குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

மீளப்பெறப்படவில்லை தேவையேற்படின் மீண்டும் நீதிமன்றம் சுரேசு தெரிவிப்பு

 21.06.2011.த.ஆ.2042---வடக்கு மக்களின் பதிவு நிறுத்தப்படவுள்ளது? யின் அடிப்படை உரிமை மீறல் மனு மீளப்பெறல்? கொழும்பு ஊடகங்கள்:- மீளப் பெறப்படவில்லை தேவையேற்படின் மீண்டும் நீதிமன்றம் செல்வோம் - சுரேசுவடக்கு மக்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட உள்ளதாக யாழ்;ப்பாண கட்டளைத் தளபதி மேயர் யெனரல் மகிந்த கத்துருசிங்க உறுதியளித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
 
படைத்தரப்பினரால் வடக்கு மக்கள் பதிவுக்கு உட்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
 
யாழ்ப்பாண கட்டளைத் தளபதியுடன் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின் போது குறித்த பதிவு நடவடிக்கை நிறுத்தப்படும் என உறுதியளித்ததாக சுமந்திரன் குறிப்பிடடுள்ளார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், மாவை சேனாதிராஜா, சிறிதரன், சுரேஸ் பிரேமசந்திரன் உள்ளிட்டவர்கள் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
 
பலவந்தமான முறையில் பதிவு செய்தல் மற்றும் புகைப்படம் எடுக்கும் நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டுமென கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
 
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மக்களே இவ்வாறு பலவந்தமாக பதிவுக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
 
எனினும் இது குறித்து இன்று லண்டன் நேரம் அதிகாலை நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனுடன் குளோபல் தமிழ்ச் செய்திகள் தொடர்பு கொண்ட போது மனு வாபஸ் பறப்படவில்லை எனத் தெரிவித்த அவர் முதல் முறை நீதிமன்றம் சென்ற போது பதிவை நிறுத்துவதாக படைத்தரப்பில் உறுதியளிக்கப்பட்டதனால் பின்னர் நீதிமன்றம் செல்ல வேண்டி ஏற்படவில்லை எனத் தெரிவித்த அவர் மீண்டும் இவ்வாறான நடவடிக்கை தொடருமானால் நீதிமன்றத்தை நாடவேண்டிய தேவை ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.