குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

இறுதிக்கட்டப் போரில் 5 ஆயிரம் பொதுமக்களே கொல்லப்பட்டார்களாம்!கொலை வெறியில் அமைச்சர் மேர்வின்!

புதன், 06.7. 2011 07:11    .இலங்கையில் போர் நடந்த சமயத்தில் சமாதானச் செயலகத்தின் பணிப்பாளராக இருந்தவரும் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவருமான ராஜீவ விஜயசிங்க இலங்கைப் போரின் இறுதி கட்டத்தில் ஐயாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக பிபிசி தொலைக் காட்சியின் ஹார்ட் டாக் நிகழ்ச்சிக்கு அளித்த செவ்வியில் தெரிவித்துள்ளார். லங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதி மாதங்களில் நடைபெற்ற படை நடவடிக்கைகளை மனித நேய மீட்பு நடவடிக்கைகள் என இலங்கை அரசு வர்ணித்து வந்துள்ளது.

படை நடவடிக்கைகள் காரணமாக பொதுமக்களுக்கு உயிரிழப்பு ஏற்படக் கூடாது என்பதே தமது கொள்கையாக இருந்தது என்றும் அது கூறி வந்துள்ளது. பொதுமக்கள் யாரும் கொல்லப்படவில்லை என்று அந்நாட்டுத் தலைவர்கள் கூறிவந்தனர். ஆனால் இதை மனித நேய அமைப்புக்கள் நிராகரித்தன.

 
போர் முடிந்து 26 மாதங்களான பின்னர் அரசுக்கு எத்தனை பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பது குறித்து இப்போதாவது தெரியுமா என்று பிபிசி ஹார்ட் டாக் நிகழ்ச்சியில் ஸ்டிபன் சக்கர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ராஜிவ் விஜயசிங்க ஒட்டு மொத்தமாக 5 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றார்.

இதில் பொரும்பான்மையானவர்கள் டிசம்பர் 2008 ஆம் ஆண்டுக்கும் மே 2009 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஐ நா பொதுச் செயலரால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவும் இன்ன பிற அமைப்புக்களும் இறுதிப் போரில் நாற்பதாயிரம் பேர்வரை உயிரிழந்திருக்கலாம் என்று கணித்துள்ளனர்.

இலங்கை அரசு பொதுமக்கள் தரப்புக்கு உயிர் இழப்பு இல்லை என்று கூறி வரும் நிலையில் அரசின் மூத்த அதிகாரி தற்போது பிபிசிக்கு வழங்கிய செவ்வியில் ஐந்தாயிரம் பேர் வரை கொல்லப்பட்டனர் என்று கூறியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கொலை வெறியில் அமைச்சர் மேர்வின்!
புதன், 06 .07. 2011 07:32    .

இலங்கையின் களனி தேர்தல் தொகுதியில் டெங்கு நோயால் எவரேனும் ஒருவர் இறப்பாராக இருந்தால் அம்மரணத்துக்கு காரணமாக இருக்கின்ற அலுவலரை படுகொலை செய்வார் என்று தெரிவித்து உள்ளார் மஹிந்த அரசின் பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா.

இவர் களனி தொகுதியைச் சேர்ந்தவர். இத்தொகுதியில் முன்னெடுத்து வருகின்ற டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் கொடுத்தபோதே இவ்வாறு கூறினார்.

டெங்கு மரணத்துக்கு காரணமான அலுவலரைப் படுகொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொள்வார் என்று குறிப்பிட்டு உள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.