குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 24 ம் திகதி புதன் கிழமை .

பூநகரியில் வீடுகளிலிருந்த பொதுமக்கள் படையினரால் அழைத்து வரப்பட்டு செனல் 4க்கெதிராக பேரணி

  10 .07. 2011  பூநகரியில் வீடுகளில் இருந்த பொதுமக்கள் படையினரால் அழைத்து வரப்பட்டு, செனல் 4 தொலைக் காட்சிக்கு எதிராக பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது பூநகரிக்கு அமைச்சர் ஒருவர் வந்துள்ளார். உங்களைச் சந்திக்க விரும்புகிறார் எனத் தெரிவித்து பொது மக்களை பூநகரிப் படையினர் அழைத்து வந்தனர். பின்னர் பேருந்துகள் மூலம் யெயபுரம் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு பேரணி நடத்தப்பட்டது.
 
யெயபுரம், முழங்காவில், வலைப்பாடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்களே இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர்.
செனல் 4க்கு எதிராக சுலோகங்கள் கொண்ட சுலோக அட்டைகளை அந்த மக்களிடம் கொடுத்த படையினர் பேரணியாகச் செல்லுமாறு கட்டளையிட்டனர். அதைத்தொடர்ந்து அந்த மக்கள் மனக்குமுறலுடன் அணி வகுத்து சென்றனர் என்றும்  அந்தப் பேரணியை விசேட ஏற்பாட்டில் சிலர் படம் எடுத்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
 
இந்தப் பேரணியில் சென்ற மக்கள் மனக்கொதிப்பை, எரிச்சலை ஆவேசத்துடன் வெளியிட்டனர்,
எம்மை இராணுவத்தினர் அச்சுறுத்தி 'டிரக்கில் ஏற்றினர். வீடு வீடாகச் சென்ற படையினர் ஆயுத முனையில் வீட்டுக்கு ஒருவராவது வர வேண்டும் என நிர்ப்பந்தித்தே 'டிரக்கில் ஏற்றினர்.
 
 
பூநகரிக்கு வந்து இறங்கியதும் தான் எமக்கு விடயம் தெரிய வந்தது.என்ன செய்வது? முள்ளிவாய்க்காலில் எமது உறவுகளை இழந்த நிலையில், அங்கு நடந்த கொடூரங்கள், அவலங்கள் நேரில் பார்த்த அனுபவித்த எமக்கு இந்த நிர்ப்பந்தம் தூக்கி வாரிப் போட்டது. ஆனால் நிலைமையை உணர்ந்து கொண்டு மனதைக் கல்லாக்கிக்கொண்டு இந்தப் பேரணியில் ' நடை பிணங்களாகச் சென்றோம். கடவுள் தான் எம்மை காப்பாற்ற வேண்டும்'' என மக்கள் தெரிவித்துள்ளனர்.

அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்கு போதியளவு கால அவகாசம்
10 .07. 2011 
வழங்கப்பட வேண்டுமென ரணில் பான் கீ மூனிடம் கோரிக்ககை இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு பொருத்தமான அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்கு போதியளயவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுடன் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். பொதுவாக ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பதவி வகிப்போர், நாடுகளின் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் அரிதாகவே கருதப்படுகின்றது.
 
ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பதிலளிப்பதற்கு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பொதுச் செயலாளருடன் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு விளக்கமளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை, கால அவகாசம் வழங்குவதில் சிக்கல் இல்லை என்ற போதிலும், அந்த சந்தர்ப்பத்தை நீண்ட காலத்திற்கு இலங்கை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என பான் கீ மூன் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மட்டுமன்றி பொதுவாக இலங்கையின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு கவனம் செலுத்தி வருவதாக பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களே போர்க்குற்றவாளிக்கு 23 திகதி சரியான தீர்ப்பு வழங்குங்கள்!

மீண்டும் மீண்டும் உள்ளூராட்சி அரசாங்க முறைமையை இலங்கையின் ஆளுகை அமைப்பில், மூன்று மட்ட அரசாங்க அமைப்பில் ஒரு ஆளுகை அமைப்பாக வர்ணிக்கப்பட்டாலும், அத்தகைய அந்தஸ்தினை அரசியல் யாப்பில் குறிப்பிட்டு வழங்கவில்லை. இதற்கான கோரிக்கை அரசாங்கத்தின் உள்ளுராட்சி கொள்கைப் பிரகடனத்தில் மிக வலுவாக அங்கீகரிக்கப்பட்பதைத் தொடர்ந்து, அரசியல் திட்ட மாற்றத்திற்கான நிர்ப்பந்தங்களும் தோன்றியுள்ளன. உள்ளுராட்சி மன்றங்கள் யாவும் ‘உள்ளுர் அரசாங்கங்கள்’ என்ற அந்தஸ்தைப் பெறுவது தவிர்க்க முடியாத ஒரு நிகழ்வாகும்.

