குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 10 ம் திகதி வெள்ளிக் கிழமை .

16 அகவை தமிழ்சிறுமியின் கர்பப்பையை பாலியல் தொழிலுக்காக அகற்ற முயற்சி !

  24.06 2011-த.ஆ--.2042 படதத்தில் பார்த்தவை கொழும்பில் நேரில் நடக்கிறது. தமிழ்த்தாதியின் உதவிவேறு பணப்பேய்கள். மனிதாபிமானக்கல்வி அவசியம். இச் செய்தியை வாசித்தால் நரம்புகள் நடுங்கும் ! நாளங்கள் ஆடி விடும் ! இலங்கையின் நீதி நிர்வாக்தையும் பாதுகாப்பின் பக்கச்சார்பபையும் இனஅருவெறுப்பையும் போர்குற்றத்தில் சேர்க்கலாமா? யாழ்ப்பாணம் மற்றும் வன்னிப் பகுதியில் போரினால் பதிக்கப்பட்ட பல பெண்களையும் சிறுமிகளையும் வேலை தருவதாகக் கூறி, தென்னிலங்கை அழைத்து வரும் ஒரு கும்பல், அவர்களை பாலியல் தொழிலில் பலாத்காரமாக ஈடுபடவைக்கிறது.

பொய் சொல்லி இவ்வாறு தென்னிலங்கை அழைத்து வரும் தமிழ் பெண்களை அடைத்து வைத்து அவர்களை சிங்கள காமவெறியர்களுக்கும் பணக்கார முதலைகளுக்கும் தாரைவார்ப்பதையே இவர்கள் செய்துவருகின்றனர்.

இதனைக் கூட ஒருவகையில் மன்னிக்கலாம் ஆனால் இலங்கை தனியார் வைத்தியசாலைகளில் நடக்கும் அட்டூளியங்கள் தான் தலைவிரித்தாடுகிறது ! சமீபத்தில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி வன்னியில் இருந்து அழைத்துவரப்பட்ட 16 வயதுச் சிறுமி ஒருவர் தென்னிலங்கையில் விடுதி ஒன்றில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஒட்டுக்குழுவினர், அவர் நிலந்தரமாக கர்ப்பம் தரிக்ககூடாது என்பதற்காக வைத்தியசாலை கொண்டுசென்றுள்ளனர்.

இச் சிறுமியின் கர்பப்பையை அகற்றுமாறு அவர்கள் வைத்தியரிடம் கூறியும் உள்ளனர். கொழும்பில் உள்ள ஒரு பிரபல வைத்தியசாலை தாதியான வித்தியா கந்தசாமி என்பவே இந்த அறுவை சிகிச்சைக்கு உதவுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ஒரு தமிழ் பெண் ஆவார். தனக்கு அறுவை சிகிச்சை நடைபெறவிருப்பதை அறிந்த 16 வயதுச் சிறுமி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். தப்பிச் சென்ற சிறுமி கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்ததை அடுத்து, பொலிசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப் படுத்தியுள்ளனர் எனவும் அறியப்படுகிறது.

(பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர் பெயர் வெளியிடப்படவில்லை). இதனையடுத்து, நீதிமன்றம் சிறுமியை சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

இந்த சிறுமி வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே பொலிசார் மேலும் சில விடுதியில் தேடுதல் நடத்தி, அங்கு சிக்கியிருந்த யுவதிகளை மீட்டுள்ளனர். வித்தியா என்ற தமிழ் தாதிமேல் யார் நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் ?

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.