குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

இந்திரா-ராயீவ் காலம்வேறு சோனியா-சிங்காலாம் பொருளாதாரகாலமேஆழுமையற்றகாலம்.எச்சரிக்கிறோம்,' என்றுசீமான்

 30.ஆனி.2011  .த.ஆ.2042-உலக மகா பொய்யர் ராசபக்சவாம்- சொல்கிறார் தமிழக காங்கிரசு தலைவர் தங்கபாலு. இந்திரா-ராயீவ் காலம்வேறு சோனியா-சிங்காலாம் ஒழியபொருளாதாரகாலமே ஒழிய ஆழுமையற்றகாலம்.இலங்கையில் தமிழர்களின் வாழ்வுரிமைப் பிரச்னை மிகவும் உக்கிரம் அடைந்த 1983 ஆம் ஆண்டு முதல் இந்திய பிரதமர்கள் இந்திரா காந்தி, ராயீவ்காந்தி, நரசிம்மராவ் காலத்திலும், சோனியா வழிகாட்டுதலில் டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான இன்றைய மத்திய அரசின் காலத்திலும் இலங்கைவாழ் தமிழர்களின் பிரச்னைக்கு அந்த நாடு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்கிற நிர்ப்பந்தத்தை பல்வேறு நடவடிக்கைகளால் இந்திய அரசு பிரயோகித்து வந்துள்ளது - வருகிறது என்ற விபரங்களை வரலாறு விரிவாகக் கூறும்.
 
இலங்கை வாழ் தமிழர்களின் வாழ்வுரிமை குறித்து 1983 ஆம் ஆண்டே ஐ.நா. சபையில் இந்தியப் பிரதிநிதியை அனுப்பி பேச வைத்து உலகின் கவனத்திற்கு கொண்டு சென்றவர் இந்திராதான். அன்றைய வெளியுறவுச் செயலாளர் ஜி.பார்த்தசாரதியை அந்நாட்டுக்கு அனுப்பி அன்றைய அதிபர்  ஜெயவர்த்தனேவிடம் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தச் செய்ததும் இந்திராவே.
 
1985 ஜூலை 7-ந் தேதி திம்புவில் இலங்கை அரசையும், அந்நாட்டு விடுதலை முன்னணி தலைவர்களையும் இந்திய அரசு அதிகாரிகள் முன்னிலையில் பேச வைத்தவர் ராஜீவ்காந்தி. மேலும் ராஜீவ்காந்தி - இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் இலங்கை வாழ் தமிழர்களின் வாழ்வுரிமைக்கு சிறந்த கடுமையான நிர்ப்பந்தமாக அமைந்தது.
 
தமிழர்களுக்கு சுய அதிகாரம் கொண்ட மாநிலம் உருவாகும் வகையில் சட்டத் திருத்தத்தை ஒப்பந்தம் வலியுறுத்தியது. இலங்கை தமிழர்களுக்கு உரிமை தரும் அந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தான் சிங்கள ராணுவ வீரர் ஒருவர் ராஜீவ்காந்தியை இலங்கையில் அந்நாட்டு ராணுவ மரியாதை ஏற்று வரும் நேரத்தில் துப்பாக்கியால் தாக்கினார் என்பதும், அக்கொள்கைக்கென்றே ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி படுகொலைக்கு ஆளானார் என்பதும் வரலாற்றின் சோக அத்தியாயங்கள்.
கடந்த 1984 - 89 ஆம் ஆண்டுகளில் நான் மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றிய போது 'இலங்கை வாழ் தமிழர்களின் பிரச்சினைக்கு தமிழ் ஈழம் தான் நிரந்தர தீர்வு' என்று எனது உரையை பதிவு செய்திருக்கிறேன். அப்போது இந்திரா காந்தி பிரதமர். இன்றைக்கு சோனியா காந்தி வழிகாட்டுதலில் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு சார்பில் பிரதமரும், முன்னாள் மற்றும் இன்னாள் வெளியுறவு அமைச்சர்களான பிரணாப் முகர்ஜி, எஸ்.எம்.கிருஷ்ணா ஆகிய தலைவர்களும் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுத்துறை செயலாளர் உட்பட பல்வேறு உயர்மட்ட இந்திய அதிகாரிகளும் அதிபர் ராஜபக்ஷேவை பலமுறை நேரில் சந்தித்து இலங்கை வாழ் தமிழர்களின் வாழ்வுரிமைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்த நிகழ்வுகளை ஊடகங்கள் மூலம் உலகமே அறிந்தவை தான்.
ஒரு நாட்டின் உயர் பதவியிலுள்ள ராஜபக்ஸ தமிழர்கள் வாழ்வுரிமை குறித்து இந்திய அரசு எவ்வித நிர்ப்பந்தமும் செய்யவில்லை என்ற பொய் செய்தியை வெளியிட்டதன் மூலம் அவர் உலக மகாப் பொய்யர் என்ற பட்டத்துக்கு உரியவராகிறார். எனவே அவரது இச்செயலை உலகம் ஏற்காது. இதையும் மன்னிக்காது என்று தங்கபாலு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் இரட்டை நாடகங்கள் அம்பலமாகி விட்டன- சீமான் அறிக்கை.
30.06. 2011 
'இலங்கை இனப் பிரச்சனைக்கு தமிழர்களுடன் சேர்ந்து ஒரு அரசியல் ஏற்பாட்டை உருவாக்க வேண்டும்.சமீபத்தில் சிவசங்கரமேனன் இலங்கை பயணம் சென்றார். அவர் இலங்கை அரசுக்கு அரசியல் ரீதியாக அழுத்தங்கள் கொடுத்ததாக தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்ட நிலையில், மகிந்த ராஜபட்சவோ இந்தியா அவ்வாறான அழுத்தங்கள் எதையும் கொடுக்கவில்லை என்று கூறியிருக்கும் நிலையில் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,  'இந்தியாவின் தேச பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் தலைமையில் இலங்கை சென்ற இந்திய அரசுக் குழு, இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காணுமாறு எந்த நிர்பந்தத்தையும் தங்களுக்கு அளிக்கவில்லை என்று அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்ஷ கொழும்புவில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
 
