குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 10 ம் திகதி வெள்ளிக் கிழமை .

13 வயது சிறுவனை ராணுவம் சுட்டுக் கொன்றது இந்திய வரலாற்றில் நடந்திராத சம்பவம்-வைகோ

சென்னை: பழம் பறி்க்க ராணுவக் குடியிருப்புக்குள் சென்ற 13 வயது சிறுவனை ராணு வீரர் சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இந்திய வரலாற்றிலேயே இதுவரை நடந்திராத கொடூரமாக 13 வயது சிறுவன் தில்ஷன் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்.

ராணுவக் குடியிருப்பில் உள்ள மரங்களில் மாம்பழங்கள், பாதாம் கொட்டைகளை சிறுவர்கள் பறிப்பது என்பது வழக்கமான ஒன்று. அவர்கள் அவ்வாறு செய்வதால் எந்த ஆபத்தும் வந்துவிடப்போவதில்லை. பழம் பறி்க்க வந்த சிறுவனை எச்சரிக்காமல், தலையில் குறிபார்த்து சுட்டுக் கொன்றுள்ளது இரக்கமற்ற செயல் ஆகும்.

உயிரற்று தொங்கிய சிறுவனை ராணுவத்தினர் இழை, தலைகளைக் கொண்டு மறைத்துள்ளனர். ரத்தக் கறைகளையும் தண்ணீரால் கழுவி உள்ளனர். இத்தனையும் அங்குள்ள உயர் அதிகாரிகளுக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை.

அவன் உடன் சென்ற சிறுவர்கள் ஓடிவந்து தகவல் கொடுத்ததும் பெற்றோரும், உறவினர்களும், குடிசைவாழ் பகுதி மக்களும் அங்கு திரண்டு சென்ற பிறகு தானே உண்மை வெளியில் வந்துள்ளது.

இந்த சம்பவத்தையே மூடி மறைக்கும் வகையில் ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லவில்லை என்று ஒரு செய்தியைப் பரப்ப முயற்சி மேற்கொண்டனர்.

சிறுவனை சுட்டுக் கொன்ற கொலையாளியை ராணுவ உயர் அதிகாரிகள் தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். அந்தக் கொலையாளியை உடனே கைது செய்து சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.