குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

.சாய்பாபா ஆசிரமம் சுற்றி ப(பி)ணம் தின்னும் கழுகுகள் பாபா அறை திறந்ததிலிருந்து கோடி கோடியாக கடத்தல்

22. புட்டபர்த்தி சாக்கு மூட்டைகளில் பணம் தொடர்ந்து பிடிபடுகிறது!திடுக்கிடும் தகவல்கள் அடுத்து வெளியாகும் சாய்பாபா மறைந்ததை தொடர்ந்து அவரின் ஆசிரம சொத்துக்கள் பற்றிய சர்ச்சை ஆரம்பித்து விட்டது. சனிக்கிழமை அன்று, சொகுசு காரில் 35 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், ஞாயிறு அதிகாலை தனியார் பேருந்தில் 2 கோணி பைகளில் 10 கோடி ரூபாய் கரன்சி நோட்டுக்கள் சிக்கியுள்ளன. தமிழ்நாட்டை சேர்ந்த இருவர் கைது செய்யப் பட்டுள்ளனர். அவர்களை காவல்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உலகம் முழுக்க சொத்துகள்

புட்டபர்த்தி சாய்பாபா, கடந்த மார்ச் மாதம் 28 ஆம் தேதி திடீர் சுகவீனம் அடைந்தார். ஏப்ரல் 24ஆம் தேதி அவர் உயிர் பிரிந்தது. அவர் மறைந் ததை அடுத்து சொத்துக்களை நிருவகிப்பதில், அவரின் குடும்பத்தினருக்கும், டிரஸ்ட் உறுப்பினர் களில் சிலருக்கும் வெளிப்படையாகவே பிரச்சினை உருவானது.

சாய்ப்பா சொத்துக்களை முறைப்படி நிர்வகித்து, அவர் உலகம் முழுக்க செய்து வந்த சமூக பணிகளை செய்ய டிரஸ்ட்டுக்கு முழு அதிகாரம் அளிக்கப் பட்டது. இருந்தாலும், சாய்பாபாவின் சொத்துக்கள் பற்றி புதிர்கள் எழுந்தவண்ணம் இருந்தன.

தனிப்பட்ட அறைகள்

அவர் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தி வந்த அறைகளை திறந்து சோதனை செய்வது என்று முடிவு செய்யப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை அன்று அந்த அறைகள் திறக்கப்பட்டன.

இரண்டடுக்கு தளத்தில் அமைந்துள்ள இந்த கட்டடத்தில், மேல்தளத்தில்தான் சாய்பாபா தங்கிய யஜுர் மந்திர் என்ற அறை உள்ளது.

அதை திறந்தபோது, 98 கிலோ தங்கம், 300 கிலோ வெள்ளிப்பொருட்கள் மட்டுமல்ல, 12 கோடி ரூபாய் கரன்சி நோட்டுக்கள் இருந்ததுதான் பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

இந்த அதிர்ச்சியில் இருந்து டிரஸ்ட் உறுப்பினர் கள் மீளாத நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று இரவு புட்டபர்த்தி  பெங்களூரு நெடுஞ்சாலையில், பேகபள்ளி பகுதியில் ஒரு எம்யுவி சொகுசு காரை காவல்துறையினர்  தடுத்து நிறுத்தினர்.

அதில் மூட்டை மூட்டையாக 35 லட்சம் ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. வேனை ஓட்டி வந்த ஹரிஷ் ஆனந்த் ஷெட்டி கைது செய்யப்பட்டார். இவர் ஒரு சிவில் இன்ஜினியர்.

சாய்பாபாவின் பிரசாந்தி நிலையத்தில் டிரைவ ராக இருக்கிறேன். டிரஸ்ட் உறுப்பினர் ஒருவருக்கு கார் ஓட்டும் சேகர் என்பவர் தான் தன்னிடம் ரூபாய்களை கொடுத்து, பெங்களூரில் ஒருவர் பெற்றுக்கொள்வார் என்று கூறி அனுப்பினார் என்று ஒப்புக்கொண்டார். ரூபாய்களுடன் பறந்து கொண்டிருந்த வேனை காவல்துறையினர்  பின்தொடர்ந்த போது, ஒரு கார் மர்மமான முறையில் பாய்ந்து சென்று மறைந்து விட்டது. செக்போஸ்டில் வேனை மறித்த சில நிமிடங்களில் அந்த கார் திரும்பி வந்தது.

அதில் இருந்து இறங்கிய சோகன் ஷெட்டி என்பவர், நான் கருநாடக முன்னாள் டிஜிபி உமாநாத் ஷெட்டியின் மகன். வேனில் இருந்த பணத்தை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள்; உமாநாத் உங்களிடம் பேசுவார் என்று கூறினார்.

ஆவணங்களை காட்டி பணத்தை பெற்றுக்கொள்ளும்படி கூறியதை அடுத்து அங்கிருந்து போன சோகன் திரும்பி வரவில்லை. அவரை காவல் துறையினர்  தேடி வருகின்றனர்.

