குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 23 ம் திகதி செவ்வாய் கிழமை .

ரணிலும்மகிந்தவும்கூட்டு அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கத் தயார் – ரணில்

 17.07.2011-மகிpந்தருடன் நெருங்கும் ரணில்: வடக்கில் எதிர்ப்பரப்புரையில்லை!!  சிறிலங்கா அரசின் இரண்டு முக்கிய அமைச்சர்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வரவிருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கைவிட ஐதேக தீர்மானித்துள்ளது. சிறிலங்காவின் பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில் பிறேம் யெயந்த் மற்றும் மின்சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோருக்கு எதிராகவே ஐதேக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரத் திட்டமிட்டிருந்தது.

20 ஆயிரம் தொன் தரமற்ற பெற்றோலை டுபாயில் இருந்து இறக்குமதி செய்த விவகாரத்தினால் ஆயிரக்கணக்கான வாகனங்களின் இயந்திரங்கள் பழுதடைந்துள்ளன. அத்துடன் இதனால் பாரிய பொருளாதார இழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

இதற்குப் பொறுப்பான பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரவும், மின்விநியோகத்தை சீர்படுத்தத் தவறிய மின்சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராகவும் ஐதேக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வரவும் ஐதேக முடிவு செய்திருந்தது.

ஆனால் திடீரென இந்த முடிவை மாற்றிக் கொண்டுள்ள ஐதேக சிறிலங்கா அரசின் அமைச்சர்கள் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைக் கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளது.

எனினும் இந்த முடிவு எடுக்கப்பட்டதற்கான காரணத்தை ஐதேக அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.

பின்னர் இதுதொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்று ஐதேக வட்டாரங்கள் கூறியுள்ளன.

அனைத்துலக நெருக்கடிகளில் இருந்த நாட்டை மீட்கவும், தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவும் சிறிலங்கா அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதாக ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் அறிவித்திருந்தார்.

இதன் ஒரு கட்டமாகவே சிறிலங்காவின் முக்கிய அமைச்சர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கைவிடப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அத்துடன் வடக்கில் உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடுவதில்லை என்றும் ரணில் விக்கிரமசிங்க முடிவு செய்துள்ளார்.

கரு ஜெயசூரிய தலைமையிலான குழுவொன்றிடமே வடக்கில் பரப்புரைகளை மேற்கொள்ளும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வடக்கில் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் ஆளும்கட்சி வெற்றி பெறுவது அனைத்துலக அளவில் சிறிலங்காவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைக் குறைக்க உதவும் என்று ரணில் விக்கிரமசிங்க கருதுகிறார்.

இததால் தான் அங்கு ஐதேகவின் வெற்றி குறித்து அவர் அக்கறைப்படவில்லை என்றும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை பலப்படுத்தும் நோக்கில் எதிர்ப் பரப்புரைகள் கைவிட முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ன.

  11.07.2011இலங்கையில் சமச்டி முறைத்தீர்வு கிடையாதுஅரசு. ரணிலும்மகிந்தவும்கூட்டு இலங்கையில் சமச்டி ஆட்சி முறைமைக்கு இடமில்லை என அரசாங்கம் திட்டவட்டமாக  அறிவித்துள்ளது. அமெரிக்காவின் குத்துக்கரணம் ரணிலின் சாணக்கியம். 

அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச அழுத்தங்களிலிருந்து விடுபடுவதற்கும், அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கும் ஒத்துழைப்பு வழங்கத் தயார் என குறிப்பிட்டுள்ளார்.
 
முன்னாள் அமைச்சர் அமரர் வீ.ஏ.சுகததாச அவர்களின் நினைவு தின நிகழ்வுகளில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
அரசாங்கத்தின் உத்தேச பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிகப்பதற்கு தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணும் முனைப்புக்களுக்கு ஆதரவளிக்க பின்நிற்கப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
 
சில புலம்பெயர் தமிழ் சக்திகளின் சவால்களை எதிர்நோக்கத் தயார் – சனாதிபதி :
11.07.2011  சில புலம்பெயர் தமிழ் சக்திகளின் சவால்களை எதிர்நோக்கத் தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தமிழர்களின் ஒரு சிலர், அரசாங்கத்திற்கு எதிராக சவால் விடுத்து வருவதாகவும் அதனை எதிர்நோக்க தயார் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். நாடு அபிவிருத்தி நோக்கி தொடர்ச்சியாக நகர்ந்து செல்லும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். உண்மை நிலைமையை அறிந்து கொள்ளாது சில தரப்பினர் எவ்வித அடிப்படையுமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக ஜனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார்.
 
சில புலம்பெயர் சமூகங்கள் நாடு தொடர்பான பிழையான விம்பமொன்றை வெளிக்காட்ட முனைப்பு காட்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு கிடைத்துள்ள சுதந்திரம் மற்றும் நிம்மதியை மூடிமறைக்க முயற்சிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
நகரத்திற்கு மட்டும் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் கிராமங்களிலும் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றில் தெரிவித்த கருத்துக்கு, அவைத் தலைவர் என்ற ரீதியில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா பதிலளித்துள்ளார்.தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டமாக சமஷ்டி ஆட்சிமுறைமையை அரசாங்கம் ஒருபோதும் முன்வைக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
நாட்டின் சகல இன மக்களினாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வுத் திட்டம் ஒன்றையே அரசாங்கம் முன்வைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற ரீதியில் இனங்களுக்கு இடையில் பிளவு ஏற்படக் கூடிய தீர்வுத்திட்டம் முன்வைக்கப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
துரித கதியில் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கும் திட்டம் அரசாங்கத்திற்கு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களை சிங்களவர்கள் துன்புறுத்துவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
வடக்கை விடவும் அதிகளவான தமிழர்கள் தெற்கில் அமைதியான முறையில் வாழ்ந்து வருவதாகவும், வடக்கு மக்களுடன் இராணுவத்தினர் ஒரே உணவுத் தட்டில் உணவு உட்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க, பான் கீ மூனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் :

08.07. 2011  நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கம் உரிய முனைப்பு காட்ட வேண்டுமென ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.

 எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து இந்த சந்திப்பின் போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

 பக்கச்சார்பற்றதும், நம்பகரமானதுமான விசாரணைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை பான் கீ மூன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

 மனித உரிமை மீறல்கள் தொடர்பில் வெளிப்படைத்தன்மையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சமாதானத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

ஜனநாயக வழிமுறைகளில் சகல மக்களினாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 சர்வதேச சமூகத்தின் நாட்டின் நற்பெயரை நிலைநிறுத்தும் வகையில் அனைவரும் செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க,  பான் கீமூனைச் சந்தித்த போது புகைப்படம் எடுக்க ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

07-07-2011 எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க,  ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீமூனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியதாக என இன்னர்சிட்டி பிரஸ் தெரிவித்துள்ளது. சந்திப்பு நேற்று முன்தினம் பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெற்றது. இலங்கையில் யுத்தத்தின் பின்னரான நிலைமை குறித்தே இந்தச் சந்திப்பின்போது பேசப்பட்டது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 ரணில் விக்கிரமசிங்கவுடன் ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திரசில்வாவும் இந்தச் சந்திப்புக்காக பான் கீமூனின் செயலகத்துக்குச் சென்றிருந்தார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பின்போது புகைப்படம் எடுப்பதற்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்தச் சந்திப்பை புகைப்படம் எடுப்பதற்கு அனுமதிக்குமாறு ஊடகவியலாளர்கள் விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 கடந்தவாரம் இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர் சிபிலிவ்னி, ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீமூனைச் சந்தித்தபோது அதை புகைப்படம் எடுக்க அனுமதித்த ஐ.நா. அதிகாரிகள் நேற்றைய சந்திப்பை புகைப்படம் எடுக்க ஊடகவியலாளர்களை அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 அதேவேளை,  வழக்கமாக ஐ.நா. செயலாளர் நாயகத்தின் சந்திப்புகள் தொடர்பாக அவரது அதிகாரபூர்வ இணையதளத்தில் புகைப்படங்கள் வெளியிடப்படுவது வழக்கமாக இருந்தாலும், அதிலும் எந்தப் புகைப்படமும் வெளியிடப்படவில்லை.

இந்தச் சந்திப்புப் பற்றிய தகவல்களும் அதில் பிரசுரிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரணில் விக்ரமசிங்க, பான் கீ மூனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் :
 
 06-07-2011 - 1:42
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
 
அமெரிக்காவின் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் தலைமைக் காரியாலயத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
 
இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் குறிப்பிடப்படுகிறது. பிரித்தானியாவின் செனல்4 ஊடக ஆவணப்படம் தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இந்த சந்திப்பு குறித்த மேலதிக விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
போர்க்குற்ற விசாரணைக்கு வலியுறுத்துவது எதிர்மாறான விளைவை ஏற்படுத்தலாம்: அமெரிக்கா

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நாவும் சர்வதேச சமூகமும் நிர்ப்பந்திப்பது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தலாம் என அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.2009 ம் ஆண்டு மே மாதம் தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்கான இலங்கை இராணுவத்தின் யுத்தத்தின்போது போர் நிறுத்தத்தை ஏற்படுத்துமாறு மேற்கு நாடுகள் கோரியமை குறித்து கொழும்பு அரசாங்கமும் கவலையடைந்திருந்ததாக கூறப்படுகிறது.

அதேவேளை, வன்முறையான இனத்துவ பிரிவினை இயக்கமொன்றுக்கு எதிரான மிருகத்தனமான யுத்த வெற்றிக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பதில் இலங்கை ஒரு சோதனைக் களமாக உள்ளது எனவும் அவ்வறிக்கை கூறியுள்ளது.

2009 ம் ஆண்டு  தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான இராணுவ வெற்றிக்கு தலைமை தாங்குவதில் சிங்கள பெரும்பான்மை மக்களின் அமோக ஆதரவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொண்டிருந்தார் எனவும் அவ்வறிக்கை தெரிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்கான விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்ற மனித உரிமை அமைப்புகளினதும் பல நாடுகளினதும் கோரிக்கையை வீட்டோ அந்தஸ்துள்ள இரு நாடுகளின் எதிர்ப்பு காரணமாக பாதுகாப்பு சபை நிறைவேற்றும் வாய்ப்பு குறைவு எனவும் அவ்வறிக்கை தெரிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து விசாரிக்குமாறு ஐ.சி.சியை (சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்)  விசாரிப்பதற்கு பாதுகாப்புச் சபை கோரிக்கை விடுக்க வேண்டியிருக்கலாம். ஆனால் வீட்டோ அதிகாரமுள்ள ரஷ்யாவும் சீனாவும் பாதுகாப்புச் சபை இவ்விடயத்தில் தலையிடுவதை எதிர்ப்பதற்கான அதிகாரத்தை கொண்டிருக்கின்றன' என அதில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் போர்க் குற்றங்கள் தொடர்பாக குற்றவியல் விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நாவும் சர்வதேச சமூகமும் நிர்ப்பந்திப்பது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தலாம்.

ஏனெனில் அது சிங்கள தேசியவாதிகளின் மத்தியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செல்வாக்கையே அதிகரிக்கச் செய்யும் எனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.