குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 23 ம் திகதி செவ்வாய் கிழமை .

இலங்கை விவகாரத்தில் நெருக்கடிக்குள் இந்தியா! - இதயச்சந்திரன்

20 ,06. 2011 -....நெஞ்சை உறையவைக்கும் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பில் இது ஒரு போலி என்று மீண்டும் மீண்டும் கூறாமல் அதற்கு இலங்கை அரசு பதிலளிக்க வேண்டுமென ஜ.ம.மு. தலைவர் மனோகணேசன் வலியுறுத்தியுள்ளார். இறுதிப் போரில் நிகழ்ந்த போர்க்குற்றங்களை உள்ளடக்கியிருக்கும் இந்த ஆவணப்படம் ஐ.நா.மனித உரிமைப் பேரவையிலும் காண்பிக்கப்பட்டது.
 
நடந்தவற்றை மறந்து தேசிய இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை உருவாக்கலாம் என்று அரசு எண்ணுகிறது.
அளவெட்டியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நடத்திய தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் படையினர் மேற்கொண்ட அடாவடித்தனங்கள் நல்லிணக்கத்தை உருவாக்குவதில் அரசு முனைப்புக் காட்டவில்லை என்பதனை தெட்டத் தெளிவாக உணர்த்துகிறது.
 
தமிழர் தாயகத்தில் தமிழ் தேசிய அரசியலை நிர்மூலமாக்குவதில் ஆட்சியாளர்கள் தீவிரமாகச் செயற்படுவதையே இச்சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வதோடு ஏனைய தமிழ் கட்சிகளோடு ஒரு பொதுவான வேலைத்திட்டத்தில் செயற்படவேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
 
குறைந்த பட்ச ஜனநாயகத்தை நிலைநிறுத்தக்கூடிய வகையில் இந்த இணைவு அரசியல் தளம் உருவாக்கப்படலாம்.
 
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த சிவ்சங்கர் மேனன் குழுவினரிடம் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றினை அமைக்கப்போவதாக ஜனாதிபதி கூறியிருந்தார்.
 
அளவெட்டியில் தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது இராணுவத்தை ஏவி அச்சுறுத்தியவாறு நாடாளுமன்றக் குழு அமைத்து எதனைச் சாதிக்கப்போகிறது இலங்கை அரசு?
 
சந்திரிக்காவின் தீர்வுப்பொதி மற்றும் மங்கள முனசிங்க குழு, திஸ்ஸ விதாரண குழு என்பவற்றிற்கு என்ன நடைபெற்றது என்பதனை மக்கள் அறிவார்கள்.
 
காலத்தை இழுத்தடிப்பதில் தென்னிலங்கை ஆட்சியாளர்கள் முதன்மை ஸ்தானத்தை வகிக்கின்றார்கள் என்பதுதான் உண்மை.
 
நிபுணர் குழு அறிக்கைக்கு ஊடாக ஐ.நா. சபை கொடுக்கும் அழுத்தங்கள், மனித உரிமைச் சங்கங்களின் தொடர்ச்சியான அறிக்கைகள், சீபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டுமென பக்கத்து நாட்டுக்காரர் திணிக்கும் நெருக்கடிகள் என்பன இலங்கை ஆட்சியாளர்களை வேறு திசையில் சிந்திக்க வைக்கின்றன.
 
2011 மே 16ல் இலங்கை வெளிநாட்டமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்சும் இந்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவும் வெளியிட்ட கூட்டறிக்கையின் அடிப்படையில் பேச்சுவார்த்தை மேற்கொள்ள இலங்கை வந்த சிவ்சங்கர் மேனன், நிரூபமா ராவ், பிரதிப் குமார் குழுவினர் இனப்பிரச்சினை குறித்து எதுவும் பேசவில்லை.
 
தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் சட்டசபையில் மேற்கொண்ட தீர்மானங்கள் குறித்து இவர்கள் கவலை கொள்ளவில்லை.
 
தீர்மானத்தின் முக்கிய அம்சமான இலங்கை மீதான பொருளாதாரத் தடை என்பதனை நிராகரிக்கும் வகையில் இலங்கையுடனான பொருண்மிய உறவினை எவ்வாறு மேம்படுத்துவது என்பது பற்றியே இவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.
 
புவிசார் அரசியலை விட புவிசார் பொருண்மியம் (GEO- Economics) ஆனது தற்போதைய காலகட்டத்தில் மிகப்பொருத்தமான விடயம் என்பதை இவ்விரு நாடுகளும் உணர்ந்து கொள்கின்றன.
 
