குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2056

இன்று 2025, ஆடி(கடகம்) 18 ம் திகதி வெள்ளிக் கிழமை .

15.02.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

நாடு முழுவதும் லோக் அதாலத்தி்ல் 56,000 வழக்குகளுக்குத் தீர்வு

புது டில்லி:நாடு முழுவதும் நேற்று நடந்த 3வது லோக் அதாலத்தில் 56,000 வழக்குகளுக்குத் தீர்வுகள் காணப்பட்டன.இதுதொடர்பாக தேசிய சட்ட சேவைகள் அமைப்பு தெரிவித்திருப்பதாவது: அசாம், உத்தரப் பிரதேசம் தவிர்த்து, நாடு முழுவதும் தேசிய அளவிலான 3வது மக்கள் நீதிமன்றம்நேற்று நடைபெற்றது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து, நீதிபதி டி.எஸ். தாக்குர் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதில், மாலை 5 மணி நிலவரப்படி, நிலுவையில் இருந்த வழக்குகள் உள்பட 56,000 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

போராடு: கெஜ்ரிவாலுக்கு ஹசாரே டிப்ஸ்

புதுடில்லி: மாநிலத்தின் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு தரவில்லை என்றால், அதை எதிர்த்து கெஜ்ரிவால் போராட்டம் நடத்த வேண்டும் என காந்தியவாதி அன்னா ஹசாரே கூறி உள்ளார்.

 

கெஜ்ரிவால் மீது மோடி தாக்கு

புதுடில்லி: டில்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 'தேர்தலை முன்னிட்டு சிலர் (கெஜ்ரிவால்), அவர்களால் நிறைவேற்ற முடியாது என்று தெரிந்தும் பல வெற்று வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்துள்ளனர்,' என்று குறிப்பிட்டார். இலவச மின்சாரம் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை கெஜ்ரிவால் தேர்தலின் போது கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மோடியின் இந்த பேச்சிற்கு பதிலளித்துள்ள ஆம்ஆத்மியின் அசுதோஸ், பிரதமர் முதலில் மின்சார கிடைக்க உதவி செய்துவிட்டு பிறகு பேசட்டும் என தெரிவித்துள்ளார். ஆம்ஆத்மி குறித்து மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடு கூறுகையில், ஆம்ஆத்மி வாரணாசி மற்றும் அரியானாவில் தோல்வியடைந்த கட்சி என தெரிவித்துள்ளார். மேலும், ஆம்ஆத்மி அலை இல்லவே இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

பந்தலூர் பதற்றம் நீடிப்பு; தீ வைப்பு

ஊட்டி: பந்தலூர் பாட்டவயல் பகுதியில் புலி பெண்ணை அடித்து கொன்ற சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நிவாரணம் அதிகம் கேட்டு போராட்டம் நடத்திய பொதுமக்கள் வனத்துறை வாகனங்களுக்கு தீ வைத்தனர். சம்பவ இடத்திற்கு தீயைணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன.

 

கெஜ்ரிவால் வீட்டின் முன் போராட்டம்

புதுடில்லி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் முன் சாலை ஓர வியாபாரிகள் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

போலீசாரை தாக்க திட்டம்? பதற்றம்

ஊட்டி: நீலகிரி மாவட்டம், பந்தலூர் பகுதியில், பொதுமக்களை தாக்கி வரும் புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்க கோரி மறியல் போராட்டம் நடந்து வருகிறது. வனத்துறை அலுவலகங்கள் தாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வனப்பகுதிக்குள் புலியை பிடிக்க சென்றுள்ள போலீஸ் அதிரடிப்படை மற்றும் வனத்துறையினரை தாக்க பொதுமக்கள் திரண்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் உள்ள போலீசார் பந்தலூரில் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

 

நீலகிரியில் 144 தடை உத்தரவு?

ஊட்டி: நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் புலி தாக்கியதில் பெண் ஒருவர் பலியான சம்பவத்தை அடுத்து, பதுங்கி இருக்கும் புலியை சுட்டுப் பிடிப்பதற்காக 50 பேர் கொண்ட அதிரடிப்படை வனப்பகுதிக்குள் சென்றுள்ளது. இந்நிலையில், புலியை பிடிக்க வலியுறுத்தி, பாட்டவயல் என்ற இடத்தில் சாலை மறியல் நடந்து வருகிறது. புலியை பிடிக்க ஏற்கனவே, இரண்டு கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு கூண்டை வைக்கவும், கும்கி யானையை பயன்படுத்தவும் வனத்துறை முடிவு செய்தது. ஆனால், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கூண்டை எடுத்து செல்லவும், கும்கி யானையை அழைத்துச் செல்லவும் எதிர்ப்பு தெரிவித்து, மறியல் செய்தனர். இந்நிலையில், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நிலாக்கோட்டை வனத்துறை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி, நாசம் செய்தனர். மேலும், பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் கான்ஸ்டபிள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், அப்பகுதியில் பதற்றம் உருவாகி உள்ளது. பொது மக்களின் தாக்குதலை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு போடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

