குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

சொரணை படுமாறு கிள்ளிக்கொண்டுமனதைத் தொட்ட மரபுக்கவிதை - 1

20.06.2011.த.ஆ.2042--பண்பாட்டை வரலாற்றை உள்ளிக்கொடு; சொரணை படுமாறு கிள்ளிக்கொண்டு
மனதைத் தொட்ட மரபுக்கவிதை - 1--மலேசியத் திருநாட்டின் மூத்த - முன்னணிப் பாவலர்களுள் ஒருவர்; தம் மரபுக் கவிதைகளால் மலேசிய இலக்கியத்தின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் இன்றுவரையில் நீரூற்றி வருபவர். மலேசியத் தமிழர்களின் பிற்போக்கு எண்ணங்கள், கொடுங்கேடுகள், மனச்சிதைவுகள், மரபுமீறல்கள் முதலியவற்றைக் கண்டு ‘கணைகளாகப்’ பாய்ந்தவர் – இன்றும் அதே வீறோடு நிமிர்ந்து நிற்பவர். ஆழந்த மொழிப் பற்றும் குழுகாய நோக்கும் கொண்டவர். தமிழர்தம் மரபியல் விழுமியங்களைக் காப்பதற்காக முன்னின்று குரல் கொடுப்பவர். இப்படி இன்னும் அடுக்கிச் சொல்லத்தக்கவர்; மரபுக்கவிதைத் துறையில் தனியொரு சாதனையை நிகழ்த்திக் காட்டியவர் கவிச்சுடர் காரைக்கிழார்.

அவர் எழுதி அண்மையில் நாளிகையொன்றில் வந்த மரபுக் கவிதை என் மனதைத் தொட்டது – உணர்வுகளைத் தட்டியது. அவ்வுணர்வுகளைப் பதிவாக்கும் முயற்சியில் மலர்ந்துதான் இந்தப் படைப்பு.

பொன்னென்றும் பூவென்றும் புதுப்பாட்டுத் தேனென்றும்
பொழுதெல்லாம் பாடிநிற்பான் – அவன்
புகழ்க்கூட்டம் கூடிநிற்பான் – அந்தத்
திண்ணென்ற தடியன்தான் திறம்கெட்டத் தமிழன்தான்
திசையெங்கும் மோடிவைப்பான் – தாய்க்கு
வசையெங்கும் தேடிவைப்பான்

என்று எடுத்த எடுப்பிலேயே, புதுமை - நவினம் என்ற பெயரில் புழுக்கறைகளைப் படைப்புகளாக வழங்கிவரும் திறங்கெட்டவர்களை நையப்புடைக்கிறார். வெறும் விளம்பரத்திற்கும் பணத்திற்கும் புகழுக்கும் மயங்கி அலையும் இந்தப் போக்கற்றப் படைப்பாளிகள் தாய்(மொழி)க்கு வசைதேடி வைப்பவர்கள் என்று சாடுகின்றார்.

இப்படிச் சாடும் அளவுக்குப் புதுமைப் படைப்பாளிகள் என்னதான் செய்துவிட்டார்கள்? என்று நாம் சிந்திக்கத் தொடங்கும் அடுத்த கணமே அவர்களின் கெடுபுத்திகளைப் பட்டியலாகப் பாட்டில் சொல்லுகிறார் இப்படி:-

கனியென்ற மணியிங்கே அணிசெய்தல் நனிகண்டும்
காய்நாடிக் கலக்கம்செய்வான் – மொழிக்
கலப்புக்கோர் உலக்கம்செய்வான் – இந்தப்
பிணியாளன் நாவெங்கும் புண்ணாகிப் புரையாகிப்
பிறசொல்லே புழக்கம்செய்வான் – அவனே
பித்தன் போல் முழக்கம்செய்வான்

இவ்வாறு, தமிழில் பிறமொழிச் சொற்களைக் கலந்து படைப்புகளை ஆக்குகிறார்கள். தமிழ்க் கலை இலக்கிய மரபுக்குள் அன்னியப் பண்பாடுகளைக் கலந்து தருகிறார்கள். தான் பெரிய ஆளாவதற்குத் தமிழையே அழிக்கும் அவலச்செயலைச் செய்கிறார்கள். இப்படியான கேடுகளை எல்லாம் நீட்டி முழக்கி நியாயப்படுத்தும் இவர்களைப் பிணியாளன் – பித்தன் எனப் பறைசாற்றுகிறார் கவிஞர்.

மொழிமானங்கெட்ட இவர்களை என்னசெய்யலாம்? என்று வழியும் சொல்லுகிறார்; கூடவே களுக்கென்று சிரிக்கவும் வைக்கிறார் அடுத்த கண்ணியில்.

எடுப்பார்கைப் பிள்ளைபோல் இருக்கின்றான் இவனாலே
இங்கிலீசு கூத்தாடுது – தமிழ்
இதுகண்டு வேர்த்தாடுது – உதை
கொடுப்பார்கள் கொடுத்தால்தான் குரங்காட்டம் நிற்குமெனில்
கொடுப்போமே எத்தாவது – ஓங்கிக்
கொடுப்போமே குத்தாவது!

