குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, புரட்டாசி(கன்னி) 28 ம் திகதி திங்கட் கிழமை .

காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ்கள்- தமது பிள்ளை வருவான் என்ற ஏக்கத்தில் பல பெற்றோர்!

   03.07.2011.த.ஆ.2042-கைது செய்யப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் போனவர்கள் மரணமடைந்து விட்டார்கள் என உறுதிப்படுத்தும் மரணசான்றிதழை பெறுவதற்கான சட்ட மூலம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையடுத்து கடந்த 20 வருடங்களுக்கு மேலாகவும் காணாமல் போன பலரின் உறவினர்கள் மரணசான்றிதழுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். காணாமல் போனவர்களுக்கு மரணசான்றிதழ் வழங்கும் நடமாடும் சேவை கடந்த 14ஆம் திகதி முதல் நேற்று 18ஆம் திகதி வரை மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களிலும் நடத்தப்பட்டது.
1990ஆம் ஆண்டு முதல் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் போயிருந்தனர். 1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வந்தாறுமூலை பல்கலைக்கழக அகதி முகாம், சத்துருக்கொண்டான், செங்கலடி, என பல இடங்களில் நூற்றுக்கணக்கானவர்கள் சிறிலங்கா இராணுவத்தினராலும், முஸ்லீம் ஊர்காவல்படைகளாலும், புளொட், ஈ.பி.டி.பி போன்ற தமிழ் ஆயுதக்குழுக்களாலும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கடத்திச்செல்லப்பட்டனர். கடத்தச்செல்லப்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என கருதப்படுகின்ற போதிலும் அவர்களின் சடலங்கள் மீட்கப்படாததால் அவர்கள் காணாமல் போனவர்களாகவே கருதப்பட்டு வருகின்றனர். அவர்கள் இறந்ததற்கான மரணசான்றிதழ்கள் இதுவரை வழங்கப்படவில்லை.
நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட 2010 ஆம் ஆண்டு 18 ஆம் இலக்க இறப்பு பதிவுச் சட்டத்தின் கீழ் யுத்த சூழல், இயற்கை அனர்த்தங்கள் உட்பட பல்வேறு சந்தர்ப்பங்களில் காணாமல் போன அல்லது இறந்தவர்களின் மரணங்களை பதிவு செய்து மரண சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கையின் கீழ் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் கடந்த 14 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை இடம்பெற்ற நடமாடும் சேவையில் 300 க்கும் மேற்பட்டோர் மரணச் சான்றிதழ்களைப் பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளனர்.
செங்கலடிப்பிரதேசத்தில் மட்டும் 1990ஆம் ஆண்டுக்கு பின் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ள போதிலும் சுமார் 300பேரை மரணசான்றிதழுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஏனையவர்கள் தமது பிள்ளைகள் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர்.
1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமில் 160இளைஞர்கள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பஸ்களில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் எவரும் விடுதலை செய்யப்படவில்லை. பின்னர் தாம் இவர்களை கைது செய்யவில்லை என இராணுவம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமது பிள்ளைகள் திரும்பி வருவார்கள் என சில பெற்றோர் நம்பி காத்திருக்கின்றனர். இவ்வாறானவர்கள் மரணச்சான்றிதழுக்கு விண்ணப்பிக்கவில்லை.
இனிமேல் அவர்கள் திரும்பி வரப்போவதில்லை என நம்புகின்றவர்கள் மரணசான்றிதழுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
கடந்த காலங்களில் இருந்த நடைமுறையின்படி ஒருவர் காணாமல் போயிருந்தால் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டு 6 மாதங்களின் பின்னர் மரண விசாரணை நடைபெற்று மரணத்தை உறுதிப்படுத்தும் இரு சாட்சிகளின் வாக்கு மூலங்கள் பெறப்பட்ட பின்னரே மரண சான்றிதழ் பதிவாளரினால் வழங்கப்படுவந்தது.
தற்போது நடைமுறைக்கு வந்துள்ள திட்டத்தின்படி மரண விசாரணை இல்லாமல் இலகுவான முறையில் மரண சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.
கிழக்கு மாகாணத்தில் காணமல் போனவர்களை அல்லது இறந்தவர்களைப் பதிவு செய்து மரணச் சான்றிதழ் வழங்குவதற்கான நடமாடும் சேவை முதற் கட்டமாக மட்டக்களப்பு செங்கலடிப் பிரதேசத்தில்   தேசிய நல்லிணக்க அமைச்சும், ஐ.நா. அபிவிருத்தி திட்டமும் இணைந்து ஏற்பாடு செய்து நடைபெற்ற நடமாடும் சேவை 14 ஆம் திகதி பங்குடாவெளியிலும் 17ஆம் திகதி ஆறுமுகத்தான்குடியிருப்பிலும் 24 ஆம் திகதி செங்கலடி பிரதேச செயலகத்திலும் 28 ஆம் திகதி சித்தாண்டியிலும் இடம்பெற்றது.
பாதுகாப்பு தரப்பு மற்றும் ஆயுதக் குழுக்களினால் கைது செய்யப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் போய் பல வருடங்கள் கடந்து விட்ட நிலையில் தமது உறவுகள் உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கை இழந்த நிலையிலேயே மரண சான்றிதழ்களைப் பெறுவதற்காக தாம் வந்திருந்ததாக அவர்களில் பலரும் குறிப்பிட்டனர்.
மரண சான்றிதழ்கள் இல்லாத காரணத்தினால் பல்வேறு சிரமங்களையும் தாம் எதிர்நோக்குவதாகவும் அவர்களில் சிலர் கூறினர்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் காணாமல் போனவர்கள் தொடர்பாக அவர்களது உறவினர்களில் ஒரு சாரார் மரண சான்றிதழ்களைப் பெறுவதில் தற்போது ஆர்வம் கொண்டிருந்தாலும் மற்றுமொரு சாரார் காணாமல் போன உறவுகள் இன்னும் உயிருடன் இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கை காரணமாக அதில் ஆர்வம் காட்டவில்லை.
ஐ.நா. அபிவிருத்தி திட்டத்தின் அதிகாரியான சட்டதரணி ஏ.ஆர்.எம்.சுல்பி ‘இங்கு பெறப்பட்டுள்ள விண்ணப்பங்கள் மற்றும் விபரங்கள் அடிப்படையில் காணாமல் போனவர்கள் தொடர்பான விபரம் பிரதேச செயலகத்திலும், கிராம உத்தியோகத்தர்கள் அலுவலகங்களிலும் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். பொது மக்களிடமிருந்து ஆட்சேபனை மற்றும் எதிர்ப்புகள் இல்லாத பட்சத்தில் இருமாத காலத்திற்குள் மரண சான்றிதழ்கள் கிழக்கு மாகாண மேலதிக பதிவாளர் நாயகத்தினால் வழங்கப்படும்’ என தெரிவித்தார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.