குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 10 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தமிழ்நாட்டுக்காரர் படம்நடிக்கும் வடிவேலுக்களா?கேரளாக்காரர்களே செயலாளர்கள் அதிகாரிகள்.

  28.06.2011த.ஆ.2042--கேரளாக்காரர்களே இந்தியாவின் செயலாளர்களாகவும்  அதிகாரிகளாகவும் இருந்து இந்திய அரசதுறையில் ஆதிக்கம் செலுத்துவதைக்கவனிக்கவும் காரணம் அவர்கள் பல நிர்வாகத் துறைகளைக்கற்று இருக்கிறார்கள். தமிழர்களோ தம்மை மட்டும் பிரபல்யப்படுத்தவும் வளமாக்கவும் ஏற்றதுறைகளிலும் சினிமாவிலும் கிடந்து சீரழிவதும் போராடுகின்றோம் என்று பனையைப் பிளப்பதாக நாடகமாடுவதும் நடக்க கேரளாக்காரர்  மிக எளிதாக கிழங்கைக்கிழித்து விட்டுப் போகின்றார்கள் அறிவுரீதியான கொம்மினிசுகளே  ஆட்சிக்கு வாறர்கள். இந்தியாவின் புதிய வெளிவிவகாரச் செயலராக தற்போது பிரான்சுக்கான இந்தியத் தூதுவராகப் பணியாற்றும் ரஞ்சன் மாதாய் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது இந்திய வெளிவிகாரச் செயலராக உள்ள நிருபமா ராவின் இரண்டு ஆண்டு பதவிக்காலம் எதிர்வரும் ஆ 31ம் நாளுடன் நிறைவடையவுள்ள நிலையில் அவர் அமெரிக்காவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையிலேயே 59 வயதான ரஞ்சன் மாதாய் எதிர்வரும்ஆவணி மாதம் 1ம் நாள் இந்திய வெளிவிவகாரச் செயலராக பொறுப்பேற்கவுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு இவர் இந்தப் பதவியில் இருப்பார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் விஸ்ணு பிரகாஸ் தெரிவித்தார்.
கேரளாவைச் சேர்ந்த ரஞ்சன் மாதாய் இதற்கு முன்னர் வியன்னா, கொழும்பு , வொசிங்டன், தெகரான், பிரசெல்ஸ் போன்ற நகரங்களில் உள்ள இந்தியத் தூதரகங்களில் பணியாற்றியுள்ளார்.

1995-1998 காலப் பகுதியில் இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச்செயலராகவும், பங்களாதேஸ், மியான்மர், சிறிலங்கா, மாலைதீவு ஆகிய நாடுகளுடனான உறவுகளுக்குப் பொறுப்பாக பிரிவின் தலைமை அதிகாரியாகவும் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது.

ஏற்கனவே இசுரேல், கட்டார் நாடுகளிலும் இவர் இந்தியத் தூதுவராகவும், பிரித்தானியாவுக்கான பிரதி தூதுவராகவும் ரஞ்சன் மாதாய் பணியாற்றியுள்ளார்.

ஏற்கனவே இந்திய வெளிவிவகாரச் செயலராக இருந்த ஜே.என்.டிக்சிற், சிவ்சங்கர் மேனன்,நிருபமா ராவ் போன்றோர் சிறிலங்காவுக்கான தூதுவர்களாகப் பணியாற்றியவர்கள் என்பதால், கொழும்பு அதிகாரமட்டங்களுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயினும் ரஞ்சன் மாதாய் கொழும்பில் இந்தியத் தூதரகத்தில் இளநிலை அதிகாரியாகவே பணியாற்றிவர் என்பதால் சிறிலங்கா அதிகார மட்டங்களுடன் அவ்வளவு பரிச்சயமில்லாதவர்.

இதனால் இவரது கொழும்புடனான அணுகுமுறைகள் முன்னையவர்களை விட சற்று வேறுபட்டதாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.