குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

தமிழரசுக்கட்சியின் ஏக தலைமைத்துவக் கோட்பாட்டால் சீரழியும் தமிழ்த்தேசிய அரசியல் - திரிபுரன்-

23 .6. 2011-த.ஆ.2042--தமிழ்ப்பண்பாடு தெரியாத தமிழரசுக்கட்சி தமிழ்வரலாறு உணராது உலகைவெல்லுமா
தமிழியத்தாக்கமில்லாத எவரும் தமிழைக்ககாக்கமாட்டார்கள்.இது குமரிநாட்டின் பார்வை......  இலங்கையில் நடைபெற்ற இனவழிப்பு மற்றும் போர்க்குற்றம் தொடர்பாக தீர்மானம் இயற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவின் அறிக்கை வெளிவந்து ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. இவ்வறிக்கை பிரஸ்தாபிக்கும் விடயங்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இலங்கையின் தற்போதைய அரசியல் இருப்பு தொடர்பாக ஒரு கொந்தளிப்பு நிலையை உருவாக்கி வருகின்றன. இலங்கை அரசுக்கு அரசியல் ரீதியான நெருக்கடியை ஏற்படுத்தும் இந்த நிலைப்பாடு நாளுக்குநாள் தீவிரமடைந்து செல்வதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
 
 
போர்க்குற்றம் அல்லது இனவழிப்பு நிகழ்ந்து இரண்டு ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் செயற்பாடுகளில் முன்னெடுப்போ அல்லது பொறுப்புணர்ந்து செயலாற்றும் தன்மையோ இல்லை என உலகளாவிய மனிதஉரிமை அமைப்புகள் குறைகூறிவரும் நிலையில், இலங்கைத்தீவுக்கு வெளியேயான உலகம் முப்பெரும் அணிகளாக இப்பிரச்சினைமீதான கரிசனையை கையாளத் தொடங்கி இருக்கின்றன.
 
 
1. உலகளாவிய மனித உரிமை ஆர்வலர்களும், மனிதஉரிமை அமைப்புக்களும், ஊடகங்களும் தமிழர் தரப்பு நியாயங்களைப் பேசுவதுடன், இழைக்கப்பட்ட கொடுமையை வெளிக்கொணர்வதற்காக உழைத்தல்
 
 
2. உலகெங்கும் பரந்துவாழும் தமிழர், தமிழின உணர்வாளர்கள், புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் என்பன உரித்துடைய நியாயாதிக்கத்துக்காகவும் சர்வதேச விசாரணை ஒன்றுக்காகவும் குரல்கொடுத்து வருகின்ற நிலைமை
 
 
3. முற்போக்கு நாடுகளின் கூட்டணி என்று சொல்லப்படக்கூடிய, அமெரிக்கா தலைமையிலான, அல்லது அமெரிக்காவின் கொள்கைகளை அடியொற்றி தீர்மானங்களை எடுக்கக்கூடிய நாடுகள், இலங்கையில் நடந்துமுடிந்த முப்பது வருடங்களுக்கும் அப்பாலான போரின் முடிவும், தொடர்ந்து இலங்கையில் நிலவிவரும் இனக்குழும அரசியலின் தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினைகளின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பாகவும் கொண்டிருக்கக்கூடிய கரிசனையும் ஈடுபாடும்.
 
 
இந்த மூன்று அணிகளுக்கும் அப்பால் நான்காவது செயற்படு அணியாக இருப்பது இலங்கையும் அதன் நெருங்கிய நேசநாடுகளும்தான். இந்த அணியில் தென்கிழக்கு ஆசியாவின் சில நாடுகளும், தெற்காசியாவில் அரசியல் பொருளாதார மூலங்களின் செல்நெறியை தீர்மானிக்கும் தகைமை வாய்ந்த இரண்டு வல்லரசுகளும், ஆசியாவைக்கடந்தும் வியாபிக்கக்கூடிய சில சக்திமிக்க நாடுகளும் அடங்குகின்றன. தமிழ்த்தேசிய அரசியலில் மிகவும் குறிப்பிடக்கூடிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியதும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு அல்லது அவற்றை அடைவதற்கான முயற்சிகளுக்குப் பெரும் இடையூறாக இருக்கப்போவதும் இந்த நான்காவது அணியின் செயற்பாடுதான்.
 
