குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

இரசுயப் பயணத்தின் நோக்கம் நிறைவேறாத நிலையில் நாடு திரும்பிய மகிந்தர்!

செவ்வாய், 21 .06. 2011 01:56   --சனாதிபதி மகிந்த ராசபக்ச ரசுயாவில் பல்வேறு நாடுகளினதும் தலைவர்களை ஒரேயிடத்தில் தனியாகச் சந்தித்துப் பேசுவதற்கு தீட்டியிருந்த திட்டம் வெற்றி பெறவில்லை என்று இலங்கை அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கடந்த வாரம் ரசுயாவுக்கான அதிகாரபூர்வ பணயத்தை மேற்கொண்டிருந்த மகிந்த ராசுபக்ச நேற்று கொழும்பு திரும்பினார்.

ரசுயாவின் சென்.பீற்றர்ஸ்பேர்க்கில் நடைபெற்ற அனைத்துலக பொருளாதார மன்றத்தின் 15வது கூட்டத்தில் பங்கேற்க வரும் வெளிநாட்டு அரசுத் தலைவர்களைச் சந்திப்பதே இவரது பயணத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.

சுமார் 100 வரையான நாடுகளினது தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தை, அனைத்துலக நெருக்கடிகளில் இருந்து இலங்கையை விடுவிப்பதற்கான முயற்சிக்கு பயன்படுத்த மகிந்த ராஜபக்ச எண்ணியிருந்தார்.

ஆனால் ரஷ்ய அதிபர் டிமிற்றி மெட்வெடேவ், சீன அதிபர் ஹு ஜின்டாவோ, ஸ்பானிய பிரதமர் ஜோஸ் லூயிஸ் சபாட்டியோ, கசாகிஸ்தான் அதிபர் நூர்சுல்தான் நசர்பயெவ் ஆகியோரை மட்டுமே மகிந்த ராஜபக்சவினால் சந்திக்க முடிந்தது.

ரஷ்யா மற்றும் சீன அதிபர்களுடனான சந்திப்பு முன்னரே திட்டமிடப்பட்டிருந்தது.

அத்துடன் இந்த நாடுகள் இரண்டும் ஏற்கனவே இலங்கைக்கான ஆதரவை உறுதி செய்திருந்தவையாகும்.

இவர்கள் தவிர சு(ஸ்)பானிய பிரதமரையும் கசாகிஸ்தான் அதிபரையுமே மகிந்த சந்தித்துப் பேசியுள்ளார்.

இவர்களுக்கே மகிந்த ராசுபக்ச நாட்டு நிலைமைகள் மற்றும் போருக்குப் பிந்திய மீள்கட்டுமானம், நல்லிணக்க நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்துள்ளார்.

ஆனால் இந்தச் சந்திப்புகள் முக்கியத்துவம் மிக்கதாக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவையல்ல என்றும் இலங்கை அரசாங்க வட்டாரங்கள் கூறியுள்ளன.

மகிந்த எதிர்பார்த்தது போன்று பல நாடுகளின் தலைவர்களைச் சந்திக்க முடியாது போனதால், ரசுயப் பயணத்தின் முக்கிய நோக்கம் நிறைவேறவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.