குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

வடக்கில் பரவும் விபச்சாரம் எனும் தொற்று நோய்!

வியாழன், 30 ஆனி 2011 மணித்தியாலத்துக்கு எவ்வளவு தருவாய்...? இது ஒரு இருபத்திஐந்து வயது மதிக்கத்தக்க பெண்ணின் வாயில் இருந்து வந்த வார்த்தை.. அதுவும் வவுனியா பஸ் தரிப்பிடத்தில்... ஆம் இப்போது வடக்கில் விபச்சாரம் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது... வீடுகள் விடுதிகள் என்று சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும்... இயங்கி வந்த விபச்சாரம் இப்பொழுது நடமாடும் வியாபாரமாக மாறியுள்ளது.

குறிப்பிட்ட இடங்களுக்கு தொலைபேசி ஊடாக அழைத்தாலே போதும் அழைத்த இடத்திற்கு அழைத்த நேரத்தில் சமூகம் அளிக்கின்றனராம். அதைவிட குறிப்பிட்ட வீதியோரங்களில் சந்திகளில் பஸ்தரிப்பிடங்களில் அவர்களை சந்திக்கமுடியும்...

இலகுவில் அடையாளம் காணமுடியாத அளவுக்கு இவர்களின் நடமாட்டம் இருக்கின்றது... அவசர சேவை இலக்கம் எப்படி அனைவரிடமும் இருக்கின்றதோ அதை போன்று இப்பொழுது இவர்களின் தொலைபேசி இலக்கமும் பொதுவாக அனைவரிடமும் இருக்கின்றது.

இவர்களின் தொலைபேசி இலக்கம் எப்படி பொதுமக்களின் கைகளுக்கு செல்கின்றதென்று இதுவரை அறியப்படவில்லை. இந்த விபசார தொழில் வடக்கில் வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் ஆரம்பித்து தமிழர் தாயகப் பிரதேசம் எங்கும் வியாபித்துக் காணப்படுகின்றது...

அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையிலான இறுதிக்கட்ட யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்கள் பூர்த்தியான நிலையில் போரின் பாதிப்புக்களால் கணவனை இழந்து, பாசத்துக்குரிய உறவுகளை இழந்து, அரைவயிறுக் கஞ்சிக்கும் வழியில்லாமல் வாழ்வில் எந்தவிதப் பற்றும் இல்லாமல் வாழ்பவர்களே சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இவ்வாறான தொழில்களுக்குள் தள்ளப்படுகின்றனர்.

பெரும்பாலானோர் வறுமையின் காரணமாகவே விபச்சாரம் செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்...

அடுத்ததாக போர் நடந்து முடிந்த ஒரு தேசத்தில் அங்கு வாழ்ந்து வரும் ஒரு தேசிய இனத்தை அதன் போராட்ட வீச்சைக் குறைப்பதற்கு அந்த அந்த நாட்டு அரசுகளால் திட்டமிட்டும் இவ்வாறான செயல்கள் அரங்கேற்றப்படுகினறன.

குறிப்பாக சிங்கள விபச்சாரிகளும் தமிழர் பிரதேசங்களை நோக்கி படையெடுத்து வருவதையும் அவதானிக்க முடிகிறது...

இப்படியான சமூக அவலங்கள் என்று மாறுமோ தெரியாது?
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.