குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

இலங்கையின் போர்க்குற்றங்கள் மீதான போர்வையை அகற்றி விடல்

14.06.2011.த.ஆ.2042--என்னுடைய படமான இலங்கையின் படுகொலைக்களங்கள் அப்பாவித் தமிழ் மக்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட அக்கிரமத்தை வெளிப்படுத்துகிறது. ஐநா இதனைப் புறக்கணித்துவிட முடியாது. (இன்று சனல் 4இல் இது காண்பிக்கப்படுகிறது) - ஹலும் மக்ரே இது தான் இவை பற்றி உரக்கப் பேசுவதற்கான சந்தர்ப்பம். தலைக்கு மேலால் கிபீர் குண்டு வீச்சு விமானங்கள் அச்சமூட்டும் வகையில் ஒலியெழுப்பிக் கொண்டு வருகையில், எந்தக் கருணையுமேயின்றி கடுமையான ஆட்லறி ஷெல் தாக்குதல்களை இலங்கை இராணுவம்  மேற்கொண்டு கொண்டிருக்கையில், அச்சம் கொண்ட தமி;ழ் குடும்பங்கள் ஆழமற்ற பதுங்கு குழிகளில் நெருக்கியடித்துக் கொண்டு உயிரைக் கையில் பிடித்தபடி இருக்கிறார்கள்.
 
ஜனவரி 2009 தமிழீழ சுதந்திர அரசுக்கான போராட்டத்தின் முடிவுகாலம் ஆரம்பமாகியது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஒடுங்கிய பகுதிக்குள் 4 லட்சம் பேர் இருந்தார்கள். மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு பயங்கரவாத்திற்கு எதிரான போர் என்ற கோஷத்துள் ஒளிந்து கொண்டு – அது விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போர் தொடுக்க ஒரு அங்கீகாரத்தைக் கொடுத்தது. -  போரைத் தொடங்கியது. ஐநாவும் ஏனைய மனித உரிமை அமைப்புக்களும் அங்கிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டன. சர்வதேச ஊடகங்கள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. விமர்சனபூர்வமாக இருந்த உள்ளூர் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். காணாமல் போயினர், அஞ்ஞாதவாசம் போயினர். உலகம் அங்கிருந்து தூர வைக்கப்பட்டது.
 
ஷெல் விழுகின்ற போது வெறும் மூன்றடி பதுங்குகுழுpகளே சிறிய பாதுகாப்பை வழங்குவனவாக இருந்தன. பெரியவர்கள் சிறுவர்களின் மேல் படுத்து அவர்களைக் காப்பாற்ற முயன்றார்கள். தரை மட்டத்தற்குச் சிறிது கிழேயே தலையை வைத்துக் கொண்டார்கள்.  சிலர் சிறிய கமெராவை வைத்து இச்சூழலிலும் படம் பிடித்தார்கள்.
 
குழந்தையைக் கையில் பிடித்துக் கொண்டு பதுங்குகுழிக்குள் இருந்த பெண் பதட்டத்துடன் அரற்றினாள் தயவு செய்து பங்கருக்குள் வந்து விடுங்கள். வீடியோ எடுத்துக் கொண்டு நிற்காதீர்கள் என. அவள் தமிழில் அவ்வாறு கத்தினாள். இந்த வீடியோவை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள், அவர்கள் எல்லோரையுமே கொன்றொழிக்கும் போது?
 
அடுத்த நான்கு மாதங்களில் இரண்டு விடயங்கள் நடைபெற்றன. முதலாவதாக அரசாங்கம் பாதுகாப்பு வலயத்துள் அமைந்திருந்த தற்காலிக வைத்தியசாலைகளை இலக்கு வைத்து அவற்றின் மீது மீது சரமாரியான குண்டுகளை வீசி ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொல்ல முயற்சித்திருக்கிறது. இது வரை 40ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. உண்மையில் அதற்கும் மேலாகவும் இருக்கலாம். மற்றையது இதே மக்கள் விடுதலைப் புலிகளால் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்டார்கள் என்பதும் அது அரசாங்கத்தின் கொடுர நடவடிக்கைகளுக்கு எவ்விதத்திலும் குறைந்ததல்ல என்பதும்.
 