கோணி மூட்டைகளில் கட்டுகட்டாகப் பணம்

பாகபள்ளியில் 35 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், ஞாயிறு அதிகாலை, புட்டபர்த்தியில் இருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கொத்தசெருவு என்ற இடத்தில் தனியார் வால்வோ பேருந்து  ஒன்றை காவல்துறையினர்  மடக்கி சோதனை செய்தனர். புட்டபர்த்தியில் இருந்து பெங்களூருக்கு சென்று கொண்டிருந்த பேருந்து  அது. அதில் இருந்து இரண்டு கோணி மூட்டை நிறைய ரூபாய் நோட்டுக்கள் சிக்கின. அவை 5 முதல் 10 கோடி ரூபாய் வரை மதிப்பு இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

இந்த கோணிப்பைகளை பேருந்தில் கொண்டு வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்

இருவரும் தமிழ்நாட்டை சேர்ந்த வர்கள். இவர்களை அனந்தபூர் காவல் துறையினர்  ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று விட்டனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

புட்டபர்த்தியில் இருந்து கார், பேருந்து  மூலமாக பணம் கடத்தப்படு கிறது என்று தகவல் கிடைத்தது. இதையடுத்து தான் இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து இன்னும் எந்த வழிகளில் பணம் கடத்தப்படுகிறது என்பதை கண்காணித்து வருகிறோம். ஆசிரமத்தில் இருந்து தான் இந்த பணம் வெளியே வந்துள்ளது என்று ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று காவல்துறையினர்  கூறினர்.

யஜுர் மந்திர் திறந்த 2 நாளில் வேட்டை?

சாய்பாபா பயன்படுத்தி வந்த யஜுர் மந்திர் அறைகள் திறக்கப்பட்ட 2 நாளில் இந்த இரு பறிமுதல் சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால், டிரஸ்ட் உறுப்பினரும், சாய்பாபா உறவினருமான ரத்னாகர் அவசர அவசரமாக மறுத்துள்ளார். இந்த பணம் ஆசிரமத்துக்கு சொந்தமான தல்ல; 12 பக்தர்களுக்கு சொந்தமானது. அவர்கள் முறைப்படி ஆவணங்களை காட்டி பெற்றுக்கொள்வர் என்றார்.

ஆனால், காவல்துறையினரோ,கைது செய்யப்பட்டவரை ஆசிரமத்துக்கு அழைத்துப்போய் விசாரிக்கும் போது உண்மைகள் வெளிவரும் என்று அதிர்ச்சி தருகின்றனர். 35 லட்சம் ரூபாய் பறிமுதல் செய் யப்பட்ட மல்டி யுடிலிட்டி வெஹிகிள் (பல்நோக்கு பயன்பாட்டு சொகுசு கார்) காரை ஓட்டிய ஷெட்டியிடம் விசாரணை நடந்து வருகிறது. அவர் பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள் ளார். கார், இமாச்சல் பிரதேசத்தின் குலுமனாலியை சேர்ந்த ஒரு கம் பெனிக்கு சொந்தமானது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து திடுக்கிடும் தகவல்கள்

இந்தியாவில் மட்டுமின்றி, வெளி நாடுகளிலும் கோடீஸ்வர பக்தர்களை கொண்டிருந்தவர் சாய்பாபா.  அவர் சொத்து விஷயத்தில் புதுப்புது தகவல் கள் வந்த வண்ணம் உள்ளன.
18ஆம் தேதி : சொகுசு காரில் 35 லட்சம் ரூபாய் பறிமுதல்.

19ஆம் தேதி: பேருந்தில் 10 கோடி ரூபாய் வரை கரன்சி மூட்டைகள்

இரண்டு சம்பவங்களிலுமே, பணம் புட்டபர்த்தியில் இருந்து சென்றுள்ளது உறுதியாகி விட்டது. 35 லட்சம் ரூபாயுடன் சிக்கிய ஹரிஷ் ஆனந்த ஷெட்டி, உடுப்பி மாவட்டத்தை சேர்ந்தவர்; சிவில் இன்ஜினியராக, பெங்களூரு நகரில் எம்.ஜி ரோட்டில் உள்ள ஒரு தனியார் கட்டுமான கம்பெனியில் பணியாற்றி வருகிறார். புட்டபர்த்தி ஆசிரமத்தில் சாய்பாபாவுக்கு சமாதி கட்ட அவரை கம்பெனி அனுப்பியது. இந்த நிலையில் தான் அவர் பணத்துடன் சிக்கியுள்ளார்.

புட்டபர்த்தி அருகே பகேபள்ளி செக்போஸ்டில் காவல் துறை சோதனையின்போது, சாய் பாபா அறக்கட்டளைக்கு சொந்த மான காரில் ரூ. 35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் குறித்து காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.