குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

எம்மிடமில்லாத மானிடத்தைப் பெற்றிடுவோம்தமிழகம்பெரும்கவிக்கோவின் தமிழ்ப்பணியில் 01.8..2008 வெளியானது.

 பூநகரி . பொ.முருகவேள்ஆசிரியர்.சுவிற்சர்லாந்து.

  ஆற்றல்  பெற்ற  சக்தியை  ஆண்டவனாக
    முற்கால மனிதன்  உருவாக்கினான்
 முற்காலத்தில்  கற்காத  மனிதனிடமும்
   மானுடமிருந்து  உயிர்கள்மகிழ்ந்தன.

 கற்சிலைக்குள்ளும்   கடவுள்    சத்தியிருந்தது
  தற்காலத்தில் மானுடத்தை விற்றுவிட்டதால்
ஆண்டவனைவியாபாரியாக்கி பொற்சிலைவைத்தாலும்
 பொன்னென்ற உயர்வேயன்றி ஆண்டவன் எங்கே!


உருவமற்ற ஆண்டவனுக்கு தோற்றங்கள் பலகொடுத்து
 ஒருமைபெற்ற சத்திக்கு வேற்றுமைகள்சொல்லி
மதங்கள் பலவாக்கி உலகெங்கும் கலகங்கள் உருவாக்கி
 பொருளியல்குவிக்கும் கூட்டம் உலகஅகவைகளிலே!


அற்றுவிட்டமானுடம்  பெற்றுவிட்டால்   மனங்களிலும்
   தலங்களிலும் திருத்தங்கள்நிகழ்து மகிழலாமே
என்றோ   ஆண்டவன்மூடிய  கண்களை  விழிப்பான்.
   இன்பமேசூழும் உலகமெலாம் நலம்பெறும்.

 
அற்புதன் ஆண்டவனுக்கு தமிழெழுத்து மலர்துாவி
   தமிழ்சொல்லெடுத்து கவிமாலைசாத்தி
 பெற்றிடுவோம் எம்மிடமில்லாத மானிடத்தை

பெற்றிடுவோம்  இப்பிறப்பின்  நற்பயனை. 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.