குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

சுவிற்சர்லாந்து பேர்ண் வள்ளுவன் பாடசாலையின் தைப்பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு விழா 2046

காரிக்கிழமை  2 மணி முதல்  இரவு 10.30மணி வரை நிகழ்வுகள் இடம் பெற்றன.  சுவிற்சர்லாந்தின் தலை நகரான  பேர்ண் நகரில் இயங்கிவரும் பேர்ண்  வள்ளுவன்பா டசாலையின் தைப்பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு விழா  மாண வமணிகளின் பலகலைநிகழ்ச்சிகளுடன்  இடம் பெற்றது. இந்த நகரின் பிரபலமான  திரட்டு(Der Bund)  என்ற பத்திரி கை 19 பக்கத்தில் தமிழ்புத்தாண்டு 2046 என்ற தலைப்பில் சிறுவர்களின் படங்களுடன் (படங்களுக்கு இங்கே அழுத்தவும்) செய்தியை வெளியிட்டுள்ளது.

பேர்ண் நகரின் பல அதிகாரிகள் பங்கு கொண்டதுடன், பத்திரிகை ஆசிரியர்கள் இவர்களுடன் பேர்ண் நகரசபையின்  முதன்மை  நிர்வாகி -முதன்மை நகர உறுப்பினர் திருமதி ஊர்சுலா. வீசு(ஸ்) அவர்கள்  பிரதம விருந்தினராகக் கலந்து  கொண்டு  பேர்ண்நகர சுவிசர் மக்களின் சிறப்பியல்புகள் மற்றும். உலகநகரங்களில் பேணின் சிறப்பபை எடுத்து விளக்கினார். சென்றாண்டு நடந்த   தேர்தலில் இந்த நாட்டில் வெளிநாட்டவர்கள் வரகைக்கு எதிரான வாக்குகளும் ஆதரவான வாக்குகளும் கிட்டத்தட்ட சமனாகப்பதிவாகின  அனால் பேர்ண் நகரமக்கள் மட்டும்  அதிக வித்தியாசமாக 72 விழுக்காடு வெளிநாட்டவர்  வருகையை ஆதரித்துவாக்க ளித்தார்கள். இது உலகில் எங்கும் இல்லாத ஒன்றுஅதைநீங் கள் புரிந்து கொள்ளுங்கள். உங்களுடடைய பண்பாட்டு அடை யாளம்  அழிந்து போகாது இருக்கவும், எதிர்காலத் தலைமுறையினருக்கு பண்பாட்டைக்கடத்தவும்  இத்த கைய பெருமுய ற்சிகள்  தேவைபடுகின்றன என்பது உண் மையே அவற்றை நீங்கள் செவ்வனே செய்கின்றீர்கள் என்ப தை  இந்த நிகழச்சி களின்  கட்டொழுங்குகள் மூலம் உணர முடிகிறது. திரை விலகியது விளக்கை எற்றினோம், திருவ ள்ளுவர் உருவத்தை பல்லக்கில்  காவிவந்தீர்கள். உங்கள் நாட்டில் போரில்இறந்தவர்களுக்காக வழிபட்டீர்கள். திருக் குறளை ஓதினீர்கள், பாடசாலைக் கான பாடலைப்பாடுகின் றீர்கள், எங்களை எல்லாம் விதம்விதமா கக்கௌரவப் படுத்துகின்றீர்கள். இவை கள் எங்களைமெய்சி லுக்க வைத்தன. சிறிய பிள்ளைள் அழ கான உடைகள் அணி ந்து நடன மிட்டனர் பாடினர்  பேசினர் நல்ல சுவையானஉண வுகள் சிற்றுண்டிகள் பரிமாறிக் கொ ண்டீர்கள் . இவை உங்க ள் பண்பாட்டின் உயர்வைக்காட்டுகி ன்றன.

உங்கள் தமிழ்ப்புத்தாண்டு  விழாவில்  வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். திருவள்ளவர் பொதுவாக நல்லகருத்தக்கள் உள்ள குறள்களைத்தந்தாலும் எவரும்  பொறுமையாக  செயற்பட்டால் வெற்றிதான் என்பதை அவர் வலியறுத்தி உள்ளார். இதனை நீங்கள் உணர்ந்து வாழுங்கள் என்று திருவள்ளுவரின் சிறப்பையும் பெருமையைகளையும் எடுத்துக்கூறிச் சென்றார்.

மாணவர்கள் தயாரித்து வழங்கிய அழியும் மொழியா என் ற  நாடகம் ஒன்று திரைக்காட்சியாக காண்பிக்கப் பட்டது. அதில்  அழியும் மொழிகளின் வரிசையில் தமிழ்மொழி. அழிக்கும் வகையினில் தமிழினம் முன்னணி. தாயும் சேயும் பேசுவதோ  அன்னிய மொழி. அழியாதோ நம் தமிழ்மொழி. தடுத்திட முயற்சிகள் வேண்டமோ! என பூநகரி .பொ.முருகவேள் ஆசிரியர் அவர்களால்  எழுதப்பட்டு இப்படியாகத் தொடரும் பாடலுக்கான இசையை தமிழகத்தில்  அமைத்து பாடலுக்கான மாண வர்களின் நடனக்காட்சிகளும் இடம்பெற்றிருந்தன... நடைமுறையில் சுவிற்சர்லர்லாந்து தமிழ்ப்பிள்ளைகள் நன்கு தமிழ்பேசுவார்கள்  என்ற பெருகைள் பாராட்டக்கள் இருந்தாலும் எதிர்காலத்தில் ஏன் அடுத்த அடுத்த தலை முறைகள் மொறீசியசு தமிழர்கள் போல ஆகாது என்ற ஐயம் எம்மில் இருக்க வேண்டும்   அப்படி ஆகாமல் இருக்க எங்களிடம் பல புதிய முயற்சிகள் தேவை என்பதை எடுத் தியம்புவதே  இந்த நாடகத்தின் கருவாக  இருந்தது.