குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 9 ம் திகதி வியாழக் கிழமை .

அமெரிக்காவிற்கும் இசுரேலுக்கும் ஈரான் ஏவுகணை ஆப்பு2031 இல் வேற்றுக்கிரகவாசிகளை சந்திக்கலாம்: ரசுயா

  30.ஆனி.2011த.ஆ.2042--அரசாங்கத்தினால் தலைநகரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நனோவாடகைச்சிற்றுந்து(வாடகைக் கார் திட்டத்தின் மூலம் 40 ஆயிரம் முச்சக்கரவண்டிகள் செயலிழப்பதுடன் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் தொழில்களை இழக்கவேண்டிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

முஜிபுர் ரஹ்மான் இங்கு மேலும் கூறுகையில், கொழும்பில் மாத்திரம் சுமார் 40 ஆயிரம் முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபடுகின்றன. இன்னும் முழு நேர தொழில்களுக்கும் இந்த முச்சக்கர வண்டிகள் பயன்படுத்தப்படுகின்றன.

அது மட்டுமல்லாது, உதிரிப்பாகங்கள் இறக்குமதி செய்வோர் விற்பனையில் ஈடுபடுவோர் என மொத்தத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் இத் திட்டத்தினால் தொழில் இழக்க வேண்டிய சூழல் உருவாக்கப்பட்டு வருகின்றது.

அரசாங்கத்தின் இத் திட்டத்தின் மூலம் தலைநகரில் முச்சக்கர வண்டிகளை இல்லாது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இது ஒரு பாரதூரமான விடயமாகும். எனவே நனோ டெக்ஸி திட்டத்தை கைவிடுமாறும் முச்சக்கர வண்டித்தொழிலாளர்களை சங்கடத்தில் தள்ளிவிட வேண்டாம் என்றும் அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

இதேவேளை, தலைநகரை அழகு மயப்படுத்தப் போவதாகக் கூறி கோடிக்கணக்கான ரூபாய்களை செலவிடுகின்ற அரசாங்கம் நகர்ப்புற மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு எண்ணுவதாகத் தெரியவில்லை.

கொழும்பு நகர சபைக்கு சொந்தமான 140 மில்லியன் ரூபாவை செலவிட்டு பம்பலப்பிட்டியிலிருந்து அலரி மாளிகை வரையிலான மூன்ற கிலோமீற்றர் பாதையை திருத்தியமைக்கின்ற அரசாங்கம் தலைநகர் குடியிருப்புப பகுதிகளில் கழிவுகளை அகற்றுவதற்கான இயந்திர வசதிகளைக் கூட பெற்றுக் கொடுக்காதிருக்கின்றது. அது மட்டுமல்லாது, வடிகான்களை துப்புரவு செய்து கொடுப்பதற்கும் நடவடிக்கைகள் இல்லை. இவ்வாறு பலதரப்பட்ட குறைபாடுகள் இருக்கின்ற நிலையில் காலி வீதியையும் கருவாத்தோட்ட வீதிகளையும் திருத்தியமைப்பதற்கு அரசு முன் நிற்கின்றது. இதன் மூலம் தலைநகரை அழகுபடுத்தி விட முடியாது என்றார்.

2031 இல் வேற்றுக்கிரகவாசிகளை சந்திக்கலாம்: ரஸ்ய விஞ்ஞானி எதிர்வுகூறல் _    
  
 
 
  மனித குலமானது 2031 ஆம் ஆண்டளவில் வேற்றுக் கிரக வாசிகளை சந்திக்க முடியும் என ரஸ்ய விஞ்ஞானி ஒருவர் எதிர்வுகூறியுள்ளார்.

இதனை எதிர்வு கூறியுள்ளவர் 'ரஸ்யன் எக்கடமி ஒப் சயன்ஸ் எப்ளையிட் அஸ்ட்ரோனோமி இன்ஸ்டிடூட்' இன் இயக்குனர் பின்கில்ஸ்டீன் ஆவார்.

வேற்றுக் கிரக வாசிகள் தொடர்பில் ஆய்வினை மேற்கொள்ளும் சர்வதேச மன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

"உயிர்களின் தோற்றமானது அணுக்கள் உருவாகுவதை போல தவிர்க்க முடியாதது. வேற்றுக்கிரகங்களிலும் உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றை நாம் 20 வருடங்களுக்குள் கண்டு பிடிப்போம்" என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதன் போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர் நட்சத்திர மண்டலத்தில் நாம் அறிந்த வகையில் சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் 10 % பூமியை ஒத்தவை.

இவற்றில் நீரைக் கண்டுபிடிக்க முடிந்தால் ஏன் உயிர்களைக் கண்டு பிடிக்க முடியாதென கேள்வியும் எழுப்பியுள்ளார்.

வேற்றுக் கிரக வாசிகளும் உருவத்தில் மனிதர்களை ஒத்ததாக காணப்படலாம் எனவும், வேறு வகையான தோல் நிறத்தினை உடையவர்களாக இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.