குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 10 ம் திகதி வெள்ளிக் கிழமை .

பிரிட்டன் துணைத்தூதர் யாழ்ப்பாணம் பயணம் மேற்கொண்டுள்ளார்

14 .06. 2011த.ஆ.2042-  -யாழ் குடாநாட்டின் உண்மை நிலைமைகளைக் கண்டறிந்து கொள்வதில் குடாநாட்டிற்கான பயணத்தை மேற்கொண்ட பிரிட்டிசு துணைத்தூதுவர் மற்றும் அவரின் செயலாளர் ஆர்வம் காட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது.  யாழ் குடாநாட்டிற்கான பயணயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த பிரிட்டிசு துணைத் தூதுவர் மாட்டீன் மார்க் மற்றும் அவரது செயலாளர் ஆகியோர் நேற்றைய தினம் தெல்லிப்பளை உயர் பாதுகாப்பு வலயத்தில் கூடிய நேரம் செலவழித்தனர். யாழ்மாவட்டக் கட்டளைத் தளபதி அவர்கள் மக்கள் மீளக் குடியமர அனுமதிக்கப்பட்ட கொல்லங்கலட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணயம் செய்தனர். இதேவேளை படையினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டுள்ள தெல்லிப்பளை புனர்வாழ்வு நிலையத்திற்கு அவர்கள் பயணம் செய்தனர். ஆனால் பொதுமக்கள் இப் புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டவர்களை சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டேயிருக்கின்றது.

 இதனிடையே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேசு பிரேமச்சந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆகிய இருவரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர். குடாநாட்டில் முற்றுமுழுதாக இராணுவ ஆட்சியே தொடர்வதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினர்.

 குடாநாட்டில் என்றுமில்லாதவாறு கெடுபிடிகள் நிறைந்திருப்பதாகவும் அச்சுறுத்தல்கள் தொடர்வதாகவும் தெரிவித்தனர். குறிப்பாக சுரேஸ் பிரேமச்சந்திரனின் தனிப்பட்ட செயலாளர் றமேசு மீதான தாக்குதல் மற்றும் மாநகரசபை ஊறுப்பினர் விந்தன் மீதான கொலை முயற்சி என்பவற்றை உதாரணமாகச் சுட்டிக்காட்டினர்.  இதனிடையே மதியம் யாழ் அரசாங்க அதிபரைச் சந்தித்த பிரிட்டிஸ் தூதுக்குழு அதன்பின்னர் அவர்களின் நிதியுதவியுடன் கட்டிமுடிக்கப்பட்ட கேரைதீவு சங்குப்பிட்டி பாலத்தினைப் பார்வையிட்டனர். மாகாதேவா போதி எனப்படுகின்ற பாலத்தினை பிரிட்டிஸ் அரசின் முழுமையான நிதியுதவியின்கீழ் கட்டி வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.

 இதையடுத்து கிளிநெச்சிக்கு பயயம் செய்த அவர்கள் நாளையதினம் கிளிநொச்சியில் சந்திப்புக்களை நடத்தவுள்ளதாகத் தெரியவருகின்றது. அதன்பின்னர் அவர்கள் கொழும்பிற்குத் திரும்பவுள்ளனர். தரைவழிப் பாதையூடாகவே அவர்களது போக்குவரத்து அயைவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 இதனிடையே அரசால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட போராளிகள் குடும்பங்களுடன் மீள் இணைவது தொடர்பாகவும் ஒதுக்கப்பட்ட நிதி உரியமுறையில் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளின் குடும்பங்களைச் சென்றடைய வேண்டுமென்பதே தமது எதிர்பார்ப்பென சுரேஸ் பிரேமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார்.

 பிரிட்டன் துணைத்தூதர் யாழ்ப்பாணம் பயணம் மேற்கொண்டுள்ளார் :
 
இலங்கைக்கான பிரிட்டனின் துணைத்தூதர் மார்க்கூடிங் யாழ்ப்பாணத்துக்கு நேற்று உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.இந்த விஜயத்தின் போது தெல்லிப்பழை புனர்வாழ்வு நிலையம் மற்றும் தெல்லிப்பழை, கொல்லன் கலட்டி ஆகிய பகுதிகளில் மீள்குடி யேற்றப்பட்ட மக்களை இவர் சந்தித்து அவர்களின் நிலைமை தொடர்பாக நேரில் பார்த்து அறிந்துகொண்டார். 
 
 அத்துடன் புனர்வாழ்வளிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் தற்போதைய நிலை மற்றும் சமூகத்துடனான அவரிகளின் ஒருங்கிணைவு என்பன குறித்து இந்த விஜயத்தின் போது மார்க்கூடிங் அவதானித்தார்.
 
 இதன் போது பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளையும் அவர் சந்தித்தார்.
 
 வட மாகாணத்திலுள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் சமூக மீள்இணைப்புக்கென பிரிட்டன் சார்பில் சுமார் 90 மில்லியன் ரூபாவை (5 லட்சம்  ஸ்ரேலிங் பவுண்)  வழங்கவுள்ளதாகவும் இதன் போது அவர் தெரிவித்தார். இதேவேளை, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள கண்ணி வெடி அகற்றல் நடவடிக்கைகளுக் காக 3,000,000 ஸ்ரேலிங் பவுண்களை வழங்கவுள்ளதாக பிரிட்டன்  அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.