குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

போரின் பின்னர் இலங்கையில்மாற்றங்களை ஏற்படுத்த இந்தியா முனைப்பு காட்டவில்லை – சர்வதேச அனர்த்தக் குழு

 24. .06.2011  --இலங்கை தற்போது பயணிக்கும் பாதை பிழையானது மிக நீண்ட காலமாக இலங்கை மீது தாக்கம் செலுத்தி வரும் இந்தியா, போரின் பின்னர் காத்திரமான பங்களிப்பினை வழங்கத் தவறியுள்ளதாக யெனீவாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் அனர்த்த குழு சுட்டிக்காட்டியுள்ளது நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான முனைப்புக்களை மேற்கொள்ளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
இந்தியாவின் தலையீடு குறித்து இலங்கையின் சகல இன மக்களுக்கு மத்தியிலும் சந்தேகம் நிலவி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகித்த போதிலும், அநேகமான சிங்கள மக்கள் இந்தியா தமிழர்களுக்கு ஆதரவாக செயற்படுவதாகவே கருதுகின்றனர் என அனர்த்தக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
 
மறுபுறத்தில், தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதாக இந்தியா பல சந்தர்ப்பங்களில் உறுதியளித்த போதிலும் அந்த உறுதி மொழிகள் நிறைவேற்றப்படாமையினால் தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
இலங்கை விவகாரங்களில் ஏனைய நாடுகள் தலையீடு செய்வதனை தடுக்க வேண்டுமாயின் இந்தியா ஆக்கபூர்வமான முறையில் இலங்கைப் பிரச்சினையில் தலையீடு செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
மேலும், இலங்கை தற்போது பயணிக்கும் பாதை பிழையானது என்பதனை அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் இணைந்து இந்தியா வலியுறுத்த வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வடக்கில் இராணுவமயப்படுத்தல்களை தடுத்த நிறுத்தவும், சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தவும் இந்தியா, இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.