குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

உயிர்கள் போனபின்னும் ஒப்பிற்குபேச்சு அரசின் பித்தலாட்டம். கண்டிவீதியோரம் கட்டும்வீடுகள் யாருக்கு

 24.06.2011.த.ஆ.2042--தற்போது நடக்கும் பேச்சுவார்த்தை தீர்வுநடவடிக்கை என்பதைவிட உலகத்தை கருத்தில் கொண்டு நடப்பதாகவே நாம் பார்க்கவேண்டும். தமிழர்களைப் பார்த்துப்பேசாது இந்தியாவையும் வெளிநாடுகளையும் பார்த்து பேசுகிறார்கள் என்றே சொல்லவேண்டும். தமிழ்மக்கள் அவலத்தில் தேசியக்கூட்டமைப்பு  செல்லப்போக்குத்தனமான பேச்சில்.  கூட்டத்தில் அச்சுறுத்தப்பட்டிருப்பதாலும் உள்ஊர் ஆட்சி தேர்தலை எதிர் கொள்வதாலும் தமிழர்களின் ஏகபிரதிநிதிகள் என்ற நிலைக்கு தாம் உயரவேண்டும் என்று எண்ணுவதாலும் பெறுமதியற்ற பேச்சுக்களில் சிக்கித் தவிக்கின்றார்கள். ஏகபிரதிநிகள் ஆவோர் அடுத்து மோட்சமடைவது உறுதிதானே!தமிழர்களின் சிக்கலுக்கு தீர்வு காணவேண்டுமென்றால். கண்டிவீதிக்கரையோரம் கட்டும்வீடுகளை தமிழர்களுக்கு கொடுக்கவேண்டியது தானே. வன்னியில் மீள்குடியேற விடாது தடுப்பதும் யாழில் குடியேற அனுமதிப்பதும் ஏன் யாழ்ப்பாணம் எப்போதும் அடைபட்டு இருக்கும் நிலம் தாம் அடக்கிவைத்துக் கொள்ளலாம். வன்னிப்பகுதி அடங்காப் பற்று ஆகிவிடும் என்றபயமும் சாட்டும். மலையகத்தமிழர்களைச் சுற்றி எப்படி சிங்களர் குடியமர்த்தப்பட்டனரோ அப்படி  யாழப்பாணத்தைச் சுற்றி வன்னியைச்சுற்றி சிங்களர் குடியேற்றப்பட்டுக் கொண்டிருக்க  பேச்சுவார்த்தையும் நடந்து குழம்ப எதுமிஞ்சும். சிங்களநகரம் மிஞ்சும். தாமாகத்தீர்க்கும் எண்ணம் இல்லாதபடியால் தலையீட்டு தீர்வுகள் விரைவுபடுத்தப்படும் நிலைகள் வருவது சாத்தியம்!

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.