குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 24 ம் திகதி புதன் கிழமை .

போர்க் குற்றச்சாட்டுக்களை கண்டு கொள்ளாத அமெரிக்கா வவுனியாவில் கடவுச்சீட்டு அலுவலகம் திறக்க நடவடிக்கை

புதன், 22 .06. 2011 03:26    இலங்கையில் இறுதி போரில் இடம்பெற்றன என்று கூறப்படும் போர்க் குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் அமெரிக்கா மெத்தனப் போக்கை கடைப்பிடிக்கின்றது என ஓல் கெட் லைன்சு நியூசு(எல்லா தலையங்க செய்சிகள்) என்கிற அமெரிக்க பத்திரிகை செய்தி பிரசுரித்து உள்ளது. வார்த்தைகளால் கடிந்து கொள்கின்றதே தவிர இலங்கைக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுக்களை அமெரிக்கா பெரிதாக கண்டு கொள்ளவில்லை என்று சுட்டிக் காட்டி உள்ளது.

இலங்கையில் போர்க் குற்றங்கள் இடம்பெற்றன என்கிற குற்றச்சாட்டை நிரூபிக்கின்ற வகையில் பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி இலங்கையின் கொலைக்களம் என்கிற ஆவண வீடியோவை வெளியிட்டு உள்ளது.

இவ்வீடியோ கடந்த வாரம் நியூயோர்க்கில் புத்திஜீவிகள், இராஜதந்திரிகள் ஆகியோருக்கு காண்பிக்கப்பட்டது.

இலங்கைக்கான இந்நாள் அமெரிக்க தூதுவர் பற்றீசியா புட்டினிஸ் மற்றும் முன்னாள் தூதுவர்கள் மூவர் இப்படத்தை பார்த்தனர்.

வீடியோவில் பெரிதும் அதிர்ச்சியூட்டுகின்ற காட்சிகள் இருக்கின்றன, சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்கள் இலங்கையில் மீறப்பட்டன என்று கூறப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மிகுந்த அக்கறை செலுத்தி வருகின்றோம், இச்சட்டங்கள் மீறப்பட்டு இருக்கின்ற பட்சத்தில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும், உதவி வெளியுறவு அமச்சர் ரொபேர்ட் ஓ பிளேக் உட்பட எமது மூத்த அதிகாரிகளின் நிலைப்பாடும் இதுவே ஆகும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சுப் பேச்சாளர் விக்டோரியா நியூலாண்ட் தெரிவித்து உள்ளார். ஆனால் இது வெறும் வார்த்தை ஜாலம் மாத்திரமே என பத்திரிகை குறிப்பிட்டு உள்ளதுஐ.நாவின் 31 கேள்விகளுக்கு இரகசியமாக பதில் கொடுத்த இலங்கை


செவ்வாய், .22. 2011 12:12    .வவுனியாவில் கடவுச்சீட்டு அலுவலகம் திறக்க நடவடிக்கை வவுனியா நகரில் கடவுச்சீட்டு அலுவலகம் திறக்க நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகழ்வு அமைச்சு தெரிவித்துள்ளது.

2500 ரூபாவிற்கு கடவுச்சீட்டினைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் மூலம் யாழ்ப்பாணம் வன்னி வவுனியா மக்கள் கொழும்புக்கு செல்லாமல்

ஐ.நாவின் 31 கேள்விகளுக்கு இரகசியமாக பதில் கொடுத்த இலங்கை
புதன், 22 ஜூன் 2011 04:31    .

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை அரசு மறுத்துள்ளபோதிலும் அந்த அறிக்கையில் அரசிடம் கேட்கப்பட்டுள்ள 31 கேள்விகளுக்கு அரசு மிகவும் இரகசியமாகப் பதில் அளித்துவிட்டது என்று ஐ.தே.கட்சி எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்றில் கூறினார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:

"ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாகவும், சனல் 4 விடியோ காட்சி தொடர்பாகவும் சர்வதேசத்துக்கு விளக்கமளிக்க அரசு இன்னும்

நடவடிக்கை எடுக்கவில்லை. இது தொடர்பாக சர்வதேச சமூகத்துடன் பேச்சு நடத்த அரசு முயற்சி எடுக்கவில்லை.

இரண்டு வருடங்களுக்கு முன்பும் "சனல்4'இல் விடியோ காட்சி ஒன்று ஒளிபரப்பப்பட்டது. இதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு சொன்னது. ஆனால், இதுவரையும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நாட்டுக்கு ஏற்படும் ஆபத்துகளை அவப்பெயர்களைத் தடுப்பது அரசின் கடமை. இது தொடர்பாக ஊடகங்களுடனேயோ, நாட்டு மக்களுடனேயோ அல்லது நாடாளுமன்றத்திலோ பேசுவதில் எதுவித பயனும் இல்லை. சர்வதேசத்துடன்தான் பேசவேண்டும்.

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு அரசு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது. ஆனால், அந்த அறிக்கையில் அரசிடம் கேட்கப்பட்டிருக்கும் 31 கேள்விகளுக்கு அரசு மிகவும் இரகசியமாகப் பதில் வழங்கிவிட்டது.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது ஒருவர்கூட கொல்லப்படவில்லை என்று அரசு கூறுகிறது. இதை எவரும் நம்பமாட்டார்கள். இதை அரசு சர்வதேசத்திடம் விளக்கிக் கூற வேண்டும்.

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை பொய்யாக்குவது அரசின் கைகளில்தான் தங்கியுள்ளது. ஆனால், இதுதொடர்பாக அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எவற்றையும் எடுக்கவில்லை என்று அரச தரப்பு ஊடகங்களே கூறுகின்றன.

ஆகவே, அரசு உடனடியாக சர்வதேசத்துடன் பேச்சு நடத்தவேண்டும்.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் அலுவலகம் ஒன்றை கொழும்பில் திறக்க விட்டு இலங்கை தொடர்பான குற்றச்சாட்டுகளை பொய்யாக்க அரசு அனுமதி வழங்கவேண்டும்.
5 லொறிகள் மூலம் வடக்கில் இருந்து கடத்தப்பட்ட ஆயுதங்கள்
செவ்வாய்,22 2011 13:40    .

இரும்பு ஏற்றிச் செல்வதற்கென பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரத்தை பயன்படுத்தி மில்லியன் பெறுதியான யுத்த உபகரணங்கள் மற்றும் ஆயதங்கள் என்பன 5 லொறிகள் மூலம் வடக்கில் இருந்து தெற்கிற்கு கடத்தப்பட்ட நிலையில் பொலிசாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமரசிறி சேனாரட்னவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த லொறி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இந்த லொறியில் மோட்டார் குண்டுகள், ரவைகள், பித்தளை, குண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் அச்சு உள்ளிட்டவை காணப்பட்டதாக வவுனியா பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த 5 லொறிகளும் கிளிநொச்சி, மாங்குளம், மற்றும் ஓமந்தை போன்ற சோதனைச் சாவடிகளைக் கடந்து வவுனியாவிற்கு வந்தது எப்படி என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். லொறியில் பயணித்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.