குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, புரட்டாசி(கன்னி) 28 ம் திகதி திங்கட் கிழமை .

சுதத்திரமான விசாரணைகளை முன்னெடுக்க தவறினால் சர்வதேச விசாரணைக்குத் தள்ளப்படுவது தவிர்க்க முடியாது

 03.07. 2011  ரணிலிடம் தெரிவிப்பு:-அமெரிக்கா சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கரமசிங்க அமெரிக்க முன்னாள் பிரதி ராயாங்கச் செயலாளர் ரிச்சர்ட் அமீட்டேச்யை சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பு நேற்று இடம்பெற்றதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆமிரேச் உடனான இந்தச் சந்திப்பின் போது இலங்கை அரசியல் நிலவரம் தொடர்பில் இருவரும் நீண்ட நேரம் உரையாடியதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பின்போது  யுத்தத்தின்; பின்னரான இலங்கையின் அரசியல் நிலவரம் மீள்குடியேற்றப்பட்ட தமிழ் மக்களுக்கான வாழ்தார நிலைப்பாடு, அகதிமுகாம்களில் வாழும் மக்களின் நிலைமை மற்றும் செனல் - 4 தொலைக் காட்சியின் 'இலங்கைக் கொலைக்களம்' ஆவணக் காணொளி குறித்து கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டதாக தெரியவருகிறது.
.
சர்வதேச ரீதியாகத் சிக்கலான நிலைக்குள் தள்ளப்பட்டுள்ள இலங்கை அரசாங்கம்  தன்னைக் குற்றமற்றமற்றவர் என நிரூபிக்கும் வகையில் எந்தப் பின்னடிப்புகளும் இன்றி யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகள் குறித்து சுதத்திரமானதும் விரைவானதுமான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர் அவ்வாறு இலங்கை அரசாங்கம் நடந்து கொள்ளத் தவறினால் சர்வதேச ரீதியான விசாரணைக்குத் தள்ளப்படுவது தவிர்க்க முடியாது போய்விடும் என்றும் ரணிலிடம் தெரிவித்தார் என்றும் கூறப்படுகிறது.
.
இதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவின் அமெரிக்க பயணத்தின் நிகழச்சி நிரலுக்கு அப்பாலும் அவர் பல ராயதந்திரிகளைச் சந்தித்து இலங்கை நிலவரம் தொடர்பில் விளக்கியுள்ளார். கனேடிய அரசாங்கத்தின் அமைச்சரான யேம்சு மூரையும் அமெரிக்க காங்கிரசுன் உயர் மட்ட அதிகாரிகளையும் அவர் வாஷிங்டனில்  சந்தித்துப் பேசியுள்ளார்.
.
சிறைவைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தொடர்பிலும் இந்தச் சந்திப்பின் போதபிரசுதாபிக்கப்பட்டதாகத் தெரிய வருகிறது.இதேவேளை ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த சமாதான காலத்தில் அமரிக்காவுடன் மிக நெருங்கிய உறவுகளைக் கொண்டிருந்தார் என்பதும் அப்போது முன்னாள் பிரதி ராயாங்கச் செயலாளர் ரிச்சர்ட் அமீட்டேய் உடன் நட்புடையவராக இருந்தார் என்பதும் அப்போதைய காலத்திலேயே இராணுவ ரீதியான மிக முக்கிய ஒப்பந்தங்களை இலங்கை அமரிக்காவுடன் மேற்கொண்டது என்பதும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.