 
சர்வதேச அரசுகளும் சர்வதேச அரசியலும் இவ்வாறு அணிபிரிந்து இராஜதந்திர கயிற்றிழுப்பில் ஈடுபட்டுவரும் நிலையில், பிரச்சினைக்குரிய பேசுபொருளுடன் நேரடியாகத் தொடர்புபட்டு நிற்கும் உள்ளுர் தமிழ் அரசியலின் கையாலாகாத்தனத்தைப் பேசுவதே இப்பத்தியின் நோக்கம்.
எரித்தவரை எரித்து, புதைத்தவரை புதைத்து துண்டும் துணியுமாக, குற்றியிரும் குலையுயிருமாக உள்ளுறுப்புகளை கையிலேந்திக்கொண்டு (சரத் பொன்சேகா சொல்வதுபோல) எஞ்சியோர் குருதிச்சகதி வழியே, வவுனியாவிற்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடம் பெயர்ந்த போதும்சரி, கஞ்சிக்கும் தண்ணீருக்கும் வரிசையில் நின்று, அடிவாங்கி, களைத்து, அரசசார்பற்ற நிறுவனங்களின் தயவால் உயிரை மீள தக்கவைத்துக்கொண்டபோதும்சரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இருந்து மௌனம் மட்டுமே பரிசாகக் கிடைத்திருந்தது. பேசாப்பொருளை பேச நாம் துணிவானேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை கொழும்பில் முகாமிட்டிருந்தது. ஆனால் மக்களின் விருப்பையோ அவர்களின் விடுதலை மீதான அவாவையோ எவராலும் அகற்றிவிட முடியவில்லை. வவுனியா நகரசபைக்காக நடந்த தேர்தல் தமிழ்ப் பொதுமக்களின் பெருவிருப்பம் என்ன என்பதை பறைசாற்றியது. இத்தனைத் துயரங்களுக்குள்ளும், உறவுகளின் சொல்லொணாக் கண்ணீர்க்கதையின் மத்தியிலும், எல்லாமே முடிந்துவிட்டது என்று எல்லோரும் நினைத்திருந்த வேளையில், வவுனியா நகர மக்களின் தீர்ப்பு புதிய நம்பிக்கை ஒளியை ஏற்றியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதிருந்த அதிருப்திக்கும் விமர்சனங்களுக்கும் அப்பால் சென்று மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெற வைத்திருந்தனர். இதையொத்த தீர்ப்பு 2010 பாராளுமன்றத் தேர்தலிலும் அளிக்கப்பட்டது.
 
 
முப்பது வருடங்களுக்கும் மேலாக நீடித்திருந்த ஆயுதப்போராட்டம் விடுதலைப்புலிகளை மையமாகக் கொண்டிருந்தது. இரண்டாம் கட்ட ஈழப்போருக்குப் பின்னர் விடுதலைப்புலிகள் இயக்கம் இலங்கை அரசாங்கங்களால் தோற்கடிக்கப்பட முடியாத மாபெரும் சக்தியாக வளர்ந்திருந்தது. இவ்வாறான ஒரு ஆயுத வல்லமையோடும் பேரம்பேசும் பெறுமானத்தோடும் தனிநாட்டுக் கோரிக்கையில் முன்னேறிக்கொண்டிருந்த விடுதலைப்புலிகள் அமைப்பு, சாத்தியமான வழிமுறைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து தோற்கடிக்கப் பட்டமையானது, அரசுக்கு பேருவகையை ஏற்படுத்தியதுடன், பிரிவினைக் கோரிக்கை இல்லா தொழிக்கப்பட்டதாகவும் நம்புவதற்கான ஏதுக்களை உண்டுபண்ணியது.
 