ஒரு மட்டத்தில் உள்ள அரசாங்கத்தின் அதிகாரம் எவ்வளவு என்றால் அது அந்தந்த மட்ட அரசாங்கங்களின் மக்கள் பிரதிநிதிகளின் தரத்தைப் பொறுத்ததாகும். இது ஜனநாயக அரசாங்கங்களில் உள்ள பண்பாகும். உதாரணமாக, மக்கள் தெரிந்தெடுக்கும் பிரதிநிதிகள் ஊடாகவே மக்கள் தமது நாட்டில் இன்ன இன்ன அதிகாரங்களைக் கொண்டவர்களாக இருக்கின்றார்கள் என பிரகடனப்படுத்துகின்றார்கள். இது சட்டவாக்கங்கள் ஊடாக நடைபெறுகின்றது. கூர்ந்த அறிவுள்ள மக்கள் சட்டத்தை ஆக்கினால் கூர்மையான அதிகாரங்களைக் கொண்ட சட்டங்களாகவும், தரம் குறைந்த பிரதிநிதிகளைத் தெரிந்தால் தரங்குறைந்த அதிகாரங்களைக் கொண்ட தரங்குறைந்த சட்டங்களாகவும் மக்களின் அதிகாரம் வெளிப்படுத்தப்படும். இவ்வாறே மாகாண அரசாங்கத்தின் சட்டங்களின் தரமும் அங்கு தெரியப்படும் பிரதிநிதிகளைப் பொறுத்து இருக்கும். அரசியற் திட்டத்தில் இந்த இந்த அதிகாரங்கள் மாகாண சபைக்கு கையளிக்கப்படும் என்று கூறப்படுவதில்லை. இந்த இந்த விடயங்கள் தொடர்பாக மாகாண சபைகளுக்கு சட்டவாக்கம் செய்யும் அதிகாரம் உண்டு என்று மட்டுமே கூறப்படும். அந்தந்த விடயங்களின் கீழ் என்னென்ன அதிகாரங்களை மாகாண சபை கொண்டிருக்கும் என்று கூறுவது மாகாண சபை அங்கத்தவர்களின் அறிவையும் திறமையையும் பொறுத்ததாகும். அதே போல உள்ளுராட்சி மன்றங்களினால் உருவாக்கப்படும் உபவிதிகள், திட்டங்கள் என்பனவற்றின் தரமும் அங்கு நாம் தெரிந்தெடுத்து அனுப்பும் பிரதிநிதிகளின் தரத்தைப் பொறுத்தே உள்ளது.

இத்தகைய பொறுப்பு மிக்க பணிகளுக்கு பிரதிநிதிகளை நிறுத்தும் போது அரசியற் கட்சிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். ஏனெனில் மக்களின் ஜனநாயக உரிமைகள் இப்பிரதிநிதிகளின் ஊடாகவே செயற்படுத்தப்படுகின்றன. அத்துடன் மக்கள் இவ்விடத்தில் விழிப்பாக இருந்து தகுதியான பிரதிநிதிகளைத் தெரியாவிட்டால் தாமே தம்மை அவமானத்திற்கு உட்படுத்துபவர்களாவார்கள்.

2011-07-23ந் திகதிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் பொருட்டு அரசாங்கமானது, துணைப்படைகளைக் கொண்ட ஒட்டுக் குழு அரசியற் கட்சிகளையே முன்வைத்து தேர்தலில் இறங்கியுள்ளது. அடாவடித்தனங்களுடன் மிரட்டல், தண்டித்தல் போன்ற வழிகள் கையாளப்படுகின்றன. பல மில்லயன் கணக்கான பணம் செலவழிக்கப்படுகின்றது. அபிவிருத்தி நடவடிக்கைகள் திணிக்கப்படுகின்றன. குறுகடன்கள், வாழ்வாதார உதவிகள், கட்டிடங்கள், தெருக்கள் என்பன திடீரென போடப்படுகின்றன. முல்லைத்தீவிலும் கிளிநொச்சியிலும் மாத்திரம் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த பெருந்தெருக்களைவிட 98 தெருக்களை இராணுவம் முன்னின்று நிர்மாணிக்கின்றது. பல விசேட அமைச்சர்களும் அரச வளங்களும் அரசாங்க உத்தியோகத்தர்களும் தேர்தல் பிரச்சாரத்திற்காக நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள். இராணுவத்தினரின் பிரசன்னத்தின் மூலம் வாக்குப் போடுபவர்கள் அடையாளங் காணப்படுவார்கள் என மிரட்டல் நடைபெறுகிறது.

அத்தனை சபைகளையும் அரசாங்கம் கைப்பற்றியாக வேண்டும் என்று முழு முனைப்புடன் செயற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. வெல்லுவதற்காக என நடாத்தப்பட்ட தேர்தல்களின் வரிசையில் இதுவும் ஒன்றாக அமையக் கூடும். இத்தகைய உத்வேகத்தோடும் ஆக்ரோஷத்தோடும் இவர்கள் ஏன் வேலை செய்கின்றார்கள் என அறிவது இங்கு தேவையானதாகும்.