இரண்டு வாரங்களுக்கு முன்னால் கொழும்பு சென்ற சிங்சங்கர் மேனன், அயலுறவுச் செயலர் நிருபமா ராவ், பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் ஆகியோர் கொண்ட இந்தியக் குழு, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை சந்தித்துப் பேசியது. இரண்டு மணி நேரத்திற்கு மேல் அந்தச் சந்திப்பு நீடித்ததாக கூறப்பட்டது. இந்தச் சந்திப்பிற்குப் பிறகு கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய சிங்சங்கர் மேனன், 'இலங்கை இனப் பிரச்சனைக்கு தமிழர்களுடன் சேர்ந்து ஒரு அரசியல் ஏற்பாட்டை உருவாக்க வேண்டும். அதனை உடனடியாக, விரைவாகச் செய்ய வேண்டும் என்று இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்,' என்று கூறியுதாக இந்தியாவின் ஊடகங்களில் செய்திகள் வந்தன.ஆனால் கொழும்புவில் இருந்து வெளியான செய்திகள் இதற்கு நேர் முரணாக இருந்தது. 'தமிழர் பிரச்சனைக்கு தங்களுக்கு உகந்த ஒரு அரசியல் தீர்வை காண வேண்டியது இலங்கை அரசின் பொறுப்பு, அந்த விவகாரத்தில் இந்தியா எந்த விததிலும் தலையிடாது (it is up to the Sri Lankan Government to find a political solution which it is comfortable with and India is not interfering in the matter) என்று சிவசங்கர் மேனன் கூறியதாக கொழும்பு செய்திகள் தெரிவித்தன.
 
இந்த முரண்பாட்டை ஜூன் 12-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் நாம் தமிழர் கட்சி சுட்டிக்காட்டிருந்தது.அதனை நிரூபிக்கும் வண்ணம் கொழும்புவில் அதிபர் ராஜபக்ஷே அளித்த பேட்டி அமைந்துள்ளது. 'சிறுபான்மைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வை அளியுங்கள் என்று எந்த நிர்பந்தத்தையும் இந்தியா கொடுக்கவில்லை. இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13வது பிரிவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் இந்தியா நிர்பந்திக்கவில்லை,' என்று ராஜபக்ஷே தெட்டத் தெளிவாகக் கூறியுள்ளார்.சிங்சங்கர் மேனன் தலைமையில் கொழும்பு வந்த இந்தியக் குழு என்னதான்  பேசியது என்று கேட்டதற்கு, 'எப்போதும் பேசப்படும் இரு தரப்பு உறவுகள் தொடர்பான விடயங்கள்தான் பேசப்பட்டன' என்று ராஜபக்ஷ கூறியுள்ளார்.
 