 
இவ்வாறான ஒரு சூழலில், யுத்த வெற்றியின் பின்புலத்தில், நடத்தப்பட்ட அனைத்து தேர்தல்களிலும் வடக்கு-கிழக்கில் அரசு தொடர்ச்சியாகத் தோல்வியடைய நேர்ந்ததால், அரசு அதிர்ச்சியடைந்தது. பிரபாகரனுக்குப் பின்னர், தமிழ்த் தேசிய அரசியலை தலைமை தாங்கும் பொறுப்பை தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கியிருக்கிறார்கள் என்னும் கசப்பான உண்மையை அரசு புரிந்துகொண்டது.
 
 
பிரபாகரன் ஒரு பயங்கரவாதியென்றும் பிரபாகரனது கொள்கை ஒரு பயங்கரவாதக் கொள்கையென்றும் சர்வதேச அரசியலில் பரப்புரை செய்துவந்த அரசினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பென்று பிரச்சாரப்படுத்த முடியவில்லை. ஏனெனில், அரசினால் இலாவகமாக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட தேர்தல்களில் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெறச்செய்தனர். விடுதலைப் புலிகளின் வெற்றிடம் தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பு வரலாற்றுக்கடமையை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ள போதிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ வாளாவிருந்தே வருகிறது.
 
இலங்கையிலும் சர்வதேசத்திலும் தமிழருக்கு சாதகமாகவும் எதிராகவும் பரிமாணமெடுத்திருக்கும் அரசியற்போக்கை தமிழ்த் தேசிய அரசியலுக்குச் சாதகமாகப் பயன்படுத்திகொள்ளும் சாணக்கியம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இல்லையா என்றே இப்போது மக்கள் புலம்பத் தொடங்கியுள்ளனர். எம்மைப்பற்றி யார்யாரோ பரிந்து பேசவும் தீர்மானங்கள் இயற்றவும் முற்பட்டிருக்கும் இவ்வேளையில் பாதிக்கப்பட்ட தரப்பினராகிய எம்மிடம் இருந்து வரும் நீண்ட மௌனம், சந்தேகங்களைத் தோற்றுவிப்பதுடன், நாம் குறைபாடுகளைக் கொண்டவர்களா என்பதையும் எம்மைநோக்கிக் கேட்கவைக்கின்றது.
 
 
இவ்வாறான தீராத சந்தேகங்களோடும் கேள்விகளோடும் மக்கள் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர். இக்கேள்விகள் அல்லது சந்தேகங்கள் தொடர்பாக, அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நிபுணர் குழுவின் அறிக்கையை வெறுமனே வரவேற்றதுடன் மட்டும் நிறுத்திக்கொண்டதே இது இராசதந்திரமா? அல்லது வங்குரோத்து நிலைமையா? என்று கேட்க முற்பட்டபோது மெல்ல மெல்ல கசிகிறது விடயம்.
 
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தீர்மானிக்கும் சக்தி அல்லது பெறுமதி எதுவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கிற விளம்பரப்பலகையின்கீழ் அனைத்து விதமான வழிநடத்தும் பொறுப்பையும் திரு.இரா.சம்பந்தன் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக்கட்சியே கொண்டுள்ளது. தமிழரசுக்கட்சி ஒரு குறித்த விடயம் தொடர்பாக கொண்டிருக்கும் தீர்மானமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானமாக மக்களுக்கும் வெளியுலகிற்கும் சொல்லப்படுகிறது. ஐந்திற்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கட்சிகள் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அதிகாரப்பகிர்வு சமாந்தரமாக இல்லை. ஏனைய கட்சிகளின் கருத்துக்கள் புறந்தள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கின்ற பெயரால் ஏனைய கட்சிகள் வலுவான எந்த செயற்பாட்டையும் முன்னெடுக்க முடியாமல் இருப்பதற்கான காரணம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சட்டரீதியாக பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சி அல்ல.
 