மனித உரிமை என்கிற அறம் சார்ந்த சொல்லாடல் பொருண்மிய வல்லரசாளர்கள் பயன்படுத்தும்' வெறும் அழுத்தக்கருவி என்று எழுத்தாளர் அருந்ததி ராய் கூறுவதில் நியாயமுண்டு. 2008, 2009 ம் ஆண்டு ஏற்பட்ட உலகப் பொருண்மிய வீழ்ச்சியினால் வலிமையும் அதற்கான இயங்கு தளங்களையும் கொண்ட மேற்குலகின் பொருளாதாரம் இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இதனை எவ்வாறு எதிர்கொண்டு புதியவகை உத்திகளை வடிவமைக்கலாமென சிங்னகள அறிவியலாளர்கள் ஆய்வுகளை மேற்கொள்வதை நோக்கவேண்டும.
 
இலங்கையின் வெளியுறவுக் கொள்கையை வெறுமனே இராஜதந்திர உறவு மண்டலத்தினுள் மட்டுப்படுத்தாமல் பொருளாதார உறவு சார்ந்த விரிதளங்களிற்குள் அதனை நீட்டிச்செல்வதே அரசின் திட்டம் என்கின்ற கருத்தினை இவர்கள் முன்வைக்கின்றார்கள்.
 
அதாவது இலங்கையின் வெளியுறவு மூலோபாயக் கொள்கையானது தென்னாசிய அயல் நாடுகள், பலமிக்க கிழக்காசிய நாடுகள் மற்றும் மேற்கிலுள்ள பாரம்பரிய வர்த்தகப் பங்காளிகள் ஆகியவற்றிற்கிடையே சமநிலையைப் பேணக்கூடிய வகையில் அமைய வேண்டுமென்பதே இந்த அரசியலாளர்களின் எதிர்பார்ப்பு.
 
சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பிற்கான புதியதளம் ஜீ- 20 நாட்டுக்கு ஊடாக உருவாகுவதால் மேற்குலகுடன் ஏற்படும் முரண்பாட்டு நிலைகைளத் தவிர்க்கவேண்டுமெனவும் ஆலோசனை கூறுகிறார்கள்.
 
அதேவேளை ஜீ- 20 கூட்டமைப்பை விட பிரிக்ஸ் (Brics) எனப்படும் புதிய பொருளாதார வல்லரசாளர்களின் கூட்டுக்குள் இலங்கையின் பொருண்மிய உறவினை இணைத்து விடுவது சிறந்தது என்பதுதான் இவர்களின் நோக்கம்.
 
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாபிரிக்காவை உள்ளடக்கிய இந்த பிரிக்ஸ் கூட்டானது உலக சனத்தொகையில் 45 சதவீதத்தையும் உலக உள்ளூர் மொத்த உற்பத்தியில் 25 சதவீதத்தையும் உலக வெளிநாட்டு நாணயக் கையிருப்பில் ( Foreign Currency Reserve) 60 சதவீதத்தையும் கொண்டிருக்கிறது.
 
உலகின் கையிருப்பு நாணயமாக புழக்கத்தில் இருக்கும் அமெரிக்க டொலரிற்குப் பதிலாக தமது சொந்த நாணயத்தை தமக்கிடையிலான கடன் பரிமாற்றத்திற்கு உபயோகிக்கலாம் என்கிற உடன்பாட்டிற்கு இந்த பிரிக்ஸ் கூட்டமைப்பு வந்திருப்பது தமக்கு சாதகமானது என இலங்கை கருதுகிறது.
அமெரிக்க தலைமையிலான மேற்குலகிற்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள பிரிக்ஸ் அமைப்பானது எதிர்கால நலனிற்கு பொருத்தமான தளமாக அமையுமென இலங்கை கருதுவது போலுள்ளது.
 
சமாந்தரமாக தென்கிழக்காசியாவிலுள்ள ஆசியான் (Asian) அமைப்பு மற்றும் மத்திய கிழக்கிலுள்ள வளைகுடா ஒத்துழைப்புச் சபை (Gulf Cooperation Council) ஆகியவற்றுடன் பொருண்மிய உறவினை ஏற்படுத்தக்கூடிய வழிவகைகளை உருவாக்க அரசு முனைகிறது.
 
மேற்குலகுடனான பொருண்மிய உறவினைப் பொறுத்தவரை தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி 61 விழுக்காடாக இருப்பதை 2015 ஆண்டளவில் 50 விழுக்காடாக குறைக்கவேண்டுமென இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை விஜரும்புகிறது.
 
தென்னாசிய பிராந்திய மட்டத்தில் மேற்கொள்ளப்படும் வர்த்தகம் 5 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதால் புதிய உலக சந்தையில் நிலைகொள்வது எப்படி என்பது குறித்தான முழுமையான மதிப்பீட்டின் தேவை இலங்கையில் உணரப்படுகிறது.
 
அதேவேளை கடந்த 10 வருடங்களாக இலங்கை இந்தியாவிற்கிடையே நடைமுறையிலுள்ள சுதந்திர வர்த்தக உடன்பாடு (FTA) இருதரப்பு வர்த்தக உறவினை மேம்படுத்தியுள்ளது எனலாம்.
 
