குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

உயிர்களைக் கொல்லும் நாடுகள்தான் மில்லியனர்களை உருவாக்குகின்றது தங்கத்தைவிட ஆயுதங்களே பெறுமதியானவை!

24 .06.2011 இலங்கையில் மில்லியனர்களின் எண்ணிக்கை உயர்வு : சபாசு உயிர்களைக் கொல்லும் நாடுகள்தான் மில்லியனர்களை உருவாக்குகின்றது தங்கத்தைவிட ஆயுதங்களே பெறுமதியானவை!   இனிஆயுதங்களை ஆபரணமாக தமிழர்கள் அணிவார்களோ!  ஐரோப்பாவை விடவும் ஆசிய பிராந்திய நாடுகளில் மில்லியனர்களின் எண்ணிக்கை அதிகமாகக் ..இலங்கையில் மில்லியனர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாகத் மெரில் லின்ச் சொத்து முகாமைத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
உலக செல்வந்தர் தொடர்பான 15ம் வருடாந்த ஆய்வில் இந்த தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மில்லியனர்கள் அதிகமாக உருவாகும் உலகின் பத்து நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
ஐரோப்பாவை விடவும் ஆசிய பிராந்திய நாடுகளில் மில்லியனர்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.ஆசிய பசுபிக் பிராந்திய வலய நாடுகளில் 3.3 மில்லியன் மக்கள் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான சொத்துக்களை கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான மில்லியனர்கள் உருவாகியுள்ளனர். எவ்வாறெனினும், உலகின் அரைவாசிக்கும் மேற்பட்ட மில்லியனர்கள் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஜெர்மன் ஆகிய நாடுகளில் வாழ்கின்றனர்.

பான் கி மூன் செயல்பட வேண்டும் - காடத்த வந்த பான் கி மூன் என்று குமரிநாடு.நெற்- கவிதையாக கருத்தை வெளியிட்டு கனகாலமாயிற்று.
24.06.2011  வார்த்தைகளால் விவரிக்க முடியாத கௌரவம் இது ” இரண்டாவது முறையாக ஐக்கிய நாடுகள் சபையில் பொதுச் செயலாளராக  தேர்ந்தெடுக்கப்பட்ட பான்கிமூன் தனக்கு இரண்டாவது முறையாக கிடைத்த ஐநா செயலாளர் பதவி குறித்து சொன்ன வார்த்தைகள்தான் இவை. 67 -வது வயதில் அவருக்கு இது அதிர்ஷ்டம்தான். ஆனால்  உலகெங்கிலும் போருக்கு முகம் கொடுக்கும் மக்களுக்கும் போருக்கு முகம் கொடுத்து எல்லாவற்றையும் இழந்து நிற்கும் மக்களுக்கோ இனியாவது நிம்மதி கிடைக்குமா? என்கிற கேள்விக்குத்தான் பதில் தெரியாமல் திணற வேண்டியிருக்கிறது. போட்டியின்றி ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்றால் அதன் பொருள் அவருக்கு போட்டியே இல்லை என்பதல்ல,  ஒன்றில்  தன் பதவிக்காலத்தில் அவர் சிறந்த முறையில் செயல்பட்டிருக்க வேண்டும். அல்லது வேறு எவரும் போட்டியிட்டு அப்பதவிக்கு வருவதை விட பான் கி மூன் அப்பதவியில் நீடித்திருப்பதே தங்களின் இராணுவ பொருளாதார நலன்களுக்கு உகந்தது என்று வல்லரசுகள் நினைத்திருக்கக் கூடும்.அதனால்தான் அவரை இரண்டாவது முறையாக எட்டாவது பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

 

பான்கிமூன் எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும்

...................................................................................

