குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

செயலலிதா மன்மோகனிடம் சமர்ப்பித்துள்ள மனுவில் முதலாவது பிரச்சினையாக இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை

17 .06. 2011  -த.ஆ.2042--சிங்கள மக்களுக்குண்டான அதே சமத்துவமான உரிமைகளோடும் சுய கௌரவத்தோடும் தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் வடக்கு கிழக்கில் தமக்கான சுயஆட்சி முறையினைக் கொண்டிருக்கும் வகையில் அரசியலமைப்பு சீர்திருத்தங்களை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உள்நாட்டில் இடம் பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் முழுமையாகத் தங்களுடைய சொந்த இடங்களில் குடியேற்றப்பட்டு சிங்கள மக்களுக்குண்டான சமத்துவ உரிமைகளை அனுபவிக்க ஏற்பாடு செய்யப்படும் வரை இலங்கை மீது சர்வதேச நாடுகளுடன் இணைந்து பொருளாதாரத் தடையை மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இலங்கைக்கெதிரான போர்க்குற்றங்கள் குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட ஐநாவில் இந்தியா நடவடிக்கைகளை  எடுக்க வேண்டும் என்றும் தமிழ் நாட்டு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் கையளித்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் 20 விடயங்கள் அடங்கிய மனு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார். அவர் சமர்ப்பித்துள்ள அந்த 20 விடயங்கள் அடங்கிய மனுவில் முதலாவது பிரச்சினையாக இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை குறிப்பிடப்பட்டிருக்கிறது.
 
அம்மனுவில் இலங்கைத் தமிழர் தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு:
இலங்கைத் தமிழர்கள் தொடர்பான பிரச்சினை
1.     இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகள்:
தமிழர்களுக்கு எதிரான இலங்கைப் படையினரின் இறுதிப் போரில், அப்பாவிப் பொதுமக்களும்  போராளிகள் அல்லாதவர்களும் கொல்லப்பட்டதாகவும் மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும் பல அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்த மோதலில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சுயாதீனமான ஊடகங்களால் இவை வெளிக்கொண்டு வரமுடியாதபடி தடைசெய்யப்பட்டிருந்தன. ஆனால், அங்கு நடைபெற்ற பெருமளவிலான அட்டூழியங்களுக்கு இலங்கை அரசாங்கம் தான் nhறுப்பு என்பதை எடுத்துக்காட்டும் ஏராளமான தகவல்கள் கிடைக்கின்றன. ஐநா செயலாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக முக்கியமான வலுமிக்க பல குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியுள்ளது.
                அ. தொடர்ந்தேர்ச்சியான கடும் ஷெல் தாக்குதல்களால் பொதுமக்கள் கொல்லப்பட்டமை.
 
ஆ. வைத்தியசாலைகள் மீதும் மனிதாபிமான நிறுவனங்கள் மீதும் ஷெல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமை.
 
இ. மனிதாபிமான உதவிகள் மறுக்கப்பட்டமை.
 
ஈ. மோதலில் இடம் பெயர்ந்த மக்கள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் உட்பட  பாதிக்கப்பட்ட பலர் மனித உரிமை மீறல்களால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
 
உ. மோதல் பிராந்தியத்துக்கு வெளியே பெருமளவிலான மனித உரிமை மீறல்கள் இடம் பெற்றுள்ளன. ஊடகங்கள் அரசாங்கத்தை விமர்சிப்போர் உட்படப் பலருடைய மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன. இவ்விடயங்களை இந்திய அரசாங்கம் ஐநா சபைக்கு எடுத்துச் சென்று இதற்குக் காரணமானவர்களை போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த வேண்டும்.
 
2.    இலங்கைத் தமிழருக்குச் சமத்துவமான உரிமைகள்:
இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலை பெருமளவான தமிழ் மக்களi அவர்களுடைய தாயகப் பிரதேசத்திலேயே இடம் பெயர வைத்துள்ளது. தமிழ் மக்களில் பெரும்பாலானோர் இன்னமும் அகதி முகாம்களுக்குள்ளேயே முடக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு சாதாரண பிரஜைகளுக்கான உரிமைகளை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது. இது மிக முக்கியமாக இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதனை உறுதிப்படுத்துவதோடு, அந்நாட்டின் பிரipகள் என்ற வகையில் சிங்கள சமூகத்தனருக்குண்டான சமத்துவ உரிமைகளையும் உறுதிப்படுத்தும் வகையினதாக அமைதல் வேண்டும்.  இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் வரலாற்று ரீதியாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் வசித்து வருகிறார்கள். அதேவேளையில் சிங்கள் மக்கள் நாட்டின் ஏனைய பாகங்களில் வாழ்ந்து வருகிறார்கள். அந்த வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் முழுமையான தங்களுடைய ஆட்சியை நடாத்தவும் பங்கேற்கவுமான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்பதனை இந்தியா இலங்கை அரசாங்கத்தினுடைய மனதில் ஆழமாகப் பதிய வைத்தல் வேண்டும்.
 