ஆயினும் உள்ளூர் அரசியல் அழுத்தங்களால் இந்த சுதந்திர வர்த்தக உடன்பாடானது சேவை மற்றும் முதலீட்டுத் துறைகளை உள்ளடக்கியதான முழுமையான பொருளாதார இருதரப்பு உடன்பாட்டினை (CEPA) நோக்கி விரிவடையவில்லை.
 
ஏற்கனவே இதுபோன்ற (CECA) உடன்பாட்டில் ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தென்கொரியாவுடன் இந்தியா கைச்சாத்திட்டது குறிப்பிடத்தக்கது.
 
அத்தோடு ஜீ.சீ.சீ. (GCC) மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் சுதந்திர வர்த்தக ஒத்துழைப்பினை ஏற்படுத்தும் பேச்சுவார்த்தைகளிலும் இந்தியா ஈடுபடுகிறது.
 
இந்நிலையில் சம்பூரில் அனல் மின் நிலையத்தையும் காங்கேசன்துறையில் துறைமுகத்தையும் கொடுத்து இந்தியாவை சமாதானப்படுத்தலாமென இலங்கை அரசு எண்ணுவது வேடிக்கையாக இருக்கிறது.
 
பிராந்திய துறைமுகமாக அபிவிருத்தி செய்யப்படும் காங்கேசன்துறை துறைமுகத்தின் செயற்றிறன் மட்டுப்படுத்தப்படுவதாக இலங்கைத் துறைமுக அதிகாரசபையின் தலைவர் கலாநிதி பிரியந் பந்து விக்ரம ஒத்துக்கொள்கிறார்.
 
தூத்துக்குடி மற்றும் சென்னை துறைமுகங்களிலிருந்து சீமேந்து, உரம், உணவுப்பொருட்களை காங்கேசன்துறை, திருமலை துறைமுகங்களில் இறக்குவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படப் போகிறது.
 
ஆனாலும் ஏற்றுமதி இறக்குமதிக்கான பாரிய கொள்கலன்களின் கொண்டுசெல்லப்படும் சரக்குகள் கொழும்பு துறைமுகத்தை மையமிட்டே இயங்கும்.
 
ஆகவே தென்னிலங்கையில் சீன உதவியுடன் நிர்மாணிக்கப்படும் சுதந்திர வர்த்தக வலயங்களுக்கு மாற்றீடாக திருமலை மாவட்டத்தையும் அதன் இயற்கைத் துறைமுகத்தையும் உள்ளடக்கியதான வர்த்தக மண்டலத்தை உருவாக்க இந்தியா முயற்சிப்பதுபோல் தெரிகிறது.
 
சீபா ஒப்பந்தக் கனவு, கலைந்து போவதாக உணரும் இந்தியா வடகிழக்கு மாகாணங்களில் தமது பொருண்மிய முதலீட்டு ஆதிக்கத்தை உருவாக்க, இலங்கையுடன் பேரம் பேசும் நிலைக்குச் செல்லலாம்.
 
2000- 2009 காலப்பகுதியில் தமிழ்நாட்டில் மட்டும் வெளிநாட்டு நேரடி முதலீடாக 5.4 பில்லியன் டொலர்கள் குவிக்கப்பட்டுள்ளன.
 
இந்தியாவின் வர்த்தக ஏற்றுமதிக்காக இயங்கிக் கொண்டிருக்கும் 130 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (Special Economic Zone) தென்னிந்திய மாநிலங்களான ஆந்திராவில் 32 உம் தமிழ்நாட்டில் 22 உம் கர்நாடகாவில 20 உம் கேரளாவில் 72 உம் இருக்கின்றன.
 
அதாவது தென்னிந்தியாவில் பாரிய அளவில் உருவாகிக் கொண்டிருக்கும் சுதந்திர வர்த்தக மண்டலங்களுக்குப் போட்டியாக அம்பாந்தோட்டையில் 2717 ஏக்கர் பரப்பளவில் அதே போன்ற மண்டலங்களை உருவாக்குவது போலுள்ளது.
ஏற்கனவே அங்சுகு ஒரு பில்லியன் டொலர்களை முதலிட்டுள்ள பன்னாட்டு நிறுவனங்கள் வருகிற ஒக்டோபர் மாதமளவில் மேலதிகமாக 1.5 பில்லியன் டொலர் முதலீடுகளை கொண்டு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஆகவே இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவின் பொருண்மிய ஆதிக்கத்திற்கு சவாலாகும் வகையில் இலங்கையை ஒரு தளமாகப் பயன்படுத்த முனையும் சீனாவின் மறைமுக நிகழ்ச்சி நிரலினை இந்தியா எவ்வாறு எதிர்கொள்ளும் என்பதை காலம் பதிவு செய்யும். இது நிச்சயம் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் என்பதும் ஐயமில்லை

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.