போலீசார் பாதுகாப்பிற்கு குவிக்கப்பட்டனர்.துணைகமிஷனர்கள் பாபு, பிரபாகரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். நாளை குடமுழுக்கு விழா நடக்க இருந்த நிலையில் மார்ச் 9 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காங்., தலைவர்களுக்கு 'நன்றிக்கடன்' : ம.ஜ.த., தலைவர் தேவகவுடா உருக்கம்
பெங்களூரு: பெங்களூரு சிட்டி ரயில் நிலையம் அருகே, ஜக்கராயனகரே பகுதியில், ம.ஜ.த., அலுவலகம் கட்டுவதற்கான பூமி பூஜையை, அக்கட்சியின் தேசிய தலைவர் தேவகவுடா
நடத்தினார்.அலுவலகம்பெங்களூரு ரேஸ் கோர்ஸ் சாலையில் இருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் அலுவலகம், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காங்கிரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
பெரும் முயற்சிக்கு பின், ஜக்கராயனகரே பகுதியிலுள்ள இடத்தை, பி.பி.எம்.பி., - கிரேட்டர் பெங்களூரு மாநகராட்சி ஒதுக்கியது.அலுவலகம் கட்டுவதற்கான பூமி பூஜையை நடத்திய, ம.ஜ.த., தேசிய தலைவர் தேவகவுடா, நிருபர்களிடம் கூறியதாவது:ம.ஜ.த., அலுவலகம் கட்டுவதற்காக, பி.பி.எம்.பி.,யிடமிருந்து, ஐந்து ஆண்டு குத்தகைக்கு இடம் பெறப்பட்டுள்ளது. மாதம், 12 ஆயிரம் ரூபாய் வீதம், ஆறு மாதங்களுக்கு, 72 ஆயிரம் ரூபாயை, முதற்கட்டமாக வழங்கிஉள்ளோம். ஐந்து ஆண்டு களுக்கு பின், இடத்தை புதுப்பிப்பதோ, விடுவதோ அரசு முடிவு செய்ய வேண்டிய விஷயம்.மருத்துவமனை கட்டடம்இதற்கு ஒத்துழைத்த மேயர், துணை மேயர், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தலைவர்கள், கமிஷனர் உட்பட அனைவருக்கும், நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
இங்கு, 2011ல், மருத்துவ மனை அமைக்க, பி.பி.எம்.பி., முடிவு செய்தது; ஆனால், பணிகள் துவங்கவில்லை. இந்த இடத்தின் பின்னால் உள்ள, 5 ஏக்கர் இடத்தில், மருத்துவமனை கட்டடம் உள்ளது. எனவே, அலுவலகம் துவங்கும் இடத்தில், எந்த பிரச்னையும் ஏற்படாது.இவ்வாறு, அவர் கூறினார்.
திருமலையில் வருடாந்திர தெப்போற்சவம்
திருப்பதி:திருமலை ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர தெப்போற்சவத்தின் 2-ஆம் நாளான நேற்று, ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணர் தெப்பத்தில் வலம் வந்தனர்.இந்த உற்சவத்துக்காக மாலையில் நடைபெறும் ஸ்ஹஸ்ர தீபாலங்கார சேவையை தேவஸ்தானம் ரத்து செய்தது.அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்திகள் மாடவீதியில் வலம் வந்த பின்னர், தெப்பத்தில் எழுந்தருளினர். தெப்பத்தின்போது, அன்னமாச்சார்யாரின் கீர்த்தனைகள் இசைக்கப்பட்டது. இதைக் காண திரளான பக்தர்கள் கூடினர்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு அமெரிக்கா பயணம்
வாஷிங்டன்:இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு நேற்று அமெரிக்கா வந்து சேர்ந்தார்.ஈரானின் அணு ஆராய்ச்சி தொடர்பாக மேற்கத்திய நாடுகள் ஏற்படுத்தவுள்ள ஒப்பந்தத்தை தடுப்பதற்கான முயற்சியை மேற்கொள்ளப் போவதாக அவர் தெரிவித்தார்.இது தொடர்பாக அமெரிக்க லோக்சபாவில் நாளை அவர் உரையாற்றுவார்.
ராமர் கோயில் விவகாரம்:மத்திய அமைச்சர் உறுதி
பலியா:அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது குறித்த தனது நிலைப்பாட்டிலிருந்து பாஜக பின்வாங்கவில்லை. இருப்பினும், மாற்றுவழியில் தான் ராமர் கோயிலைக் கட்ட வேண்டும் என்று மத்திய ரசாயனத் துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் தெரிவித்தார்.இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநிலம், பலியாவில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் மேலும் கூறுகையில்,அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது குறித்து, கடந்த லோக்சபா தேர்தலின்போது பா.ஜ.க.,வின் தேர்தல் அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.இருப்பினும், இந்த விஷயம் எங்களின் கெளரவம் சார்ந்ததாகும்.தற்போதும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது குறித்த தனது நிலைப்பாட்டிலிருந்து பாஜக பின்வாங்கவில்லை. எனினும், இந்தக் கோயிலை மாற்று வழியில்தான் கட்ட வேண்டும். அதாவது, சாதுக்கள் போன்றவர்கள்தான் கோயில் கட்டும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
பிரதமர் மோடியை சந்திக்கிறார் மம்தா
புதுடில்லி: மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங். கட்சிக்கு கடும் நெருக்கடியை பா.ஜ., கொடுத்துவரும் நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி வரும் 9-ம் தேதி பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சந்திப்பின் போது மாநில அரசின் கடன் சுமையை குறைப்பது, பல்வேறு திட்டங்கள் மற்றும் வளர்ச்சிக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் முன் வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அரசியல் வட்டாரங்கள் கூறுகையில், கடந்த ஆண்டு மே மாதம் பிரதமராக மோடி பதவியேற்றது முதல் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் மோடியை அணிவகுத்து வந்து சந்தித்து பேசினர். அந்த வகையில் மம்தா இதுவரை மோடியை சந்தித்து பேசியதில்லை. இந்நிலையில் 9-ம் தேதியன்று முதன்முறையாக மோடியை சந்தித்து பேச உள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.