குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

இலங்கைகுறித்துமலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு சமர்ப்பிப்பு! தாம்கூர்மையாச் செயற்படுவதாக தே.கூ..

 27ஆனி. 2011த.ஆ.2042---இலங்கை விடயம் குறித்து நடவடிக்கை எடுக்க மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு சமர்ப்பிப்பு! தாம்கூர்மையாச் செயற்படுவதாக தே.கூ..அறிவிப்பு...... இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து முகாம்களில் வாழ்கின்ற மக்களை, சர்வதேச அமைப்புக்கள் தடையின்றி சந்திக்க இடமளிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மலேசிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோலாலம்பூரிலுள்ள இலங்கைத் தூதரிடத்தில் மனுவொன்றை சமர்ப்பித்துள்ளனர்.

மலேசியாவின் எதிர்க்கட்சியான மக்கள் நீதிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சிவராசா பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியிலேயே இதனைத் தெரிவித்தார்.

இதுகுறித்து பிபிசி தமிழோசைக்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

போரினால் இடம்பெயர்ந்த மக்களில் பலர் இன்னும் முகாம்களிலேயே தங்கியுள்ளனர். அவர்களின் வாழ்க்கை நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும், மீள் குடியேற்றம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கூறிவரும் கருத்துக்களால் திருப்தியடைய முடியாது என்றும் இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த மலேஷிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முகாம்களிலிருந்து அனைத்து மக்களும் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும் மற்றும் சர்வதேச அமைப்புகள் அவர்களை தடையின்றி சந்திக்க இடமளிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து மலேஷியாவிலுள்ள எதி்ரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட குழுவினர் மனுவொன்றை இலங்கைத் தூதரிடம் கையளித்துள்ளனர் என்றார்.

தமது கோரிக்கைகள் அடங்கிய தீர்மானமொன்றை நிறைவேற்ற மலேஷியாவின் எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வந்த போது, இன்னொரு நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடும் நடவடிக்கை எனக்கூறி சபாநாயகர் அதனை நிராகரித்துவிட்டார்.

ஆனால், இலங்கை விவகாரம் சர்வதேச மனிதாபிமான விவகாரம் என சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற ஆர். சிவராசா, பர்மா, திபெத், பாலஸ்தீனம் போன்ற நாடுகள் தொடர்பில் மலேஷியா நிலைப்பாடு எடுத்திருக்கும் போது இலங்கை விவகாரம் தொடர்பான தமது கோரிக்கை நியாயமானதே எனவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டமாக, மலேஷிய வெளிவிவகார அமைச்சரை சந்தித்துப் பேசவுள்ளதாகவும், தமது மனுவுக்கு இலங்கையின் பதில் கிடைத்ததும், மீண்டும் இலங்கைக்கு குழுவொன்றை அனுப்ப நடவடிக்கை எடுப்பதாகவும் ஆர்.சிவராசா மேலும் தெரிவித்தார்.

இன்றைய உலகநிகழ்வில் அரசுதத்ளிப்பது தெரிகிறது. அதனால் அவர்கழுன் பேச்சுக்களில் ஈடுபடவேண்டிய தேவைதமக்கு இருக்கிறது இதிலிருந்து தற்பொழுது வெளியேறுவது புத்திசாதுரியம் அல்ல தேசியக்கூட்டமைப்பின் உள்ஊர்ராட்சி தேர்தலிலும் நாம் வென்றுவிட்டால் தே.கூ..அமைப்புடன் பேசுங்கள் தீருங்கள் என்று இலங்கை அரசை உலகு நிர்ப்பந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.