குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 8 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

எங்கள் நாட்டில் வெடித்தபோது வேடிக்கை பார்த்த இந்தியாவில் தொடர்குண்டுவெடிப்பு.

14.07.2011  அமீர் காசிப்பின் பிறந்த நாளான்று தாக்குதல் ..5ஆம் இணைப்பு:-மும்பையில் இன்று மாலை 3 இடங்களில் அடுத்தடுத்து நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. 114 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 4ஆம் இணைப்பு:-மும்பையின் தாதர், ஓபரா ஹவுஸ் மற்றும் ஜவேரி பஜார் ஆகிய இடங்களில் இன்று மாலையில் குண்டுகள் வெடித்தன.

மாலை 6.45 மணியளவில் முதல் குண்டுவெடித்தது. தாதர் மேற்குப் பகுதியில், கபூதர்கானா என்ற இடத்தில் நின்றிருந்த ஒரு மாருதி எஸ்டீம் காரில் இந்தக் குண்டு வெடித்தது.

அடுத்து, ஜவேரி பஜார் பகுதியில், கவ் காலி என்ற இடத்தில் உள்ள ஒரு மின்சார கம்பத்தில் இருந்த மீட்டரில் வைக்கப்பட்டிருந்த குண்டுவெடித்தது. இதில் 4 பேர் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன.

ஓபரா ஹவுஸில் உள்ள பிரஷாந்த் சேம்பரில் நின்றிருந்த ஒரு மோட்டார் சைக்கிளில் 3வது குண்டுவெடித்தது.

இந்த மூன்று சம்பவங்களிலும் 10 பேர் பலியானதாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். குண்டுவெடிப்புகளில் 54 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

மும்பை முழுவதும் உஷார் நிலை

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மும்பையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மும்பை முழுவதும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநகரின் அனைத்து எல்லைகளும் சீல் வைக்கப்பட்டுள்ளன. எல்லைப் புற சாலைகளில் வாகன தணிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குண்டுகள் வெடித்த இடத்திற்கு காவல்துறையினரும், அதிரடிப்படையினரும், தீயணைப்புப் படையினரும் விரைந்துள்ளனர்.

 

4வது முறை இலக்கு வைக்கப்பட்ட ஜவேரி பஜார்:

இன்று குண்டு வெடிப்பு நடந்த ஜவேரி பஜார் பகுதியில் 1999, 2003 மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த தொடர் குண்டு வெடிப்பின்போதும் குண்டுகள் வெடித்தன என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது 4வது முறையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இன்று நடந்த குண்டு வெடிப்புகளில் ஓபரா ஹவுசில் நடந்தது தான் மிகப் பெரிய தாக்குதலாகும். அங்கு தான் மிக அதிக சக்தி வாய்ந்த குண்டு வெடித்துள்ளது.

தயார் நிலையில் என்எஸ்ஜி கமாண்டோக்கள்

என்எஸ்ஜி எனப்படும் தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோப் படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதிரடி நடவடிக்கைக்குத் தேவையான அளவில் அவர்கள் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

என்ஐஏ குழு மும்பை விரைகிறது

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு நிறுவகத்தின் புலனாய்வுக் குழு டெல்லியிலிருந்து மும்பை விரைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீவிரவாத தாக்குதல்-உள்துறை அமைச்சகம்

மும்பையில் இன்று நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் குறித்த தகவல் வெளியானதும், மத்திய உள்துறை செயலாளர் யு.கே.பன்சால், மகாராஷ்டிர மாநில டிஜிபியைத் தொடர்பு கொண்டு பேசினார்.

இதையடுத்து இந்த சம்பவம் ஒரு தீவிரவாதத் தாக்குதல் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

எல்லைப் பாதுகாப்புப் படை விமானம் மூலம் என்எஸ்ஜி கமாண்டோப் படையினரும், தடயவியல் நிபுணர்களும் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

நாடு முழுவதும் உஷார் நிலை

மேலும், அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துமாறும், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை பலப்படுத்துமாறும் மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.

 

நாடு முழுவதும் உஷார் நிலை

மேலும், அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துமாறும், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய ,டங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை பலப்படுத்துமாறும் மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.

3ஆம் இணைப்பு:-மும்பையில் 3 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு-பலர் படுகாயம் :
 
இந்தியா கடுமையான ஒரு பயங்கரவாதத் தாக்குதலை எதிர்கொண்டுள்ளது. சற்று நேரத்திற்கு முன்னர் தெற்கு மும்பையில் மக்கள் நெருக்கடி மிகுந்த தாதார் பகுதி, ஓபரா ஹவுஸ், சாவேரி பஜார், ஆகிய இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புகள் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது. மும்பை முழுவதும் ஸ்தம்பித்துப் போயுள்ள நிலையில் இந்தியாவின் அனைத்து நகரங்களும் உச்சக்கட்ட அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயமடைந்துள்ள இந்த விபத்து சற்று நேரத்திற்கு முன்பு நடந்துள்ளது.
2ஆம் இணைப்பு:-மும்பையில் தொடர் குண்டுத் தாக்குதல்

இந்தியாவின் வர்த்தகத் தலைநகராகக் கருதப்படும் மும்பையில் சற்று முன்னர் தொடர் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

நகரின் முக்கிய மூன்று நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இந்தத் தாக்குதல்களில் பலர் காயமடைந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

ஸவாரி பஸார், ஒபேரா ஹவுஸ் மற்றும் தென் மும்பை ஆகிய பிரதேசங்களில் குண்டுகள் வெடித்துள்ளன.

2008ம் ஆண்டு மும்பைத் தாக்குதல்களுடன் n;தாடர்புடைய அமீர் காசிப்பின் பிறந்த நாளான்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இன்றைய தாக்குதல் பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கக் கூடும் என இந்திய உள்துறை அமைச்சு அச்சம் வெளியிட்டுள்ளது.

தாக்குதல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், மும்பையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சேத விபரங்கள் மற்றும் காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள் பற்றிய தரவுகள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

 1ஆம் இணைப்பு:-மும்பையில் 3 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு-பலர் படுகாயம் :
 
மும்பையில் இன்று மாலை 3 இடங்களில் ஒரே சமயத்தில் குண்டுகள் வெடித்தன. இதில் பலர் படுகாயமடைந்தனர். மும்பையின் தாதர், ஓபரா ஹவுஸ் மற்றும் ஜவேரி பஜார் ஆகிய இடங்களில் இன்று மாலையில் குண்டுகள் வெடித்தன.
 
இதில் 15 பேர் வரை காயமடைந்ததாக ஒரு தகவலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக இன்னொரு தகவலும் தெரிவித்தன. தாதர் மேற்குப் பகுதியில் நின்றிருந்த ஒரு காரில் குண்டுவெடித்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
 
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மும்பையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குண்டுகள் வெடித்த இடத்திற்கு காவல்துறையினரும், அதிரடிப்படையினரும், தீயணைப்புப் படையினரும் விரைந்துள்ளனர்.
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.