 
தீர்மானம் இயற்றும் அதிகாரமோ அன்றி செயற்படுத்தும் அதிகாரமோ ஏனைய கட்சிகளிடம் இல்லாதிருக்கும் நிலைமை கூட்டமைப்பு என்கின்ற கூட்டணியில் ஏனைய கட்சிகளுக்கு சமவாய்ப்பு இல்லாததை தெளிவுபடுத்துகிறது. இந்த நிலைமையின் வெளிப்படை உண்மையாக எரிந்துகொண்டிருக்கும் தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக, ஆதிக்கம் கூடிய கட்சியான இலங்கை தமிழரசுக்கட்சி கொண்டிருக்கக்கூடிய கொள்கைகள், நிலைப்பாடுகள் என்பனவே முன்னிறுத்தப்பட்டு வருகின்றன. இவ்விடயங்களைக் கருத்திற்கொண்டு இன்னொரு விடயத்தையும் தெளிவாகக் கூறமுடியும். அதாவது, தொடர்ச்சியாக வடகிழக்குப் பகுதிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தேர்தல்களில் கிடைத்துவரும் வெற்றி என்பது ஒரு திட்டமிடப்பட்ட வெற்றி அல்ல என்பதும், அல்லது அவ்வெற்றியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது அரசியல் பயணத்தின் ஊடாக, நிரந்தர வரலாற்று வெற்றியாக மாற்ற முனையவில்லை என்பதும், இலங்கை அரசாங்கத்தினது நேரெதிரணியாகக் கொண்டிருக்க வேண்டிய வகிபாகத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டிருக்கவில்லை என்பதுமாகும்.
 
 
இவ்வாறான அரசியல் கோமாளித்தனங்கள் தொடர்ந்தும் தமிழ்த் தேசிய அரசியலில் நிகழ்ந்தேறி வருகின்றன. தமிழரசுக்கட்சி என்றல்லாமல், ஈ.பி.ஆர்.எல்.எவ் என்றல்லாமல், ரெலோ என்றல்லாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பதையே மக்கள் நம்புகின்றனர்ளூ விரும்புகின்றனர் என்பதுதான் கடந்தகால தேர்தல்களின் ஊடாக மக்கள் வலுவாக சொல்லியிருக்கும் விடயம். அரசியல் அரங்கில் பிழை என்றாலும், சரி என்றாலும் மக்கள் கேள்வி கேட்கப்போவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத்தானே தவிர வேறு அரசியல் கட்சிகளை அல்ல. நீண்ட நெடிய அரசியல் வரலாற்றுப் பயணத்துக்கு மககள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தெரிவு செய்திருக்கும் நிலையில், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள், தமி;த்தேசியக் கூட்டமைப்பு என்கின்ற சொல்லாடலை, ஒரு வெறும் பதாகையாக தேர்தல்காலத் திருவிழாவில் ஒலிக்கும் ஒரு விளம்பரமாக உபயோகித்து வருவதுதான் மிகவும் கவலையான விடயம்.
 
நம்பி வாக்களித்த மக்களோ நடுத்தெருவில் கூட்டமைப்போ மௌனவிரதத்தில் என்றவாறு இந்த வரலாற்றுக் காலத்தின் நாட்கள் வெறுமனே வீணே கழிந்து கொண்டிருக்கின்றன. கூட்டமைப்பின்மீது, அதன் இயங்கு பொறிதிறன்மீது எத்தகைய விமர்சனம் வைக்கப்பட்டாலும், எல்லா விவாதங்களும், எல்லா கேள்விக்கணைகளும் கடைசியாகச் சந்திக்கும் ஓரிடம் என்றால் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு கட்சியாகப் பதிவு செய்யப்படவில்லை என்பதே.
 
அப்படியானால் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித்தலைவர்கள் பதிவு செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு ஏன் இன்னும் தயாராகவில்லை என்கிற மில்லியன் டொலர் கேள்வி எழுகின்றது. வடக்கு கிழக்கின் மூலை முடுக்கெங்கும் திருவாளர் பொதுஜனம் கேட்டுக்கொண்டிருக்கும் கேள்வியும் இதுதான். இந்தக் கேள்வியை யார் எப்போது கேட்டாலும் ஏனைய கட்சிகளின் தலைவர்கள் தமிழரசுக்கட்சியை நோக்கி அடிக்கடி ஆட்காட்டி விரலை நீட்டுகின்றனர். நாம் பத்து வருடங்களாக இதைத்தான் சொல்கிறோம். ஐயாவிடம் கேளுங்கள் என்பதாக இருக்கிறது அவர்களது பதில்.
 