இரட்டைக் கோபுரத் தகர்ப்பிற்குப் பின் ஈராக்கில் நுழைந்து பேரழிவு ஆயுதங்களை கண்டெடுக்கும் நடவடிக்கையை முன்னாள் ஐநா செயலாளர் கோபி அன்னான் விரும்பவில்லை. ஐநாவின் விருப்பத்தையும் மீறி போர் ஈராக் மக்கள் மீது திணிக்கப்பட்டது. பல லட்சம் மக்கள் கொல்லப்பட்டு சதாம் தூக்கிலிடப்பட்ட பின்னர் பேரழிவு ஆயுதங்கள் எதையும் கூட்டுப்படைகள் கண்டெடுக்கவில்லை. போர் விரிபடுத்தப்பட்டு ஆப்கானுக்குச் சென்றது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்னும் பெயரில் இராணுவங்கள் நுழைந்த எல்லா நாடுகளிலும் பாரிய மனித உரிமைகள் மீறப்பட்டன. புதிய ஊடகங்கள் மத்திய கிழக்கையும் இஸ்லாமிய நாடுகளையும் மையமிட்டு உருவாகி அது மேற்குலக ஊடகங்களுக்கே சவால் விடும் வகையில் வளர்ந்தது. இம்மாதிரியான ஒரு சூழலில்தான் 2007 ஜனவரி 1- ல் ஐநா பொதுச் செயலாளராக பான்கிமூன் பதவிவேற்றார். உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களை தெருவுக்குக் கொண்டு வந்த பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம் என்ற பெயரில்தான் இலங்கை அதிபர் ராஜபட்சேவும் 2008 - போர் முனப்புகளை மேற்கொண்டார். ஐநா அலுவலகம் இலங்கையில் இருந்து வெளியேறியதை போர் நிறுத்தத்திற்கான இறுதி வாய்ப்பும் இல்லாமல் போனதை ஐநா புரிந்து கொள்ளவில்லை. அல்லது புரிந்து கொண்டும் அதற்கான எவ்வித நடவடிக்கைகளும் எதிர்க்கவில்லை. எனென்றால் பயங்கரவாதத்திற்கெதிரான என்று அமெரிக்கா கண்டு பிடித்த பதத்தின் தன்மையை மேற்குலக நோக்கிலேயேதான் பான்கிமூன் புரிந்து கொண்டார். இலங்கை யுத்தம் ஒரு கொடூரமான முறையில் இராணுவ உடை தரிக்காத அப்பாவி மக்களை கொத்துக் கொத்தாக பலியெடுக்கிற யுத்தம் என்று உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் கதறிய போது ஐநா அவை அதைக் கண்டு கொள்ளவில்லை. போர் முடிந்தது. இந்த ஐந்தாண்டு காலத்தில் இலங்கை, காஸா, மத்தியக்கிழக்கு, ஆப்கான், ஆப்ரிக்கா, என்று பல கோடி மக்கள் போருக்கு முகம் கொடுத்துக் கொண்டுதான் இருந்தனர். ஆப்ரிக்காவில் இடைவிடாத உள்நாட்டு யுத்தம். ஏனைய எல்லா நாடுகளிலும் பயங்கரவாதத்திற்கெதிரான போர். இன்னொரு பக்கம் புவி வெப்பமடைதல், சுற்றுச் சூழல், போன்ற விஷயங்களில் அவர் கவனம் செலுத்தினார்.அவரை சில மேற்குலக ஊடகங்களோ அவரை செயல்படாத செயலாளர் என்று விமர்சனம் செய்யும் அளவுக்கு அவர் போரைச் சகித்துக் கொண்டார்.

இலங்கையும் பான்கிமூனும்.

..................................................

