குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, புரட்டாசி(கன்னி) 28 ம் திகதி திங்கட் கிழமை .

இலங்கைப் பத்திரிகையின் பார்வையில்

 நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அரசியல் உரிமைகள் ஒரேசீராக நிலவ வேண்டும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அரசியல் உரிமைகள் ஒரேசீராக நிலவ வேண்டும் . 23.07.2011ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல்கள் அரசாங்கத்திற்கு மிகமுக்கியமான பரிசோதனைக் காலமாகும். இவ்ஆண்டு ஆரம்பத்தில் மார்ச் மாத அளவில் உள்ளூராட்சித் தேர்தல்களுக்கு நாள் குறித்து பின்னர் கொழும்பு, கண்டி, மாத்தறை போன்ற நகரங்களுக்கு அதனை அரசாங்கம் ஒத்தியும் வைத்தது. அக்காலப்பகுதியில் மக்களிடம் அரசாங்கத்திற்கான ஆதரவு ஓரளவு குறைந்து சென்றதாக உணரப்பட்டது. கூடிய பணவீக்கத்தின் காரணமாக அரசாங்கம் உறுதிகூறியிருந்த வேதனங்களின் அதிகரிப்பைக் கூட அரசாங்கத்தினால் நிறைவேற்ற முடியாதிருந்ததால் அரசாங்கத்திலிருந்தவர்களுடைய நம்பிக்கையும் கூட தேர்தல் முடிவுகளைப் பொறுத்து சிறிது தள்ளாட்டம் கொண்டிருந்தது. எனவே அரசாங்கம் தனது தேர்தல் வெற்றியினை உறுதிசெய்வதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதனைப் பொறுத்து குறிப்பாக வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் பாதிப்புக்குள்ளாகிய நகரப் பகுதிகளில் தேர்தலை ஒத்திப்போடச் செய்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
தேர்தல்கள் ஒத்திப்போடப்பட்ட இன்னுமோர் பகுதி நாட்டின் வட பகுதியாகும். ஆட்சியிலிருக்கும் கூட்டணியின் பெயர் தமிழ்மொழிக்கு மொழிபெயர்த்ததில் ஏற்பட்ட சிறிய தவறுக்காக பெரும்பாலான அக்கட்சியின் வேட்பாளர்களது அட்டவணை தேர்தல் ஆணையாளரால் நிராகரிக்கப்பட்டது.
உள்ளூராட்சித் தேர்தல்களை ஒத்திவைத்ததன் மூலம் அரசாங்கத்தினால் நிலைமையினை சமாளிக்க முடிந்தது. எவ்வாறாயினும் அரசாங்கம் எதிர்நோக்கும் சவால்கள் தொடருகின்றன. சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பகுதிகளில் அரசாங்கம் மார்ச் மாத தேர்தலில் பெரும் வெற்றியினை ஈட்டிய போதிலும் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக உள்நாட்டின் வடபகுதியில் வெற்றிபெற தவறிவிட்டது. தமிழ் மக்களது அதிகாரப் பரவலாக்கம் தொடர்பான அரசியல் உரிமைகளுக்காகப் போராடிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கு பெரும் வெற்றியினை ஈட்டியது.
அரசாங்கம் மத்திய தர வகுப்பினர் மற்றும் தொழிலாளர் வகுப்பினருக்குப் பொருளாதார அமைதி வாழ்க்கைக்கு வழி ஏற்பட தொடர்ந்தும் இயலாது இருப்பதால் வடக்கோ அல்லது தெற்கோ எங்காகிலும் எதிர்வரும் தேர்தலில் அரசாங்கம் குறிப்பாக நகரப்பகுதிகளில் வெற்றியடைவது பெரும் சவாலாகவே இருக்கும். மத்திய வங்கி உருவாக்கியுள்ள உயர் பொருளாதார அபிவிருத்தி வளர்ச்சி அளவுகள் நகர மக்கள் மீது நாட்டின் பணவீக்கத்தால் ஏற்பட்ட எதிர்மறையான தாக்கங்களை சமாளிக்க வழிதர முடியாது விட்டமைதான் மகிழ்ச்சியற்ற யதார்த்தமாகும். அண்மைக் காலங்களில் ஏற்பட்டுள்ள தொழிலாளர் அமைதியின்மை குறிப்பாக சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மற்றும் தொடர்ந்து செல்லும் பல்கலைக்கழக ஆசிரியர்களது கிளர்ச்சிகள் என்பன எவ்வாறு நகரப்பகுதிகள் அரசாங்கத்தின் மீது அதிருப்தியுடன் உள்ளன என்பதற்கு சிறந்த குறிகாட்டிகளாக இருப்பதுடன் அரசாங்கம் அவற்றைத் தாண்டி வெளிவருவது மிகக் கடினமாகும்.