எரிசக்தி வளர்ச்சி அவசியம்:மோடி

புதுடில்லி: டில்லி விஞ்ஞான்பவனில் நடந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் மாநாட்டில், பிரதமர் நரேந்திரமோடி பேசுகையில், 'மனித குல வளர்ச்சிக்கு எரிசக்தி என்பது மிக அவசியம். எரிசக்தி என்பதை மெகாவாட் அளவுகளில் தான் பேசி வந்தோம், தற்போது ஜிகாவாட் அளவில் பேச துவங்கிவிட்டோம். நாட்டில் உள்ள ஏழைகள் தங்கள் குழந்தைகள் அதிகமாக படிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால், தேர்வு சமயங்களில், இரவு நேரங்களில் குழந்தைகள் படிக்க முடியாத நிலை தான் தற்போது நாட்டில் உள்ளது. எனவே, எரிசக்தி உற்பத்தியில் புதிய உச்சத்தை நாம் எட்டவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது,' என்று கூறினார்.

 

திக்விஜய்சிங்கிற்கு ஆம் ஆத்மி பதில்

புதுடில்லி: ஆம் ஆத்மி கட்சி கொள்கை இல்லாத கட்சி என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான திக்விஜய்சிங் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள ஆம் ஆத்மியின் அசுதோஷ், 'காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் என்ன கொள்கை வாழ்கிறதாம்,' என பதிலடி கொடுத்துள்ளார்.

 

கைகழுவுதல் கட்டாயமாகிறது

புதுடில்லி: மதிய உணவு சாப்பிடும் முன், மாணவர்கள் கைகழுவ வேண்டியதை கட்டாயமாக்க திட்டமிட்டுள்ள மத்திய அரசின் மனிதவளத்துறை, அதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன்படி, மதிய உணவு திட்டம் செயல்பட்டு வரும் நாட்டில் உள்ள அனைத்து துவக்கப்பள்ளிகளிலும், மாணவர்கள் சாப்பிடும் முன் கைகழுவுகின்றனரா என்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. மேலும், உணவு வகைகள், சூடாக வைத்திருக்க வேண்டும் என்றும், பேக்கிங் செய்யப்பட்ட பலசரக்கு சாமான்களை மட்டுமே, உணவு தயாரிக்க பயன்படுத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

 

டில்லியில் இளம்பெண் பலாத்காரம்

புதுடில்லி : தெற்கு டில்லியில் 25 வயது இளம்பெண் ஒருவரை அவரது ஆண் நண்பர், இன்னும் சிலருடன் இணைந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அப்பெண்ணின் நண்பரையும் அவருடன் இருந்தவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

 

தொடர்ந்து மீடியாவை சந்திக்கிறது ஆம்ஆத்மி

புதுடில்லி : டில்லியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆம்ஆத்மி அரசு, இனி மீடியாக்களை தொடர்ந்து சந்தித்து தங்கள் அரசின் புதிய திட்டங்கள், முடிவுகள் மற்றும் கொள்கைகள் குறித்த தகவல்கள் அவ்வப்போது தெரிவிக்க முடிவு செய்துள்ளது. இந்த செய்தியாளர் சந்திப்பு பிப்ரவரி 17ம் தேதி முதல் அனைத்து வேலை நாட்களிலும் மாலை 4 மணிக்கு நடைபெறும் எனவும் ஆம்ஆத்மி அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

 

ஹசாரே பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்.,:திக்விஜய்

துடில்லி : சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் போராட்டங்களின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்., உள்ளது என நான் கூறினால் என்னை யாரும் நம்ப மாட்டார்கள். என்னை பைத்தியம் என்பார்கள். ஆனால் விரைவில் அது உண்மை என்பதை விரைவில் நிரூபிப்பேன் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் தெறிவித்துள்ளார்.

