குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 11 ம் திகதி சனிக் கிழமை .

யாழ் மக்களிடம் வாக்கு வேட்டையாட அரச உயர் மட்டப் பிரமுகர் குழு யாழில்இலங்கை இந்தியாவிற்கு எதிராக

04.07. 2011  யாழ் குடாநாட்டில் உள்ளுராட்சி சபைத் தேர்தல்க்களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் இலங்கையின் அரச உயர் மட்டப் பிரமுகர் குழு ஒன்று நேற்றையதினம் யாழ் குடாவிற்கு விஜயம் செய்துள்ளது. எதிர் வருகின்ற உள்ளுராட்சிச் சபை தேர்தலில் பொதுஜன ஐக்கிய முன்னணி சார்பில் போட்டியிடுகின்ற ஈ.பி.டி.பி. வேட்பாளர்களுக்கான பிரச்சார உத்திகளை வழங்கும்; கூட்டம் ஒன்று நேற்றைய தினம் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் அவசர அவசரமாக நிகழ்த்தப்பட்டிருக்கின்றது. இதே வேளை யாழ்ப்பாணத்தில் சீறிலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ் அலுவலகமும் திறந்துவைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களான ஜி. எல். பீரீஸ், சுசில் பிறேம ஜெயந்த, மைத்திரிபால சேனநாயக்க, டளஸ் அழகப்பெரும, திஸ்ஸ கரலிய, ஜெகத் புஸ்பகுமார மற்றும் மகிந்தானந்த அழுத்கமகே ஆகியோருடன் நாமல் ராஜபக்ச பசில் ராஜபக்ச ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.  இலங்கையரசு வடக்கில் மேற்கொள்கின்ற அபிவிருத்தி நடவடிக்கைகளை மக்களுக்கு எடுத்துக் கூறுமாறு வேட்பாளர்களை அமைச்சர்கள் கேட்டுக்கொண்டனர். குறிப்பாக இலங்கை அரசினால் மேற்கொள்கின்ற அபிவிருத்தி நடவடிக்கைகள் பற்றித் தமிழ் மக்கள் எதையுமே அறிந்திருக்கவில்லை என்பதால்
அவர்களுக்கு அதைக் கூறி வாக்குக் கேட்குமாறும கேட்டுக்கொண்டனர். இந்தத் தேர்தலில் பொதுசன ஐக்கிய முன்னணி வெல்லுமாவென சர்வதேசமும் குடாநாட்டிற்கு வெளியே உள்ளவர்களும் பார்ப்பதால் வெற்றி என்பது முக்கியம் என அவர்கள் வலியுறுத்தினர். இதனிடையே எதிர்வருகின்ற காலங்களிலே தமது அமைச்சர்கள் குழு பிரச்சார நடவடிக்கைக்கு யாழ்ப்பாணத்தில் விரைந்து செயற்படவுள்ளதாக உறுதி கூறப்பட்டது. உள்ளுராட்சிச் சபைத் தேர்தலுக்கான உத்திகளை வகுக்கப்படும் வகையில் நேற்றைய கூட்டம் இட்பெற்றிருந்தது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.  இதனையடுத்து இந்தக் குழுவினர் யாழ்ப்பாணம் நல்லூர் கோவில் வீதியில் திறக்கப்பட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத் திறப்புவிழாவிலும் கலந்துகொண்டனர். ஆனாலும் நாமல் ராஜபக்சவும் பசில் ராஜபக்சவும் ஜனாதிபதியின் அவசர அழைப்பினை ஏற்றுக் கொழும்பிற்குத் திரும்பிவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏனைய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் குழு ஒன்று இந்தத் திறப்புவிழா நிகழ்வில் கலந்துகொண்டிருந்த போதிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அந்தப்பக்கம் எட்டிப் பார்த்திருக்கவில்லை.எனினும் ஈ,பி.டி.பி.யின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரான சந்திரகுமார் அங்கு வருகை தந்திருந்தார்.  அவர் மாலை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டிருந்தார். இந்த அலுவலகம் தேர்தலுக்காண இணைப்பு அலுவலகமாகச் செயற்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இதனிடையே யாழ்ப்பாண உள்ளுராட்சி சபைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில்; அரசின் உயர்மட்ட அமைச்சர்கள்வரை பிரச்சார நடவடிக்கைக்காகக் களமிறங்கியுள்ளமை அதன் பெறுமதியை வெளிப்படுத்துவதாக அமைந்திருப்பதாகத் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தரப்புக்கள் கூறுகின்றன.


இலங்கை இந்தியாவிற்கு எதிராக செயற்படக் கூடிய அபாயம் காணப்படுகின்றது – யெயலலிதா
04 .07. 2011  இலங்கை, இந்தியாவிற்கு எதிராக செயற்படக் கூடிய அபாயம் நிலவி வருவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
 
இலங்கை அரசாங்கம் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் இணைந்து இந்தியாவிற்கு எதிராக செயற்படக் கூடிய ஆபத்து காணப்படுவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
பாகிஸ்தானைப் போன்றே சீனாவும் பல வழிகளில் இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக திகழ்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேபாளம் மற்றும் இலங்கையுடன் குறித்த இரண்டு நாடுகளும் இணைந்து கொண்டு இந்தியாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக அழுத்தங்களை பிரயோகிக்குமாறு மத்திய அரசாங்கத்தை தொடர்ச்சியாக தாம் வலியுறுத்தப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதாரத் தடை விதித்தல் மற்றும் கச்சதீவை மீளப் பெற்றுக் கொள்ளல் ஆகிய தீர்மானங்கள் ஏற்கனவே இலங்கைக்கு எதிராக தமிழக சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.