குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 10 ம் திகதி வெள்ளிக் கிழமை .

சூரியனின் புதிரை ஆராயும் இந்திய விஞ்ஞானி

17.06.2011.த.ஆ-2042-இந்திய விஞ்ஞானி திவ்யேந்து நந்தியின் ஆராயும் ஆர்வமெல்லாம் சூரியன் மீதுதான். 37 வயதாகும் திவ்யேந்து, சூரியனைப் பற்றிய மிக முக்கியமான ஆய்வை மேற்கொண்டு வருகிறார் சூரியனின் அண்மைக் கால புதிரான மாற்றங்களுக்கு விடை காண் பதே திவ்யேந்துவின் பிரதான நோக்க மாக இருக்கிறது. குறிப்பாக, சன்சு பாட்' எனப்படும் 'சூரியப் புள்ளிகளின்' மறைவு குறித்து.

கொல்கத்தாவைச் சேர்ந்த இயற்பியலாளரான திவ்யேந்து, பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் சயன்ஸில் பயின்றவர். பின்னர், அமெரிக்காவில் மொன்டானா, ஹார்வர்டு போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்ட திவ்யேந்து, 8 ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பியிருக்கிறார். சூரியன் தொடர்பான தனது ஆய்வுகளைத் தீவிரப்படுத்தியிருக்கிறார்.

கடந்த 2008- 2009-க்கு இடையில், சூரியனில் சூரியப் புள்ளிகள் காணாமல் போனது ஏன் என்பதே திவ்யேந்துவின் ஆய்வின் மய்யமாக இருக்கிறது. தொலைநோக்கிகள், பிற உபகரணங்கள் மூலம் சூரியனை ஆராய்ந்து கொண்டிருக்கும் விஞ்ஞானிகளுக்கு, ஏன் இவ்வாறு சூரியப் புள்ளிகள் காணாமல் போயின என்பது புரியாத புதிராக இருக்கிறது.

சூரியப் புள்ளிகள் குறித்து விஞ்ஞானிகள் அதிக அக்கறை கொள்வதற்குக் காரணம் இருக்கிறது. பூமிவாழ் உயிரினங்கள் மீதும், விண்வெளி காலநிலை மீதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை இவை. சக்திவாய்ந்த காந்தப்புலங்களான சூரியப் புள்ளி கள், அவ்வப்போது தோன்றுவதும், மறைவதும், அவற் றின் எண்ணிக்கையும், அடர்த்தியும் கூடுவதும், குறை வதும் இயல்புதான்.

ஆனால், இவ்வளவு நீண்ட காலத் துக்குக் காணாமல் போனதில்லை. ஒரு நூற் றாண்டுக்கு மேலாக நிகழாத அதிசயம் இது. அதனால் தான் விண் வெளி ஆராய்ச்சி யாளர்களும், காலநிலை ஆய்வாளர் களும் வியப்பும், கவலையும் அடைந்திருக்கின்றனர்.

சூரியப் புள்ளிகள் மறைவால் சூரியனின் சக்தி சற்றுக் குறைந்து, சூரிய ஒளி சிறிது குறைந்திருப்பதைப் போலத் தோன்றுகிறது. சூரியனின் இந்த மாற்றம் பூமி மீது நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்ற போதும், பூமியின் வளிமண்டலப் படலத்தைச் சுருங்கச் செய்திருக் கிறது. எரிகற்கள் போன்ற விண் வெளிக் கழிவுகளைத் தடுத்து நிறுத் தும் வடிகட்டியாக வளிமண்டலப் படலம் உள்ளது.

கழிவுகள் இந்தப் படலத்தை எட்டியதுமே எரிந்து அழிந்துவிடுகின்றன. ஒருமாதிரியான சுயசுத்திகரிப்பு அமைப்பு இது. ஆனால், இந்தப் படலம் சுருங்கும்போது, விண்வெளிக் கழிவுகளை ஈர்த்து எரிக்கும் இதன் ஆற்றலும் குறைகிறது. ஆக, விண்வெளிக் கழிவுகள், விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் நமது செயற்கைக்கோள்களுடன் மோதும் அபாயம் அதிகரிக் கிறது.

தவிர, விண்வெளியில் இருந்து மேலும் அதிகமான மின்காந்த நுண்ணலைகள் பூமிப்பரப்பை அடையும். அது, பூமியின் பருவநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

இந்த விஷயம் குறித்து ஆராய்வதற்கு இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் நிதியுதவி தனக்குச் சரியான நேரத்தில் கிடைத்திருப்பதாகக் கூறுகிறார் திவ்யேந்து நந்தி. திவ்யேந்துவுடன், அவருடைய முன்னாள் பி.எச்டி., மாணவரான ஆண்ட்ரஸ் முனோஸ்-ஜராமில்லோவும், மொன்டானா பல்கலைக் கழகத்தின் பீட்ரஸ் மார்டன்ஸும் ஆய்வில் இணைந் துள்ளனர்.

சூரியப் புள்ளிகள் ஏற்படுத்தக்கூடிய சூரிய சக்திப் புயல்கள் விண்வெளியில் சுற்றிவரும் செயற்கைக் கோள்களிலும், தொலைத்தொடர்பிலும் பாதிப்பை ஏற் படுத்தக்கூடியவை. எனவே இந்திய- அமெரிக்க விஞ்ஞானிகளின் ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு முக்கியமான ஆய்வில் நம்மவரும் இடம்பெற்றுள்ளது நமக்குப் பெருமைதானே!

 

 

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.