குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 24 ம் திகதி புதன் கிழமை .

ஐ.நாவின் பொதுச் செயலராக பான் கீ மூன் மீளவும் தெரிவு இலங்கை இந்தியா ஆசியநாடுகள் ஆதரவு கொடுத்தது...

18.06.2011-தஆ.2042-- சனவரி 2012 இலிருந்து அடுத்த ஐந்து ஆண்டு காலத்திற்கும் ஐ.நாவின் பொதுச் செயலராக பான் கீ மூன் மீளவும் தெரிவுசெய்துள்ளதாக பாதுகாப்பு சபை வெள்ளியன்று பரிந்துரை செய்துள்ளது. ஐ.நாவின் உயர் பதவிக்கு தென்கொரியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலரை மீளவும் நியமிக்கவுள்ளதாக 192 நாடுகள் கலந்து கொள்ளும் ஐ.நாவின் பொதுக் கூட்டத்தில் செவ்வாயன்று பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

"01சனவரி 2012 இலிருந்து மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு அதாவது 31 டிசம்பர் 2016 வரையான காலப்பகுதியில் ஐ.நாவின் பொதுச் செயலராகச் செயற்படுவதற்கு பான் கீ மூன் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்" என 15 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நாவின் பாதுகாப்புச் சபை தெரிவித்துள்ளது.

லத்தீன் அமெரிக்கா, கரிபியன் போன்ற நாடுகள் பான் கீ மூனை மீளத் தெரிவு செய்யும் விடயத்தில் ஆதரவளிக்க முன்வராமையால் பாதுகாப்புச் சபையின் தீர்மானத்தை அறிவிக்க ஒரு நாள் காலதாமாகியுள்ளது.

வெள்ளி காலை வரை லத்தீன் அமெரிக்கா மற்றும் கரிபியன் போன்ற நாடுகள் இந்த விடயத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், இவற்றின் ஆதரவு என்பது உத்தியோகபூர்வமாகத் தேவையற்ற ஒன்று எனவும் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்துவம் பெற்றுள்ள ஐந்து உறுப்பு நாடுகளும் பான் கீ மூன் மீளவும் ஐ.நாவின் பொதுச்செயலராக கடமையாற்றுவதை ஏகமனதாக விரும்புகின்றார்கள்.

கொரியாவைச் சேர்ந்த பான் கி மூனுக்கு 67 வயதாகிறது. 2006-ம் ஆண்டு ஐ.நா.வின் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு தென் கொரியாவின் வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சராக இருந்தார்.

ஐ.நா. பொதுச் செயலாளராக இவரது இரண்டாவது பதவிக்காலம் 2012-ம் ஆண்டு தொடங்கி. 2016 வரை இப்பதவியில் இருப்பார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.