குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

செவ்விந்திய பழங்குடி தலைவரை மணந்த இங்கிலாந்து புகைப்பட நிபுணர்

லண்டன்: இங்கிலாந்தை சேர்ந்த இளம்பெண் ஷாராபேகம். இவர் ஆவணப்படம் தயாரிப்பதுடன், புகைப்பட நிபுணராகவும் இருந்து வந்தார். தென் அமெரிக்கா நாடான ஈக்வடாரில் சர்வதேச எண்ணை நிறுவனங்களை எதிர்த்து பழங்குடியின மக்கள் நீண்டகாலமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த போராட்டத்தை பற்றி அறிந்த ஷாராபேகம் தானும், அந்த பழங்குடியின மக்களும் இணைந்து போராட்டம் நடத்த வேண்டும் என விரும்பினார்.

இதற்காக தனது படக்குழுவினருடன் ஈக்வடார் நாட்டில் உள்ள பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்றார். அந்த இனத்தில் தலைவராக ஜிங்டோ என்பவர் இருந்து வந்தார். அவரை சந்தித்த ஷாராபேகம் அவருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார். திடீரென அவர் ஜிங்டோவை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். அதன்படி அவரை திருமணம் செய்து கொண்டார்.

 

ஜிங்டோவுக்கு ஷாராபேகத்தை விட 30 வயது அதிகமாகும். ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்தை பழங்குடி மக்களும் ஏற்றுக் கொண்டனர். அவருக்கு பறவை இறகுகளால் ஆன கிரீடத்தை சூட்டி தங்கள் ராணியாக பாவித்தனர். இதுபற்றி ஷாராபேகம் கூறும்போது, ஜிங்டோவுடன் குடும்பம் நடத்துவதற்காக அவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்த போராட்டம் வெளி உலகுக்கு தெரிய வேண்டும் என்பதற்காகவே நான் அவரை திருமணம் செய்து கொண்டேன் என்று கூறியுள்ளார்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.