குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

லிபிய அதிபருக்கு சர்வதேச கைது ஆணை: இலங்கை அதிபருக்கு எப்போது?

 28. ஆனி. 2011 -த.ஆ.2042--லிபிய அதிபர் மும்மர் கடாபி, அவரது மகன் சைப் அல் இசுலாம், உளவுத்துறைத் தலைவர் அப்துல்லா அல் சனுசி ஆகியோருக்கு கைது வாரண்ட்டை பிறப்பித்துள்ளது தி கோக் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம். மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை நிகழ்த்தியதாகவும், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி உத்தரவிட்டதாகவும் கடாபி மீது நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.

லிபியாவில் கடந்த பிப்ரவரி மாத மத்தியிலிருந்து பெரும் கலவரம் வெடித்தது. கடாபிக்கு எதிரான அதிருப்தியாளர்கள் படை பலத்துடன் மோதலில் குதித்ததால், அவர்களுக்கும், கடாபி ஆதரவு ராணுவத்தினருக்கும் இடையே மோதல் உக்கிரமடைந்தது.

இதில் சிக்கி இதுவரை பல ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

கடாபியை ஒடுக்க எதிர்ப்புப் படையினருக்கு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினரும் போரிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்தான் கடாபிக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சஞ்சி மோனகேங் கூறுகையில், கடாபியும், அவரது மகனும், குற்றம் இழைத்தவர்கள் என்று நம்புவதற்கு போதுமான காரணங்கள் உள்ளன.

அப்பாவி மக்களை கொன்ற குற்றச்சாட்டுக்கு அவர்கள் பொருத்தமானவர்களாக உள்ளனர். அவர்களது குற்றங்கள் தண்டனைக்குரியவை என்றார்.

கடாபிக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞர் லூயிசு மோரினோ ஒகாம்போ கடந்த மே மாதம் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது வாரண்ட்டை இங்கிலாந்து வரவேற்றுள்ளது.

ராஜபக்ஸவுக்கு எப்போது சர்வதேச நீதி விசாரணை?

கடாபியை விட மிகக் கொடுமையான தாக்குதலுக்கு உத்தரவிட்டனர் இலங்கையின் அதிபராக இருந்து வரும் மகிந்த ராயபக்ச. அவரும், தம்பி கோத்தாபய ராசபக்ச, முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் ஆடிய வெறியாட்டத்திற்கு லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், போர்க்குற்றத்திற்கான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று காட்டுக் கத்தலாக பல்வேறு நாடுகளிலும் தமிழர்களும், பிற அமைப்பினரும் கூறி வரும் நிலையில் அதுகுறித்து ஒரு நாடும் கண்டு கொள்ளாமலேயே உள்ளன. இந்த நிலையில் கடாபிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.