அரசியல் சீர்திருத்தங்கள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். அதுவும் குறிப்பாக அரசியலதிகாரம் மாகாணங்களுக்குப் பகிரப்படும் விதத்தில் மேற்கொள்ளப்படல் வேண்டும்.  மக்களுடைய விருப்பக்களைப் பூர்த்திழ செய்யும் வகையில் குறிப்பாக இலங்கைத் தமிழ் மக்களுடைய அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் முடிவெடுக்கப்படாத பட்டியலிலுள்ள பல விடயங்கள் மாகாணப் பட்டியலக்கு மாற்றப்பட வேண்டும். 
 
3.    மீள்குடியேற்றப்படும் வரை இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும்.
இலங்கை சுதந்திரமடைந்த நாளிலிருந்து வருடக்கணக்காக அங்கு வசித்து வரும் தமிழ் மக்கள் தாம் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடாத்தப்பட்டு வரும் அநீதிக்கு  எதிராகப் போராடி வருகிறார்கள். இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் சமத்துவமான உரிமைகளோடும், சுயமரியாதையோடும் ஒரு கௌரவமான வாழ்வை வாழத் தேவையான அரசியலமைப்பு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளை ஊக்குவிப்பதோடு அவற்றை உறுதிப்படுத்திடல் வேண்டும். அரசியலமைப்பு ரீதியான மாற்றங்களுக்கு மேற்கொள்ளப்படும் எல்லா சாத்தியமான நடவடிக்கைகளையும் இலங்கை அரசாங்கம் வேரறுத்து விட்டிருக்கிறது.
 
இலங்கை அரசாங்கப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் இலங்கையிலுள்ள அப்பாவிப் பொதுமக்கள் பெருமளவில் கொல்லப்பட்டமை தொடர்பான ஆதாரங்கள் மூடிமறைக்கப்பட்டுள்ளன.  நாட்டின் வடக்கு கிழக்குப் பாகத்தில் இடம் பெயர்ந்துள்ள தமிழ்மக்கள் மீள் குடியேற்றப்படுவது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகளை  உறுதிப்படுத்துவதற்கான தெளிவான வழிமுறைகள் ஏதும் இல்லை. தமிழ் மக்கள் தத்தமது சொந்த இடங்களில் மீள் குடியேற்றப்பட்டு, அங்கு கௌரவத்தோடும் சிங்கள மக்களுக்குண்டான அதே அரசியலமைப்பு 
உரிமைகளுடனும் வாழ்வதற்கான நிலை ஏற்படும் வரை இந்தியா ஏனைய அனைத்து நாடுகளுடனும் இணைந்து இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத் தடையை முன்னெடுக்க முன்முயற்சிகளை எடுக்க வேண்டும்
 
4.    இலங்கை அகதிகளுக்கான நலன்புரித் திட்டத்தை புதுப்பித்தல்:
 
இலங்கை அகதிகளுக்கான புனர்வாழ்வு மற்றும் நிவாரணம் என்பன தமிழ் நாட்டு அரசாங்கத்தின் கவனத்துக்குட்பட்டவை என்பதில் எந்த மாறுபட்ட அபிப்பிராயமுமில்லை. இந்திய அரசாங்கம் அவர்களுடைய வீட்டுக்கான செலவு, அடிப்படை வசதிகள், உணவு மற்றும் உடை போன்றவற்றுக்கான செலவாக 44.87 கோடி ரூபாய்களை வருடத்துக்கு ஒதுக்கியுள்ளது. அரசு அகதிகளுக்கான மேலதிக நலன்புரி நடவடிக்கைகளுக்காக  மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி மற்றும் உபகரணங்கள், விளையாட்டு உபகரணங்கள், திருமணத்துக்கான உதவிகள் என்பவற்றுக்காக 16.11 கோடி ரூபாய்களை ஒதுக்கியுள்ளது.  தற்போது தமிழ் நாட்டு மக்களுக்காக மேற்கொள்ளப்படும் இந்த உதவித்திட்டத்தை தற்போது இலங்கை அகதிகளுக்கும் தமிழ் நாட்டு அரசு விசாலித்திருக்கிறது.
 
வயதானவர்களுக்கும் ஆதரவற்றவர்களுக்குமான சமூக பாதுகாப்புத் திட்டம்.
 
20 கிலோ வரையான இலவச அரிசித்திட்டம்
 
பலசரக்குப் பொருட்களை குறைந்த விலையில் பங்கீட்டு அட்டைக்கு வழங்குதல்.
 
சிறுமிகள் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டம்
இலவச தையல் மெசின்கள்
 
தமிழ்நாட்டு அரசின் இவ்வாறான நடவடிக்ககைளுக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் நிதியுதவியை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.