சிக்கல் மிகுந்த நிலைவரம்
நாட்டின் வட பகுதி அரசாங்கத்திற்கு தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பெரும் சிக்கலான சவால்களைக் கொண்டதாக இருக்கும். யுத்தத்தின் இறுதிக்கால நடவடிக்கைகள் முற்றாக வடபகுதியிலேயே இடம்பெற்றது. அப்போது ஏற்பட்ட பெருமளவிலான பொருளாதார, சமூக உட்கட்டமைப்புகளையும் அவற்றினால் மனித வாழ்வின் இழப்புகளும் தடை செய்யப்படவில்லை. ஐ.நா. சபையின் செயலாளர் நாயகம் நியமித்த நிபுணர்கள் குழுவின் அறிக்கையும் பிரித்தானியாவில் உள்ள அலைவரிசை 4 தயாரித்த வீடியோ தகவல் படமும் யுத்தத்தினால் ஏற்பட்ட மனித செலவினங்களை எடுத்துக் காட்டுவனவாக உள்ளன. வட பகுதி மக்களது பிரச்சினைகள் சிலவற்றைத் தீர்ப்பதற்கான சில நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டிருந்த போதிலும் அங்கு வாழும் மக்களது எதிர்பார்ப்புகளை அரசாங்கம் செய்வனவற்றால் நிறைவேற்ற முடியாதே போயுள்ளது.
யுத்தம் முடிவுற்றதும் தென்பகுதிகளில் நிலவியது போன்றே வட பகுதியிலும் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகள் நிலவின. அதாவது சமாதானத்தின் பரிசாக முழுமையான மீள்குடியேற்றமும் புனருத்தாரணமும் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. யுத்தத்தினால் பெருமளவில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் பரிதாபகரமான நிலையில் வாழ்ந்து வருவது அதனை நேரில் காண்பவர்களுக்கு பெரும் மனத்துயரினை ஏற்படுத்துவதாகவே இருக்கும்.
இருந்த போதிலும் அரசாங்கம் அதன் வடக்கின் வசந்தம் போன்ற நிகழ்ச்சிகள் பற்றி தொடர்ந்தும் வற்புறுத்தி வருவது மக்களால் பாராட்டுக்குட்பட்டுள்ளது.
எதிர்வரும் தேர்தல்களில் அரசாங்கத்திற்கு அதன் விமர்சகர்களை ஒதுக்கிவிடக்கூடிய வகையில் வட பகுதியிலிருந்து கணிசமான ஆதரவு கிட்டலாம் என்றும் அம்மக்கள் அரசாங்கத்திற்கு சார்பாக ஆதரவு காட்டுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு உள்ளூராட்சித் தேர்தல்களில் குறிப்பாக வட பகுதியில் ஏற்படக்கூடிய வெற்றியின் மூலம் அரசாங்கம் ஐ.நா. சபையின் நிபுணர்கள் குழு அறிக்கை மற்றும் அலைவரிசை 4 வீடியோ செய்திப் படங்கள் என்பவை உள்ளடக்கியுள்ள தகவல்கள் மிகைப்படுத்தப்பட்டவை என மறுப்பதற்கு சாதகமான நிலைமையினை ஏற்படுத்த முடியும். மக்களுக்கு உடனடியாக காணக்கூடியதாக இல்லாததால் இருந்தாலும் அரசாங்கம் உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியது அவசியமான ஒரு உபாயமாகும். அது உடனடியாக வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகள் வழங்குவதாக இல்லாதும் இருக்கலாம். ஆயினும் அது மிக முக்கியமானதாகும். கொக்காவில் தொலைத் தொடர்பு வசதிக் கோபுரத்தைத் திறந்து வைத்த போது தொழில் வாய்ப்புகளையும் பொருளாதார வாய்ப்புகளையும் வெகுவிரைவில் வழங்கப்போவதாக அரசாங்கம் விபரித்தது. மறுபுரத்தில் பார்க்கும் போது மக்களுடைய அரசியல் ஆதரவினை வென்றெடுக்க வேண்டுமானால் அதனைத் தனியே பொருளாதார உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதால் மாத்திரம் வென்றெடுக்கவும் முடியாது. வட பகுதி தேர்தல் தொகுதி வாக்காளர்களின் வாக்களிப்பு தொடர்பான தீர்மானங்கள் பெருமளவான ஆட்சி தொடர்பான பிரச்சினைகளிலும் தங்கியுள்ளன.
