குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, புரட்டாசி(கன்னி) 28 ம் திகதி திங்கட் கிழமை .

மரியாதை தெரியாத யாழ்மாநகரசபை உறுப்பினராக.... கற்றவர்களும் பண்பாளர்களும் ஓராங்கட்டப்பட்டதால்

 01ஆடி.2011த.ஆ.2042 மரியாதை தெரியாத யாழ்மாநகரசபை உறுப்பினராக .... கற்றவர்களும் பண்பாளர்களும் ஓராங்கட்டப்பட்டதால் தமிழர்மானம் பறக்கிறது.உலகம்சிரிக்கிறது.நேரடி ஒலிஒளிபரப்பையும் வெளியிடவுள்ளோம். யாழ். மாநகர சபையின் எதிர்கட்சி உறுப்பினர் நான்தான் என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்றும் என்னைத்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவு செய்தார்” எனத் தெரிவித்து சபை நடுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ். மாநகர சபை உறுப்பினர் பரஞ்சோதி மீது தண்ணீர் போத்தலை வீசி எறிந்து அடாவடித்தனம் செய்துள்ளதுடன் கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு இருந்தார் யாழ். மாநகர சபை எதிர்கட்சித் தலைவர் முடியப்பு றெமிடியஸ்.

இன்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு யாழ். மாநகர சபையின் 2011 ஆண்டுக்கான ஆறாவது கூட்டத் தொடர் யாழ். நகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எதிர்கட்சி உறுப்பினர் முடியப்பு றெமிடிஸை உரையாற்றுமாறு மேயர் அழைப்பு விடுத்திருந்தார்.

 இவரது அழைப்பை எதிர்கட்சி உறுப்பினர் பரஞ்சோதி ஆட்சேபனை தெரிவித்ததும் முடியப்பு றெமிடியஸ் “நீ இருடா நாயே உனக்கு என்ன வெறியா” என மிகவும் கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களை சபையில் பேசியவாறு எதிர் கட்சி உறுப்பினர் மீது தாக்குவதற்கு முயன்றுள்ளார்.

உடனே யாழ்.மாநகர சபை எதிரணி உறுப்பினர் கனகரெத்தினம் விந்தன் இருவரையும் மோத விடாமல் தடுத்து நிறுத்தினர்.

பரஞ்சோதி முடியப்பு றெமிடியஸின் அடாவடித்தனத்துக்கு கடும் நடவடிக்கை எடுக்குமாறு மேயரிடம் வேண்டுகோள் விடுத்தார் அவரது பணிப்பை மேயர் எதுவும் செய்யமுடியாது எனத் தெரிவித்ததும் யாழ். பொலிஸாருக்கு தொடர்பு கொண்ட பரஞ்சோதி தொலைபேசியின் ஊடாக முறையிட்டுள்ளார்.

முடியப்பு றெமிடியஸின் இந்த அநாகரிகமான செயற்பாடு காரணமாக யாழ். மாநகர சபை அல்லோலப்பட்டது. அநாகரிகமான வார்த்தைப் பிரயோகங்களினால் சபை திக்குமுக்காடியது.

யாழ் நகரத்தின் கண்ணாடியாக அதனைப் பிரதிபலிக்கும் விம்பமாக விளங்கும் மாநகரசபையில் இவ்வாறான அசிங்கங்கள் நிகழ்வது உண்மையிலேயே கண்டிக்கத்தக்கது.

சுவிசில் அழகிய தமிழ் பெண் திடீர் மாயம்!
வெள்ளி, 01 ஆடி 2011 00:10 .

அழகிய தோற்றம் உடைய இலங்கைத் தமிழ் பெண் ஒருவர் சுவிற்சலாந்தில் கடந்த இரு வார காலமாக மர்மமான முறையில் காணாமல் போய் உள்ளார்.

இவரின்   அகவை 17.

வீட்டை விட்டு கடந்த 16 ஆம் திகதி புறப்பட்டு இருந்தார். இன்னமும் திரும்பி வரவில்லை.

இவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.