எத்தும் குத்தும் விட்டால் போதுமா? இல்லை, அவர்களுக்கு நமது மரபு - வரலாறு – வாழ்வியல் – பண்பாடு பற்றி தகுந்த தெளிவுகளைச் சொல்லி வழிகாட்டவும் வேண்டும் என்கிறார். என்னதான் கேடுகளை அவர்கள் செய்தபோதும் தமிழினத்தில் பிறந்துவிட்ட உறவை எண்ணி தாயன்போடு அரவணைப்பும் செய்கின்றார் கவிஞர்.

தமிழ்மானம் மறைத்தானாம் தரங்கெட்ட வடநாட்டான்
தலைமீது கல்லேற்றினான்! – தென்னன்
தலைதூக்கச் சொல்லேற்றினான் – அந்தத்
தமிழ்வீரம் மணியாரம் தரிக்கும்நம் தமிழன்னை
தலைமீது முள்ளேற்றினான் – அடஓ!
தாங்காத சுள்ளேற்றினான்

பசிகண்டு பால்தந்த தாய்தன்னை இகழ்கின்ற
பதடியாய் இருக்கலாமா? – இந்தப்
பாரும்தான் பொறுக்கலாமா? – கண்ணில்
கசிகின்ற நீர்கண்டு மகனேநீ உன்தாயைக்
காப்பாற்ற மறுக்கலாமா? பகையைக்
கழுவேற்ற மறக்கலாமா?

புதுமை – நவினம் என்ற மாயைக்குள் சிக்குண்டு மனம்தடுமாறும் தமிழர்க்குக் குறிப்பாக இன்றைய இளையோருக்கு வழிகாட்ட வேண்டிய கடமையும் பொறுப்பும் தக்காருக்கு உள்ளது. யாரின் கருத்தையும் சொற்பேச்சையும் கேட்பதற்குக்கூட முரண்டுபிடிக்கும் வன்மத்தை மண்டைக்குள் ஏற்றிக்கொண்டு தலைக்கணம் பிடித்தலையும் இளையப் படைபாளிகள் இதனைக் கேட்பார்களா என்பது கேள்விக்குறியே. இருந்தாலும், சொல்லவேண்டியதைப் பதமாகவோ தேவைப்பட்டால் கடிந்தோ சொல்லித்தானே ஆகவேண்டும்.

வீட்டுக்குள் விளைகின்ற பயிர்போலும் பிள்ளைக்கு
வீரத்தைச் சொல்லிக்கொடு – தமிழின்
விவரத்தை அள்ளிக்கொடு – பத்துப்
பாட்டுக்குள் வருகின்ற பண்பாட்டை வரலாற்றைப்
பதமாக உள்ளிக்கொடு – சொரணை
படுமாறு கிள்ளிக்கொடு!

சொல்லியும் கேட்காத மூடர்களாக - முரட்டுப்புத்தியராக - மக்கட்பதடிகளாக இருப்பார்களேயானால் அதற்கும் வழி சொல்லுகிறார்; அதனை வலியுறுத்தியும் சொல்லுகிறார் கவிஞர்.

வீணைபோல் நாதமொழி தமிழைநீ – படிஎன்றே
விரட்டுகிறேன் ஏடா! தப்பா? – இதிலே
விட்டுவைத்தல் கூடாதப்பா? – நெஞ்சில்
விருப்பத்தால் குழைந்தாலும் தானாக
மாணஓரு மயிலிறகு போடாதப்பா! – ஒட்ட
வாலறுப்போம் வாடாகுப்பா!

இன்றையச் சூழலில், தமிழுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளையும் தாக்குறவுகளையும் இக்கவிதை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது. பெரியவர்களுக்கு – பண்பாளர்களுக்கு – பட்டறிவுள்ள நல்லோர்களுக்கு நமது தாய்மொழியும் மரபும் கலைபண்பாடும் அடைந்திருக்கும் இனி அடையப் போகும் நலிவும் நலக்கேடும் தெள்ளென தெரிகிறது. அதனால், மனம் அஞ்சுகின்றனர் – அழுகின்றனர் – ஆபத்தைத் தடுக்க ஆவன செய்கின்றனர்.

ஆனால், இளங்கன்று பயமறியாது எனச் சொன்னதுபோல, இளம் படைப்பாளர்களோ கலை, கவிதை, இசை, நடனம், எழுத்து, இலக்கியம், திரைப்படம், சின்னத்திரை என எந்தவகை படைப்பாக இருந்தாலும் மதம்பிடித்த யானையொன்று கரும்புத் தோட்டத்துள் புகுந்தது போல அழித்தொழிக்கின்றனர்; நமது மரபியல் விழுமியங்களைச் சிதைத்தொழிக்கின்றனர்.

 

•மரபுக்கவிதை இன்னும் வரும்..

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.