குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தேர்தல் விஞ்ஞாபனத்தை தமிழர் விடுதலைக் கூட்டணித்தலைவர் வீ.ஆனந்தசங்கரி வெளியிட்டு வைத்தார்

13.07.2011.த.ஆ.2042--உள்ளுராட்சி சபைத்தேர்தலுக்கான கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று கிளிநொச்சி, உருத்திரபுரம் பகுதியில் எழுச்சியுடன் நடைபெற்து.கூட்டத்தில் தேர்தல் விஞ்ஞாபனத்தை தமிழர் விடுதலைக் கூட்டணித்தலைவர் வீ.ஆனந்தசங்கரி வெளியிட்டு வைத்தார். தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது.உருத்திரபுரம் கூழாவடி பிரதேசத்தில் மிகப்பெரியளவில் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக்கூட்டம் மாவட்ட அமைப்பாளர் எஸ்.வேளமாலிகிதன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், தமிழர் விடுதலைக் கூட்டணித்தலைவர் வீ.ஆனந்தசங்கரி ஆகியோரும் கரைச்சிப் பிரதேச சபைக்குப் போட்டியிடும் கூட்டமைப்பு வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.


இதன்போது கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், கடந்தகாலத்தில் நடந்த கொடுமைகள் எதனையும் நாங்கள் மறக்கவில்லை. இந்த உருத்திரபுரம் மண்ணில் விமானக்குண்டு வீச்சுக்களிலும், எறிகணை வீச்சுக்களிலும் கொல்லப்பட்டுக் கிடந்த எம் சொந்தங்கள் கண்ணில் வந்து போகிறார்கள்.

நிலைமை இவ்வாறிருக்க நாங்கள் எல்லாவற்றையும் மறந்தவர்களாக இருப்போம் என்ற எண்ணப்பாட்டுடன் 25 அமைச்சர்கள் 320கோடியுடன் வந்திருக்கின்றார்கள், அத்தனை அவசியம் என்ன? இந்த சின்னப் பிரதேச சபையை கைப்பற்றுவதற்கு இத்தனை அவசியம் என்ன? என்பதை மக்கள் புரிந்து கொண்டாகவேண்டும். எனக் கேள்வியெழுப்பினார்.

அதுபோதாதென்று மணல் அள்ளி விற்றவர்களும், சாராயக்கடை வைத்தவர்களும் நீண்ட வாகன ஊர்திகளில் சுற்றிவருகிறார்கள், அவர்களோடு சில எடுபிடிகளும் கூட சுற்றித்திரிகின்றார்கள். இவர்கள்தான் கடந்தகாலத்தில் புலிகளின் பின்னால் திரிந்து அவர்களுடைய பணத்தில் சாப்பிட்டு, அவர்களுடைய பணத்தில் வீடுகளைக் கட்டியவர்கள்.

இப்போது ஈ.பி.டி.பி அதுவும் போனால் அடுத்து வரும் ஒரு அமைப்போடு சேர்ந்து கொண்டு வயிறு நிரப்புவார்கள். உன்மையில் இதற்காக இவர்கள் வெட்கப்படவேண்டும். இந்த எடுபிடிகளின் வார்த்தைகளில் வலுவில்லை அவர்களுடைய கோரிக்கைகள் எப்போதும் நிறைவேற்றப்படப்போவதில்லை என்பதை மக்கள் புரிந்து கொண்டாகவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து உரையாற்றிய ஆனந்தசங்கரி நானும் இந்தப்பிரதேசம் சார்ந்தவன் என்ற வகையில் இங்கு நடந்த அத்தனை விடயங்களும் எமக்குத் தெரியும். இன்று எங்கள் தெருக்களில் வீதியுலாப்போவபவர்கள் அரசியலுக்குத் தகுதியற்றவர்கள் சாராயக்கடை வேண்டுமென்றால் வைக்கலாம் எனக்கூறினார்.

தொடர்ந்து உரையாற்றிய மாவட்ட அமைப்பாளர் வேளமாலிகிதன். கூட்டமைப்பு மக்களுக்கு எதைக்கொடுத்திருக்கின்றது? என்று கேட்கிறார்கள். நாம் கூறுகின்றோம். மக்களுக்காக மக்களுடைய உரிமைக்காக பேசியமைக்காக யோசப்பரராசசிங்கம், ரவிராஜ் போன்று இன்னும் சிலரை கொடுத்திருக்கின்றோம்.

கிளிநொச்சி மாவட்டத்தின் மக்களுடைய நிலைமைகள் தொடர்பில் பேசியமைக்காக அண்மையில் நொச்சியாகமவில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. எனவே மக்களுக்காக நாம் உயிரைக் கொடுத்திருக்கின்றோம்.

தொடர்ந்து கொடுப்பதற்க்கு நாம் தயாராகவும் உள்ளோம். வெறும் வாட்டர்பம்புகளையும், கிறவல் வீதிகளையுமல்ல என முழங்கினார். கூட்டத்தில் தேர்தல் விஞ்ஞாபனத்தை தமிழர் விடுதலைக் கூட்டணித்தலைவர் வீ.ஆனந்தசங்கரி வெளியிட்டு வைத்தார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.