யாழ்ப்பாணத் தாக்குதல்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் கூட்டத்தில் சீருடை அணிந்திருந்த இராணுவத்தினர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் சென்று (பௌதீக ரீதியாக) தாக்குதல்களை எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல்களை மனதில் வைத்து பார்க்க வேண்டியுள்ளது. அக்கூட்டத்தைத் தாக்கியமையை நியாயப்படுத்துவதற்காக அரசாங்க சார்புப் பேச்சாளர்கள் அக்கூட்டம் அனுமதிபெறாது நடத்தப்பட்ட கூட்டமெனக் கூறப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அக்கூட்டம் பொதுக்கூட்டம் அல்ல என்றும் பொலிஸாரின் அனுமதி அதற்குத் தேவையில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
சட்டபூர்வமான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் பொதுமக்களை பிரசைகளுக்கு எதிரான வன்முறையினைப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகும். இது இலங்கையின் யாப்புக்கு முரணானது. அத்துடன் அரசாங்கம் தான் வடபகுதி மக்களுக்கு பாரபட்சமின்றி தன்னால் இயன்றளவு பல நல்ல காரியங்களைச் செய்து வருவதுடன் இது முரண்படுவதாகவும் உள்ளது. வட பகுதியில் வழமை நிலையினை மீண்டும் கொண்டு வரும் முயற்சிக்கு இவ்வன்முறை பாதகமானது என்பதுடன் வட பகுதி மக்கள் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் விரும்புகின்றபோது சரியான சிந்தனையுடைய மக்கள் எவரானாலும் அவர்கள் அதற்காகப் பரஸ்பர மனித கௌரவமும் சமத்துவமான மனித உரிமைகளும் அடித்தளமாக இருக்கவேண்டுமென்றே கூறுவார்கள்.
அண்மையில் வடக்கிற்குச் சென்றிருந்த போது அங்குள்ள பாடசாலை ஆசிரியர்கள் உட்பட பல மக்களுடனும் பேசிய போது அவர்கள் பாடசாலைக் கூட்டங்கள் உட்பட்ட அனைத்துக் கூட்டங்களுக்கும் இராணுவ அனுமதி தேவைப்படுகின்றது என நம்புவதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன், கூட்டத்தை ஏற்பாடு செய்பவர்கள் இராணுவத்தினரையும் அக்கூட்டத்திற்கு அழைக்கவேண்டுமெனவும் அக்கூட்டத்தில் இராணுவ அதிகாரத்திற்கு எதிராக எதுவும் பேசப்படுகின்றதா என்பதனை அறிந்துகொள்வதற்காக இவ்வாறாக நிர்ப்பந்திக்கப்படுவதாகவும் கூறினர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பல பாராளுமன்ற உறுப்பினர் கலந்துகொண்டிருந்தனர். அதேசமயம், அரசாங்கம் தான் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வழமை நிலைமையையும் அமைதியையும் நிலைநாட்டியுள்ளதாகவும் கூறி வருகிறது.
தேசிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் பற்றி சம்பிரதாயமானமுறையில் சிந்திப்பவர்களது சிந்தனையில் ஒரு யுத்தத்தின் பின்னர் வடக்கில் பலமான இராணுவத்தின் பிரசன்னம் இருக்க வேண்டுமென்ற எண்ணம் இருக்கலாம். எவ்வாறாயினும் பொதுமக்களது அன்றாட வாழ்க்கையில் ஆயுதப் படைகள் தலையிடும் சூழலில் நல்லிணக்கத்தையோ அல்லது மக்களுக்கு பாதுகாப்பு உண்டு என்ற எண்ணத்தையோ ஏற்படுத்த முடியாது.
பொதுமக்களது சிவில் தன்மையினதான கூட்டங்களில் அச்சுறுத்தும் தலையீடுகள் அச்சத்தையும் ஒரு பிளவுபடுத்தும் உணர்வினையுமே ஏற்படுத்துவதுடன், அரசாங்கத்தின் தொலைநோக்கான"மீள ஐக்கியப்படுத்தப்பட்டதும் சமாதான நிலப்பரப்பும்' என்ற நோக்கம் இடையூறுகளாக்கப்பட்ட நாட்டின் ஏனைய மக்களுடன் தமிழ் மக்களது இதயங்களையும் எண்ணங்களையும் வென்று நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கு இது வழி அல்ல. தமிழ் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற பிரதிநிதிகளை சமாதானமான முறையில் தனிப்பட்ட அரசியல் கூட்டமொன்றை நடத்த அனுமதிக்காததன் காரணமாக நாட்டில் சிறுபான்மை இனக் குழுக்கள் அரசியல் ரீதியாக ஓரங்கட்டப்படுகின்றனர் என்பது மேலும் வலுமைப்படுத்தப்படுவதுடன் ஜனநாயக உரிமைகள் ஒடுக்கப்படுவதாகவும் உள்ளன.
அவ்வாறான ஜனநாயக உரிமைகளை ஒடுக்கியமை காரணமாக கடந்த காலங்களில் ஏற்பட்ட ஆபத்தான விளைவுகளை நாம் மறக்கக்கூடாது.
வடக்கில், தேர்தல் தொகுதிகளில் வெற்றியடைய வேண்டுமானால் நாட்டின் ஏனைய பகுதிகளில் காணப்படும் அதே அரசியல் உரிமைகளை வடக்கில் வாழும் மக்களுக்கும் கிடைக்கக்கூடியதாகச் செய்ய வேண்டும். எனவே அரசாங்கம் தன்னை விமர்சிப்பவர்களை வென்றெடுக்க எதிர்பார்க்கும் தேர்தல் வெற்றியினை உறுதிசெய்ய வேண்டுமானால் அதற்காக நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் அரசியல் உரிமைகள் ஒரு சீராக நிலவவேண்டும்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.