அதுமட்டுமல்ல, தமிழர் பிரச்சனை குறித்து வேறு எதையாவது இந்தியக் குழு பேசியதா என்ற வினவியதற்கு, தனது அமைச்சரவையில் உள்ள டக்ளஸ் தேவானந்தா அளித்துள்ள பரிந்துரைகளை சிங்சங்கர் மேனன் சுட்டிக்காட்டியதாகக் கூறியுள்ளார். இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் பதில் 'இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தாங்கள் அக்கறை கொண்டு செயல்படுவதாக' கூறிவரும் இந்திய மத்திய அரசின் இரட்டை முகத்தை அப்பட்டமாக அம்பலப்படுத்தியுள்ளது. தமிழர் பிரச்சனையை எவ்வளவு சாதாரணமான ஒரு விஷயமாக இந்திய மத்திய அரசு கையாள்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டே டக்ளஸ் தேவானந்தாவின் பரிந்துரையை சுட்டிக்காட்டியிருப்பதாகும். தமிழர்களை அரசியல் அபிலாஷைகளுக்கு, ராஜபக்ஷவின் அரசியல் அடிமையாக செயல்பட்டுவரும் டக்ளஸ் தேவானந்தாவின் பரிந்துரையா தீர்வு? 'டக்ளஸ் தேவானந்தாவின் பரிந்துரைகளை நிறைவேற்றினால் அதுவே போதுமானதாகும்' என்று கூற சிங்சங்கர் மேனன் யார்?
 
 
இதிலிருந்து தமிழர்கள் மீது, அவர்கள் சற்றும் ஏற்காத ஒரு தீர்வை திணிக்க இலங்கை அரசுடன் இணைந்து இந்திய மத்திய அரசும் முயற்சிக்கிறது என்பது தெளிவாகியுள்ளது. தமிழர்கள் மீது தாங்கள் விரும்பும் ஒரு தீர்வைத் திணிக்க டக்ளஸ் தேவானந்தாவின் பரிந்துரைகளை பயன்படுத்த இலங்கையும், இந்தியாவும் முயற்சியெடுத்து வருகின்றன என்பதும் தெளிவாகிறது. இப்படிப்பட்ட குறுக்கு வழி அரசியல் தீர்வு இலங்கைத் தமிழர்கள் பிரச்னையை மேலும் சிக்கலாக்கிவிடும் என்று எச்சரிக்கிறோம்.இலங்கைத் தமிழர் பிரச்னையில் இந்திய மத்திய அரசு எப்படிப்பட்ட ஏமாற்று நாடகத்தை நடத்தி வருகிறது என்பதை சிவசங்கர் மேனனின் இலங்கைப் பயணத்தில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா புரிந்துகொள்ள வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்சனையை மற்ற மாநில அரசுகளின் முதல்வர்களிடமும், அரசியல் கட்சிகளின் தலைவர்களிடமும் தமிழக முதல்வர் கொண்டு சென்று மத்திய அரசுக்கு ஒரு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
 
இலங்கை தொடர்பாக இன்றைய மத்திய அரசு கடைபிடித்து வரும் அயலுறவுக் கொள்கை இந்தியாவிடமிருந்து ஈழத்தமிழர்களை அந்நியப்படுத்திவிட்டது. அவர்களின் நியாயமான அரசியல் உரிமைப் போராட்டத்தை அழிக்க துணைபோயுள்ளது. இந்த நிலை மாற வேண்டுமெனில் இலங்கைத் தொடர்பான இந்தியாவின் அயலுறவுக் கொள்கை மாற வேண்டும். அதற்கான முயற்சியில் தமிழக முதல்வர் ஈடுபட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறது.சிங்சங்கர் மேனன் தலைமையிலான இந்தியக் குழு, தமிழக மீனவர்களின் பாதுகாப்புக் குறித்தும் எந்த பேச்சும் நடத்தவில்லை என்பதைத்தான் இன்றளவும் தமிழக மீனவர்கள் மீது தொடரும் தாக்குதலால் நிரூபணமாகிறது. நேற்றைய தினம், சிங்கள மீனவர்களைக் கொண்டு தமிழக மீனவர்களை ஆயுதங்களைக் காட்டி மிரட்டியுள்ளதும், அவர்களின் வலைகளை அறுத்துள்ளதும் மீனவர்களுக்கிடையே மோதலை உண்டாக்கி பிரச்சனையை திசை திருப்ப அந்நாட்டு அரசு முயற்சிப்பதையே காட்டுகிறது.இத்தாக்குதல்கள் அனைத்திற்கும் இந்திய மத்திய அரசு கடைபிடித்துவரும் இலங்கை ஆதரவுக் கொள்கையே காரணம். சட்டப் பேரவைத் தோல்வியில் இருந்து காங்கிரஸ் தலைமை பாடம் கற்றதாகத் தெரியவில்லை. காங்கிரஸ் தலைமையின் அணுகுமறை தொடர்ந்து தமிழர் விரோத போக்கில் சென்றால், உள்ளாட்சித் தேர்தல்களிலும் அது படுதோல்வியைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கிறோம்,' என்று சீமான் கூறியுள்ளார்.
 
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.