தமிழரசுக்கட்சி தந்தை செல்வாவினால் ஆரம்பிக்கப்பட்டது என்பதும், ஐம்பது வருடங்களுக்கும் மேல் பழமைவாய்ந்தது என்பதும் உண்மைதான். ஆனால் அப்படியான ஒரு கட்சியின் அரசியல் இருப்புக்காக, தீர்மானங்களும் செயற்பாடுகளும் எடுக்க வேண்டிய ஒரு காலகட்டத்தில் தேசிய அரசியலை கூறுபோடும் கட்சிவாத அரசியலை முன்னெடுக்க எவரும் துணியக்கூடாது. அவ்வாறு நடந்தால் காலம் காலமாகத் தமிழ்த் தலைவர்கள் ஏமாந்துபோன, இலங்கை அரசுகள் அதன் கொள்கை வகுப்பாளரக்ளால் பிரித்தாளும் தந்திரங்களுக்கு பலியாகிய வரலாற்று உண்மை மீண்டும் நிதர்சனமாகும். தமிழர் தந்தை செல்வா அவர்கள் கடைசியாக தமிழர்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறிச்சென்றார். அவரது கூற்றின்படியே இலங்கை தமிழரசுக்கட்சியை மீறிய அரசியற் பிரளயமாக தமிழர்களது இனக்குழும தேசியப்பிரச்சினை பரிணாமம் பெற்றுவிட்டது என்பதே உண்மை. அதன்பிறகே அரசியல் இயக்கங்கள் ஆயுத இயக்கங்கள் தோன்றி போராட்டம் புதிய பாதையில் பயணிக்க ஆரம்பித்தது. இந்தக்காலகட்டமும் ஒரு புதிய பாதைக்கான காலம்தான் என்பதை அனைவரும் உணரவேண்டும்.
 
தந்தை செல்வநாயகம் அவர்கள், அவரது காலத்தில் தேசியப்பிரச்சினை முனைப்புப் பெற்றிருந்தபோது, தமிழர்களது ஒற்றுமையையும் தேசியப்பலத்தையும் பாதுகாப்பதற்காக, தமிழரசுக்கட்சியில் இருந்தபோதும் தமிழர் விடுதலைக் கூட்டணி TULF) நிறுவிப் பாதுகாப்பதில் முன்நின்று வெற்றியும் கண்டார். இன்று தந்தை செல்வா அவர்கள் இருந்த அதே அதிகாரத்திலும் வரலாற்றுப் பொறுப்பிலும் இருக்கும் திரு.இரா.சம்பந்தன் அவர்கள், தந்தை செல்வா அவர்கள் எடுத்ததைப் போன்ற ஒரு வரலாற்றுத் தீர்மானத்தை, வரலாற்றின் கட்டாயத்தை நடைமுறைப்படுத்த முடியாமல் அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்யாமல் பின்னடித்துக்கொண்டு நாட்களை நகர்த்தி வருவது ஏன்? இது நிச்சயமாக சாணக்கிய அரசியலும் இல்லை, வரலாற்றில் இருந்து தமிழ்த் தலைவர்கள் எந்தப்பாடங்களையும் கற்றுக்கொள்ளவும் இல்லை என்பதையே சுட்டி நிற்கிறது. தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவின் அதிகாரம் மிக்கவர்கள் என்று குறிப்பிடப்படும் தலைவர்கள் வரலாற்றின் இன்றியமையாத தேவையாகி இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பதிவு செய்வதில் இருந்து விலகி, அரசியற்சதுரங்கத்தை ஆட முற்பட்டால், இது தமிழனத்திற்குச் செய்யும் மிகப்பெரிய துரோகமாகிவிடும் என்பதில் ஐயமில்லை.
 
திரிபுரன்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.