இதில் இன்னொரு விடயமும் உள்ளடங்கியிருக்கிறது. அதாவது இப்படங்களை எடுத்த ஒளிப்படப்பிடிப்பாளன் ஒளிப்படப்பிடிப்பாளினிகள் பற்றியது. பலர் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். சில வேளைகளில் சாதாரண வீட்டுத் தேவைகளுக்குப் பயன்படுத்தும் கமெரா பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சில வேளைகளில் தொலைபேசிகளில் உள்ள கமெராவினால் எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்த்தரப்பினர் இது தொடர்பில் ஏராளம் படங்களைப் பெற்றிருக்கின்றனர். இணையத்தில் அவை காணக்கிடைக்கின்றன.  இது தவிர சிறிலங்கா ஆயுதப்படைகளின் போர்க்குற்றங்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பான விகாரமான பல காணொளிக்காட்சிகள் புகைப்படங்கள் என்பன அவற்றை மேற்கொண்டவர்களாலேயே எடுக்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் தங்களது கைத்தொலைபேசியில் இவற்றைப் பதிவு செய்திருக்கிறார்கள். இப்போது இரண்டு வருடங்களுக்குப் பின்னர் அந்தப் பெண்மணி ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதில் கிடைத்திருக்கிறது. இந்தக் காணொளிக்காட்சியைக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள் என்பது தான் அந்தக் கேள்வி.
 
அந்தக் காணொளிக் காட்சிகளைக் கொண்டு ஒரு படத்தை எங்களால் தயாரிக்க முடிந்திருக்கிறது.  தாமதமானாலும் இக்குற்றங்களுடன் சம்பந்தப்பட்டவர்களை நீதியின் முன் கொண்டு வந்து நிறுத்த முயலுகிறது. இந்தப்படம் தான் சிறிலங்காவின் படுகொலைக்களங்கள் என்பதாகும். இது செவ்வாய் இரவு சனல் 4இல் ஒளிபரப்பப்படவுள்ளது.
  
இத்திரைப்படம் ஒரு குழப்பத்தை உருவாக்கக்கூடும். ஏனெனில் இத்திரைப்படத்தில் வரும் காட்சிகள் மிகவும் பயங்கரமானவையாக மையநீரோட்டத் தொலைக்காட்சிகளில் முன்னொரு போதும் ஒளிபரப்பாகாதவையாக இருக்கின்றன. ஆனால் நாங்கள் நம்புகிறோம் இது இதற்குப் புறம்பான வேறொரு காரணத்திற்காக நினைவு கூரப்படும். நாங்கள் நம்புகிறோம், தங்களுடைய சொந்த மக்களையே படுகொலை செய்தவர்களை இது நினைவூட்டும். அத்தோடு ஐநா, சர்வதேச சமூகம், உலகின் அதிகார சக்திகள் என்பவற்றிற்கு இவை முக்கியமானவை. அதுமட்டுமன்றி நவீன தொழில் நுட்பங்களின் சாத்தியப்பாடுகளையும் இது வெளிப்படுத்தி நிற்கிறது. அதாவது போர்க்குற்றங்களையோ அல்லது மனிதத்துவத்திற்கெதிரான நடவடிக்கைகளையோ இரகசியமாகச் செய்து விட்டுத் தப்பிவிட முடியாது. இப்போதிருந்தே பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாகவும் பாதிப்புக்குள்ளாக்கியவர்கள் தொடர்பிலும் விடயங்கள் பதிவு செய்யப்பட்டுக் கொண்டே இருக்கும்.
 
ஆனால் இது முதற் கட்டம் இரண்டாவது இத்தகைய அச்சம் தருகிற ஆதாரங்கள் புறக்கணிக்கப்பட முடியாதவை என்பது. இந்தக்காட்சிகள் இவ்வாறான காட்சிகளை  ஒளிபரப்ப தொலைக்காட்சிகள்; ஏற்றுக் கொண்டுள்ள சாதாரண எல்லைகளை இன்னும் உந்தித்தள்ளும்.
 
தடுத்து வைக்கப்பட்டவர்களையும் வாய்ப்பூட்டுப் போடப்பட்டவர்களையும், பச்சை இரத்தம் தெறிக்க படுகொலை செய்யபப்டுவர்களையும் இதில் நீங்கள் காணலாம். அப்பாவிப் பொதுமக்கள் தற்காலிக வைத்தியசாலைகளின் தரைகளில் மரணிக்கும் அவலத்தையும் இதில் நீங்கள் காணலாம். இலங்கை அரசின் மருந்துப் பொருட்களுக்கான தடையினால் அவர்கள் இறக்கிறார்கள். இவ்வாறான வழிமுறையின் மூலம் தான் மக்களை இதில் சிரத்தையுடன் கவனம் கொள்ள வைக்க முடியுமா? நாங்கள் நம்புகிறோம் இந்த படங்களைக் காட்டுவது சரியான வழிமுறை தான் என்று.
 
இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஐநாவின் நிபுணர் குழு இலங்கை அரசாங்கத்தாலும் விடுதலைப் புலிகளாலும் போர்க்குற்றங்களும் மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்களும் இழைக்கப்பட்டுள்ளதாகவும், அவை தொடர்பில் விசாரணை நடாத்த ஒரு சர்வதேசப் பொறிமுறை ஒன்றை பான் கீ மூன் உருவாக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்திருந்தது. ஆனால் இது வரை அது மேற்கொள்ளப்படவில்லை. அவர் சொல்கிறார் அதற்கான அதிகாரம் தனக்கு இல்லையென. அது விவாதத்திற்குரியது. ஆனால் ஐநாவின் பாதுகாப்புக் கவுன்சிலுக்கும் மனித உரிமைக் கவுன்சிலுக்கும் இது தொடர்பில் அதிகாரமுள்ளது. ஐநா மீளவும் இதில் தோல்வியடையுமாயின்   ஒவ்வொரு கொடுங்கோல் ஒடுக்குமுறை ஆட்சியாளருக்கும் தெளிவான ஒரு செய்தி கிடைக்கும்: உங்களுக்கு வேண்டுமானால் உங்களுடைய சொந்த மக்களையே நீங்கள் சட்டத்திற்குப் புறம்பாகப் படுகொலை செய்யலாம். அதற்கான தண்டனை உங்களுக்குக் கிடைக்கப் போவதில்லை. அதிலிருந்து நீங்கள் தப்பி விடுவீர்கள் என்பது தான்

 

குடாநாட்டில் பொதுமக்களையும் அவர்களது வீடுகளையும் படம் பிடித்து பதிவு செய்யும்
14 .06. 2011 
நடவடிக்கைகள் நேற்று இடம்பெற்றுள்ளன :யாழ். குடாநாட்டில் பொதுமக்களையும் அவர்கள் தங்கியுள்ள வீடுகளையும் படம் பிடித்து பதிவு செய்யும் நடவடிக்கைகள் நேற்று பல்வேறு இடங்களிலும் இடம்பெற்றதாக தெரியவருகிறது.
 
 
இந்த நடவடிக்கைகளில் சில இடங்களில் இராணுவத்தினர் ஈடுபட்டனர். வேறு சில இடங்களில் இராணுவத்தினர் என தெரிவித்து சிவில் உடையில் வந்தவர்களும் ஈடுபட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மத்தியில் ஒரு வித அச்சம் ஏற்பட்டுள்ளது.
 
 
வீடுகளுக்கு வந்தவர்கள் குடும்ப பதிவு அட்டையிலுள்ள விபரங்களை தாம் கொண்டு வந்த படிவங்களில் நிரப்பியுள்ளனர். அத்துடன் வீட்டில் இருந்தவர்களைத் தனித் தனியாக படமும் எடுத்துள்ளனர்.வீட்டில் எத்தனைபேர் இருக்கின்றீர்கள்? எல்லோரும் என்ன செய்கின்றனர்.
 
 
எத்தனைபேர் வேலை செய்கின்றனர். வீட்டில் எத்தனை அறைகள் உள்ளன என்று கேட்டு விபரங்களை பதிவு செய்துள்ளனர். சில இடங்களில் எல்.ரீ.ரீ.ஈ.யினரால் பிரச்சினை இருக்கிறதா எனவும் கேட்டுள்ளனர். அத்துடன் அவர்கள் தாம் கொண்டுவந்த புகைப்படக் கருவியினால் வீட்டையும் படம் பிடித்துச் சென்றுள்ளனர்.
 
 
தங்களின் இந்தப் பணிகளை முடித்துக்கொண்டு வீட்டில் ஸ்ரிக்கர் ஒன்றையும் ஒட்டிச் சென்றுள்ளனர்.
 
 
இது குறித்து காவற்துறையினரிடம் கேட்டபோது, தாம் அவ்வாறான பதிவு நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை எனவும் அத்துடன் இவ்வாறானதொரு நடவடிக்கை மேற் கொள்ள்ப்பட்டது பற்றி தமக்கு எதுவும் தெரியாது எனவும் தெரிவித்துள்ளனர். 
 இந்திய - இலங்கை ராஜதந்திர நெருக்கடி - இலங்கையின் தேசியப் பாதுகாப்புச் சபை கூடுகிறது?
13 .06. 2011 
இலங்கையின் தேசியப் பாதுகாப்புச் சபை கூடுகிறது?இந்திய - இலங்கையில் இடையில் ஏற்பட்டுள்ள ராஜதந்திர நெருக்கடி குறித்து கலந்துரையாடுவதற்காக தேசியப் பாதுகாப்புச் சபையின் விசேட கூட்டம் ஒன்று அடுத்த வாரம் நடைபெறவுள்ளதாக அரசாங்கத்தின் உயர் மட்டத்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஜனாதிபதி தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. தேசியப் பாதுகாப்புச் சபையின் தலைவராக ஜனாதிபதி இருப்பது, அதன் உறுப்பினர்களாக பிரதமர், பாதுகாப்புச் செயலாளர், முப்படைத் தளபதிகள் மற்றும் புலனாய்வுப் பிரிவுகளின் தலைவர்கள் உள்ளனர்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.