ஒட்டுக் குழுக்களின் சலுகைகள், மானியம், பாதுகாப்பு என்பன கேள்விக்குறியாகி அதன் தலைவர்கள் கிழக்கில் கருணா எப்படி அரசாங்கத்தினால் அவமதிப்புக்கு உட்பட்டு பிச்சை எடுத்துக் கொண்டு இருக்கின்றாரோ அத்தகைய ஒரு சூழ்நிலை வடக்கிலும் ஏற்பட்டு விடக்கூடாது என்பது ஒரு பிரதான காரணமாகும்.

அதைவிட முக்கியமான தேவை ஐ.நா.வின் போர்க் குற்றத்திலிருந்து விடுபட மக்கள் ஆதரவைக் காட்டுவதற்கு வடக்கில் இருந்து அனுப்பப்பட்ட கையெழுத்துப் பட்டியலின் தூய்மை பற்றி ஐ.நா.விற்கு ஏற்பட்ட சந்தேகத்தைக் களைதல், வடக்கில் நடைபெறும் தேர்தல் ஒன்றில் தமக்கு கிடைத்துள்ள வெற்றியைக் காட்டி, வடபகுதி மக்கள் அரசாங்கத்துடன் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று காட்டி குற்றப்பத்திரிகை வரவிடாது தடுக்க உதவுதல்,

மறுபுறம் தொடர்ச்சியாக வடபகுதி மக்கள் TNA க்கு காண்பித்த ஆதரவினால் தமிழ்மக்களின் பிரதிநிதிகள் TNA தான் என்பதை தகர்த்துக் கொள்ளல் என்பன ஏனைய காரணங்களாகும். தமிழ் மக்களுக்கு TNA ஐத் தவிர வேறு தெரிவு உண்டா? தொடர்ச்சியான கொலை, கொள்ளை, அடாவடித்தனங்கள், அடிவருடித்தனங்கள், காட்டிக் கொடுத்தல்கள் என்பனவற்றின் மூலம் மக்களது ஜனநாயக உரிமைகளைத் தொடர்ந்து பாதித்துக் கொண்டிருக்கும் ஒட்டுக் குழுக்களைத் தெரிவு செய்தால் தமிழ் மக்களுக்கு எதிரான நிரந்தரமான பெருநட்டம் தவிர்க்க முடியாது.

மறுபுறத்தில் உள்ளூராட்சி மட்டத்திலும் தமது கண்ணியமான நடத்தையினால் முன்மாதிரியாகத் திகழும் ஏனைய திறமைமிக்கவர்களைத் தெரிவு செய்து உள்ளுர்மட்டத்தில் நல்ல முறைமையினை நிறுவும் வாய்ப்பு தவறவிடப்படும். வரலாறு இன்னும் பின்தள்ளப்படும். இவை எல்லாவற்றையும் விட அனுபவம், விலைபோகாத்தன்மை, கொள்கைப் பிடிப்புக் கொண்ட, தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற TNA பேச்சுவார்த்தைகளில் சரியான, உறுதியான நிலைப்பாடுகளை எடுக்க அவர்கட்கு எமது ஒப்புதலைத் தருகின்ற வகையில் இத்தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டும்.

TNA தவிர வேறு எவரையும் தெரிதல் மூலம் ஆயிரக்கணக்கில் தம்முயிரை வழங்கிய மக்களின் போராட்டத் தொடர்ச்சி அறுபடும். சர்வதேச மட்டத்தில் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்பவர்களின் ஏற்புடைத்தன்மை உடைபடும். இதன் மூலம் வடக்கில் ஒட்டுக் குழு ஆட்சி தொடந்து நடைபெறும். முள்ளிவாய்க்கால் படுகொலை நடக்கும் போது ஜெனிவா சென்று மனிதாபிமான நடவடிக்கை நடைபெறுகின்றது என்றும் தேர்தல் முடிவடைந்த பின்னர் மக்களை அரசாங்கம் கொலை செய்யவில்லை என்றும் கூறிய ஒட்டுக் குழுவின் சனநாயக விரோத செயற்பாடுகள் மேலும் பலம்பெற்று இராணுவ ஆட்சி தொடர்ந்து நடைபெற வழிபிறக்கும். அடக்குமுறை, ஆட்கடத்தல், காணாமற்போதல், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, அடாவடித்தனம் ஆகியன தொடரும். தீர்வுத் திட்ட முன்மொழிவுகள் சீர்குலையும்.

எனவே புத்தியீவிகளே, மக்கள் தங்கள் தலையில் மண்ணை அள்ளிக் கொட்டுகின்ற நிலைமையைத் தவிர்த்து, பாதுகாப்பான, கண்ணியமான எதிர்காலத்திற்காக எல்லோரையும் சென்று வாக்களிக்க செய்ய வேண்டியது உங்கள் கடமையாகும்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.