 

இந்திய அணி வெற்றிபெற சிறப்பு யாகம்

போபால் : ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்காக போபாலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. போபால் கிரிக்கெட் ரசிகர்களால் இந்த யாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

கர்நாடகாவில் மீண்டும் பா.ஜ.க., ஆட்சி: ஷெட்டர் நம்பிக்கை

பெங்களூரு:கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜ.க.,ஆட்சியமைக்கும் என அந்தக் கட்சியின் மூத்த தலைவரும், மாஜி முதல்வருமான ஜெகதீஷ் ஷெட்டர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,அடுத்த சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முதல்வர் சித்தராமையா கூறியிருந்தார். ஆனால், அதை மறந்து அடுத்த தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக அவர் தெரிவித்துள்ளார். சித்தராமையாவுக்கு பதவி ஆசை வந்தவிட்டது. கர்நாடகத்தில் பா.ஜ.க.,வை அழித்துவிடலாம் என்று அவர் பகல் கனவு காண்கிறார். இந்தக் கனவு ஒருபோதும் பலிக்காது.2018-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க., வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்றார்.

 

காக்க வைக்கிறாங்க: எம்.பி.,க்கள் புலம்பல்

புதுடில்லி:'விமான நிலையங்களில், எம்.பி.,க் களை வரவேற்று அழைத்துச் செல்லவும், எவ்வித சிக்கலும் இல்லாமல் விமானங்களில் பயணம் செய்யவும், பார்லிமென்ட் குழு வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்' என, எம்.பி.,க்கள் வலியுறுத்தியுள்ளனர்.எம்.பி.,க்களின் வசதி, சலுகைகள், கட்டணங்கள் போன்றவற்றை தீர்மானிக்கும், பார்லிமென்ட் குழுவின் கூட்டம் வரும் திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இந்தக் குழுவின் கூட்டத்திற்கு, எம்.பி.,க்கள் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:விமான நிலையங்களில் நாங்கள், விமான நிலைய ஊழியர்கள், பாதுகாப்புப் படையினர் போன்றவர்களால் மனரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறோம். எம்.பி., என்பதற்கான அடையாள அட்டையை காண்பித்த பிறகும், 'டிக்கெட் எங்கே...' என, கேட்டு, ஊழியர்கள் நெருக்கடி கொடுக்கின்றனர்.நீண்ட நேரம் காக்க வைக்கப்படுகிறோம். சாதாரண ஊழியர்கள், தங்கள் மேலதிகாரிகளின் உத்தரவு பெறும் வரை, நாங்கள் காக்க வைக்கப்படுகிறோம்.எனவே, விமான நிலையங்களில், எம்.பி.,க்களை வரவேற்று, சிரமம் இல்லாமல் அழைத்துச் செல்ல அதிகாரிகளை நியமிக்க வேண்டும். வாகன கட்டண வசூல் மையங்களில், எம்.பி.,க்களின் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என, விதி உள்ளது. அடையாள அட்டையை காண்பித்த பிறகும், கட்டண வசூல் மைய ஊழியர்கள், பிற ஆவணங்களை கேட்டு தொந்தரவு செய்கின்றனர். இந்தப் பிரச்னைக்கு சரியான தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, எம்.பி.,க்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.உதவிகள் கோரி, எம்.பி.,க்களிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுப்பது வழக்கம். அதற்கு மாறாக, எம்.பி.,க்கள் கோரிக்கை மனு அளித்துள்ளது வினோதமாக உள்ளது.

 

குஜராத் கலவர வழக்கு: 70 பேர் விடுதலை

ஆமதாபாத:குஜராத்தில், 2002ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின் போது, 14 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்டிருந்த, 70 பேர் ஒட்டுமொத்தமாக விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் மீதான குற்றத்திற்கு ஆதாரம் இல்லை என தெரிவித்து, பனஸ்கந்தா மாவட்ட கோர்ட் அவர்களை விடுதலை செய்தது.கலவரத்தின் போது, 2,000த்திற்கும் மேற்பட்ட கும்பல், முஸ்லிம்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அப்பாவி குழந்தைகள், பெண்கள் என, 14 பேரை கொன்று குவித்தது.கடந்த 13 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட, 70 பேர் மீது, அவர்களின் குற்றத்தை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என தெரிவித்து, மாவட்ட நீதிபதி, வி.கே.புஜாரா அவர்களை நேற்று முன்தினம் விடுதலை செய்தார்.

 

மூன்று கடிதம் எழுதியும் மோடியிடமிருந்து பதில் வரவில்லை: ஹசாரே

புதுடில்லி: மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, தான் எழுதும் கடிதத்திற்கு அவர் பதில் தருவார். ஆனால் பிரதமர் மோடிக்கு மூன்று முறை கடிதம் எழுதியும் இதுவரை பதில் தரவில்லை என சமூக சேவகர் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.