கொடூரமான போரை தடுத்து நிறுத்த ஐநா தன் படைகளை அனுப்ப வேண்டும். குறைந்த பட்சம் தனது தூதரையாவது இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்பது தமிழ் மக்களின் கோரிக்கை. மனித உர்மை ஆர்வலர்களின் கோரிக்கையும் அதுதான். ஆனால் ஐநாவின் இலங்கைக்கான தூதராக நியமிக்கப்பட்டவர் விஜய்நம்பியார் இந்திய இராணுவத்தின் முன்னாள் அதிகாரியான இவர் இலங்கை இராணுவத்திற்கும் ஊதியம் பெற்று ஆலோசனை சொல்லும் நபர் என்னும் போது அவர் எப்படி இலங்கையில் சமாதானம் நிலவ வேண்டும் என்று நினைப்பார். இந்தக் கேள்விகளை நான் கேட்கவில்லை சர்வதேச ஊடகமான இன்னர் சிட்டி பிரஸ் கேட்ட கேள்விதான். இலங்கை தொடர்பான ஒவ்வொரு பயணத்தின் போதும் விஜய்நம்பியார் டில்லியின் சிந்தனைகளை சுமந்து இலங்கையில் செயல்படுத்தும் ஒரு தூதுவராகவே இருந்தார். ஒரு முறை ஐநா கேட்டுக் கொண்ட அறிக்கையின் படி இலங்கை சென்றவர் இறுதிவரை அந்த அறிக்கையை ஐநாவில் தாக்கல் செய்யவே இல்லை. பான்கிமுனும் அது குறித்து எந்தக் கேள்விகளும் கேட்டதும் இல்லை. மே -23-ஆம் தேதி போர் முடிந்த பின்னர் மிகவும் தாமதமாக இலங்கை சென்ற பான்கிமூன் இராணுவ விமானத்தில் இருந்தபடி இறுதிப் போர் நடந்த பகுதிகளை சுற்றிப்பார்த்தார். முகாம்களையும் பார்வையிட்டவர் //முகாம்கள் சர்வதேசத் தரத்தில் அமைந்திருக்கிறது, போரில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தியதற்கான ஆதாரங்களை நான் காணவில்லை//  என்றார். பான் கி மூன். தொடர்ந்து ஐநாவில் இலங்கைக்கு எதிராகக்  கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை க்யூபா, ஈரான், பாகிஸ்தான், ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளின் ஆதரவோடு தோற்கடிக்கப்பட்டதோடு, இலங்கைப் போரை மனித உரிமைப் போர் என்று சொன்னதோடு அதைப் பாராட்டும் ஒரு தீர்மானத்தோடு முடிந்து போனது நிகழ்வுகள். இது தொடர்பாக பான்கிமூன் மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவர் அங்கீகாரம் இல்லாத மூவர் குழுவை நியமித்து இலங்கை இறுதிப் போரில் மனித உரிமை மீறல்கள் நடந்தனவா? என்று முறையில் கேட்டுக் கொண்டார். அவர்களும் புலிகளும், அரசும் போர்க்குற்ற மீறல்களில் ஈடுபட்டார்கள் என்று ஒரு அறிக்கை கொடுத்தார்கள். ஆனால் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக எவ்வித முடிவுகளும் எட்டப்படாமல் அப்படியே இருக்கின்றன. இலங்கையை பாராட்டிய தீர்மானம் அப்படியே இருக்க இலங்கைக்கு எதிரான ஐநா இது வரை எந்த ஒரு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. மேற்குலக ஊடகங்கள் மட்டும் இல்லாது போயிருந்தால் இலங்கையில் நடந்த படுகொலைகள் வெளித்தெரியாமலேயே போயிருக்கும். இறுதிப் போரில் நடந்த பாரிய மக்கள் கொலைகள் குறித்த சாட்சியங்களை ஐநாவுக்கே காட்டியவர்கள் அவர்கள்தான். இனியும் ஐநா இலங்கை தொடர்பாக மௌனமாக இருக்க முடியாது.

 

சாட்சியங்கள் இருக்கின்றன.

.............................................

 

குறிப்பிட்ட ஒரு இனம் என்பதால் ஒரு குறுகிய நிலப்பகுதிக்குள் அடைத்து, பாதுகாப்பு வலையம் என்று அறிவித்த இடங்களுக்குள் குண்டு போட்டு மக்களைக் கொன்றதோடு, உணவுகல், மருந்துகள் உள்ளிட்டவைகளை தடுத்தது என்பதெல்லாம்  போர்க்குற்றம் மட்டுமல்ல இனப்படுகொலையும்தான். அதற்காக ஊடகங்கள் மூலம் வெளிவந்த காட்சிகள் உண்மை என்பது நிரூபணமாகியிருக்கும் நிலையில் இரண்டாவது முறையாக பதவியேற்க இருக்கும் பான்கிமூன் ஆசிய நாடொன்றில் நடந்திருக்கும் இப்படுகொலைகள் தொடர்பாக நடவடிக்கை எடுத்து தமிழ் மக்களுக்கு நம்பிக்கையை வழங்க வேண்டும். இன்றைக்கு இலங்கைத் தமிழ் மக்களின் நிலை மிகவும் கவலைகுறிய ஒன்றாகும். அங்கு நிர்வகிக்கப்படும் முகாம்கள் சர்வதேச தரத்தில் இருக்கின்றன. என்றால் அதை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் கூடுதலாக எதையும் கேட்கவில்லை. பாரம்பரீயமாக தாங்கள் வாழ்ந்து வந்த பகுதிகளில் மீண்டும் வாழும் உரிமை கேட்கிறார்கள். காணாமல் போன தங்கள் உறவினர்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கேட்கிறார்கள். தங்கள் உறவினர்களின் ஒருவராக இப்போது அரசியல் கைதிகளாக ரகசிய முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள உறவினர்களின் உரிமை கேட்கிறார்கள். போரில் எல்லாவற்றையும் இழந்து விட்ட தங்களுக்கு உரிய இழப்பீடு கேட்கிறார்கள். நியாயமான இந்த கோரிக்கைகளை செய்யும் பொழுது மட்டுமே ஐநா மீது உலக மக்களின் நம்பிக்கை வலுப்படும்.

பான் கி மூன் செயல்பட வேண்டும்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.