குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 10 ம் திகதி வெள்ளிக் கிழமை .

யாழ்ப்பாணத்தில் TNA ன் பிச்சாரக் கூட்டத்தில் படைத்தரப்பு புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் TNA ன் பிச்சாரக் கூட்டத்தில் படைத்தரப்பு புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல் :
17.06. 2011  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் உள்ளுராட்சி சபை தேர்தலுக்காக இன்று முதலாவதாக ஆரம்பிக்கப்பட்ட பிரச்சாரக் கூட்டத்தில் சீருடையில் புகுந்த படையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் இன்று மாலை 6.30 மணியளவில் அளவெட்டி மகாஜனா சபை மண்டபத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளுராட்சி சபை தேர்தலுக்காக தனது முதலாவது பிரச்சாரக் கூட்டத்தை ஆரம்பித்திருந்தது. 
  தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன், சரவணபவன் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், மற்றும் விநாயகமூர்த்தி உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.  நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரை முடிவடையும் கட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரான சரவணபவன் உரையாற்றிக் கொண்டிருந்தார். திடீரென 15க்கும் அதிகமாக படையினர் அங்கு சென்று குவிந்ததாகவும் அங்கு உரையை கேட்டுக் கொண்டிருந்த பொதுமக்கள் மீது தடாலடியாக கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தத் தொடங்கியதாகவும் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
 
2க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் கடுமையான தாக்குதல் காரணமாக காயங்கள் மத்தியில் பொதுமக்கள் தப்பி ஓடி விட்டதனால் காயமடைந்தவர்கள் தொடர்பான சரியான தகவல்கள் வெளியாகவில்லை.
 
 மேலும் சரவணபவன் உரையாற்றிக் கொண்டிருந்த வேளை மேடையிலேறிய படைச்சிப்பாய் ஒருவர் மைக்கினை அடித்து நொருக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒலிபெருக்கி;க் கருவிகள் முற்றாக அடித்து நொருக்கப்பட்டுள்ளன.
 
 செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் பலரும் அடி உதைக்குள் சிக்கியுள்ளனர். அவர்களும் தற்போது தப்பித்து தலைமறைவாகியிருக்கின்றனர். தம்முடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டாம் என அங்குள்ள ஊடகவிலாளர்கள் கோரி வருகின்றனர். 
 
படையினர் தேடுதல் நடத்திக் கொண்டிருப்பதாகவும் அருகிலுள்ள குடியிருப்புகளில் அடைக்கலம் புகுந்தவர்களை தேடித் தேடி தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பதமாகவும் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
 
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால்  முதலாவதாக ஆரம்பிக்கப்பட்ட பிரச்சாரக் கூட்டத்தில் படைத்தரப்பின் இந்த சடாலடித் தாக்குதல் பொதுமக்களிடையே

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.