குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்- 700 அகதிகள் உண்ணாவிரதம்கதிர்காமம் திருவிழா இன்று ஆரம்பமாகியது

  02.07.2011.த.ஆ.2042--ஈழத்தமிழர் அகதி முகாமில் 3வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்- 700 அகதிகள் உண்ணாவிரதம்
கதிர்காமம் திருவிழா இன்று ஆரம்பமாகியது(01.07.2011)- இம்முறை பெருந்தொகையான பக்தர்கள்!! தமிழ்நாடு புதுப்பட்டு அகதி முகாமில் உள்ள 3வயது குழந்தை ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானதால் குற்றவாளி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த முகாமில் உள்ள சுமார் 700 அகதிகள் இன்று காலையில் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக சென்னையில் உள்ள மனிதம் மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
நேற்று இரவு திவ்வியா என்ற 3வயது குழந்தை மீது முதலியார் குப்பத்தை சேர்ந்த 23 வயதான சுகுமாரன் என்ற மீனவர், வீட்டிற்குள் புகுந்து பாலியல் பலாத்காரம் புரிந்ததாக ஈழத்தமிழ் அகதிகள் தெரிவித்துள்ளனர்.
பெற்றோர் இல்லாத வேளையில் அவர்களின் குடிசைக்குள் புகுந்து 3வயது குழந்தை திவ்யாவை பாலியல் வன்முறை செய்து, குழந்தையின் கன்னங்களை கடித்து துன்புறுத்தியுள்ளான். அலறல் சத்தம் கேட்டதும், குழந்தையின் தாய் தேவதர்சினி, ஓடி வரும் முன்னர், குழந்தை திவ்யாவை தூக்கி கொண்டு வீட்டை விட்டு ஓடியுள்ளான்.
ஆட்கள் துரத்தவே, குழந்தையை கீழே எறிந்துவிட்டு ஓடிவிட்டான். படுகாயம் அடைந்த குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு மனிதம் அமைப்பின் இயக்குனர் அக்னி சுப்பிரமணியம் தினக்கதிருக்கு தெரிவித்துள்ளார்
இவ்வம்பவம் நடந்தவுடன், நேற்று இரவு அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
காவல்துறையில் புகார் செய்யப்பட்ட போதிலும் அவர்கள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சுமார் 700பேர் இன்று உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
இன்று காலை சம்பவ இடத்திற்கு காவல்துறை உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் தலைமையில் சென்ற சில அதிரடிபடையினர் இலங்கை அகதிகளையும் மிரண்டுவதாக தமக்கு புகார் கிடைத்துள்ளதாக மனிதம் மனித உரிமைகள் அமைப்பின் இயக்குனர் அக்னி சுப்பிரமணியம் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட குழந்தை அகதி முகாமில் உள்ள ஈழத்தமிழர்களான ரகுநாதன் தேவதர்சினி தம்பதிகளின் 2ஆவது குழந்தையாகும்.
பாலியல் பலாத்காரத்தை புரிந்த நபரான சுகுமாரன் என்பவர் அந்த முகாமிலிருந்து 200 மீட்டர் அருகில் உள்ள முதலியார் குப்பத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தை பெரிது படுத்தக்கூடாது என காவல்துறையினர் ஈழத்தமிழ் அகதிகளை அச்சுறுத்தி வருவதாக மனிதம் அமைப்பு தெரிவித்துள்ளது

கதிர்காமம் திருவிழா இன்று ஆரம்பமாகியது- இம்முறை பெருந்தொகையான பக்தர்கள்!

வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காம முருகன் ஆலய ஆண்டுத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இன்று முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை தினமும் இரவு வேளையில் கதிர்காம கந்தனின் வீதியுலா இடம்பெறவுள்ளது பண்டைய இயக்கர் நாகர்கால வேடர்கால வழிபாட்டுமுறை ஆரியமுறையற்ற திராவிடமுறையில் வழிபாடு நிகழும் கோவிலில் காதிர்காமம் முதன்மையானது. மொழி சிங்களமாயினும் முறைதமிழ் முகப்பில் இருந்த ஓம் மகிந்தகாலத்தில் பிடுங்கப்பட்டுவிட்டது.தமிழ் அகற்றப்பட்டு சிங்களம் ஏற்றப்பட்டுள்ளது. இதைதமிழர்கள் வழக்குப் போட்டு தொடர்திருக்க வேண்டும்  இதற்கு  அமைதிகாத்ததாலேதான்  இன்று யாழ்ப்பாணத்திலும் இவை இடம்பெறுகின்றது..
இன்று நடைபெறவுள்ள கொடியேற்த்தை காண்பதற்காக வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருந்திரளான பக்தர்கள் கதிர்காமத் திருத்தலத்தில் கூடியுள்ளனர். இதேவேளை பல நாட்களாக பாதயாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் கதிர்காமத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து கதிர்காமதத்திற்கு விசேட போக்குவரத்து சேவைகள் நடத்தப்படுகிறது.
இதேவேளை ஆலயப்பகுதியில் பெருந்தொகையான காவல்துறை மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு தங்குமிட வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்காக வெல்லவாய கல்வி வலயத்திலுள்ள நான்கு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.