குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 10 ம் திகதி வெள்ளிக் கிழமை .

வற்றாப்பளையில் இன்று பொங்கல் சிவ்சங்கர் மேனனின் இரட்டை முகம் வடிவம்சீமான் சீற்றம் - கண்டனம் - காட்டம

13.06.2011.த.ஆ--பிரசித்தி பெற்ற வற்றாப்பளை அம்மன் ஆலயத்தின் பொங்கல் விழா இன்று நடைபெறவுள்ளது. மிகத் தொன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகின்ற குறித்த ஆலயத்தின் பொங்கல் நிகழ்விற்காக பல இலட்சம் பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. உப்பு நீரில் விளக்கு எரியும் அதிசயம் வாய்ந்த வற்றாப்பளை அம்மன் வன்னி மக்களின் காவல் தெய்வமாகப் போற்றப்பட்டு வருகின்றார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் மீள்குடியேற்றம் இடம்பெற்றிருக்காதபோது முதலில் வற்றாப்பளைக் கிராமத்திலேயே மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

ஆலயத்திற்குச் சென்ற இராணுவத்தினர் எதிர்கொண்ட நெருக்கடிகளை அடுத்தே மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப்பட்டதாக இராணுவத்தினர் ஆலய நிர்வாகத்தினரிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 சிவ்சங்கர் மேனனின் இரட்டை முகம் தமிழர் படுகொலையை புதைக்கும் வடிவம்
சீமான் சீற்றம் - கண்டனம் - காட்டம்

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு, ஜனாதிபதி மகிந்தவை சந்தித்துப் பேசிய பிறகு இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் கொழும்பில் இந்திய இதழாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழர் பிரச்சினை குறித்த அணுகுமுறையில், இந்திய மத்திய அரசின் போக்கில் உள்ள முரண்பாடுகள் குறித்து சீமான் சுட்டிக்காட்டியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அதன் தலைவர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில்,

இலங்கை சென்ற இந்திய உயர்மட்டக் குழு இலங்கைப் பிரச்சினைக்கு தமிழர்களுடன் சேர்ந்து ஓர் அரசியல் ஏற்பாட்டை உருவாக்க வேண்டும். அதனை உடனடியாக விரைவாகச் செய்யவேண்டும் என்று இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளோம் என்று கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று (நேற்று) காலை வெளியான ஆங்கில, தமிழ் நாளிதழ்கள் அனைத்திலும் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணுமாறு ஜனாதிபதி மகிந்தவிடம் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் தலைமையிலான குழு வலியுறுத்தியது என்று செய்திகளும் வந்துள்ளன.

ஆனால் இலங்கையிலிருந்து வெளியாகும் நாளிதழ்களிலும் இணையத்தளங்களிலும் வெளியான செய்திகள் வேறுவிதமாக உள்ளன.

தமிழர் பிரச்சினைக்கு தங்களுக்கு உகந்த ஒரு அரசியல் தீர்வைக்காணவேண்டியது இலங்கை அரசின் பொறுப்பு. இந்த விவகாரத்தில் இந்தியா எந்தவிதத்திலும் தலையிடாது என்று சிவ்சங்கர் மேனன் கூறியதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழர்கள் பிரச்சினைக்கு வேகமாகத் தீர்வு வேண்டும் என்று நாங்கள் விரும்பினாலும் தங்களுக்கு ஓர் உகந்த தீர்வை இலங்கை அரசுதான் உருவாக்கவேண்டும் என்றும் சிவ்சங்கர் மேனன் விளக்கியுள்ளார் என்று கொழும்புச் செய்திகள் கூறுகின்றன.

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்பது இலங்கை அரசு தனக்கு உகந்த வகையில் முடிபெடுக்கக் கூடியது என்று இந்திய அரசு கருதுமானால் அப்பிரச்சினையில் எந்தவிதத்திலும் இந்தியா தலையிடாது என்பதுதான் அதன் நிலையானால், பிறகு ஒரு அரசியல் ஏற்பாட்டை உடனடியாக உருவாக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தியுள்ளோம் என்று கூறுவதன் பொருள் என்ன? சிவ்சங்கர் மேனன் வார்த்தைகளில் உண்மையான, நீடித்த அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற அக்கறை பிரதிபலிக்கவில்லையே.

அதுமட்டுமல்ல, இலங்கை நாட்டின் உச்சநீதிமன்றத்தால் அரசமைப்பிற்கு முரணானது என்று தூக்கி எறியப்பட்ட 13-வது திருத்தம் பற்றி சிவ்சங்கர் மேனன் பேசியுள்ளார். 13-வது அரசியலமைப்பு திருத்தத்தின் அடிப்படையில் ஒரு தீர்வை தமிழர்களுக்குத் தரவேண்டும் என்று வலியுறுத்தினீர்களா? என்ற வினாவிற்கு 13-வது அரசமைப்புத் திருத்தத்தின் அடிப்படையில் தீர்வை உருவாக்குவதாக இலங்கை அரசே கூறியுள்ளது என்று கூறுகிறார்.

இது இல்லாத ஊருக்கு வழிகாட்டும் அயோக்கியத்தனம் அல்லவா?
ஈழத்தமிழர் அரசியலுரிமைப் போராட்டத்திற்கு இந்தியா ஒரு தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என்று கோரும் இலங்கைத் தமிழர் கட்சிகள், அதன் இரட்டை முகத்தை சிவ்சங்கர் மேனனின் வார்த்தைகளிலிருந்து புரிந்து கொள்ளவேண்டும்.

அதுமட்டுமல்ல, தமிழக சட்டசபைப் பேரவையில் இலங்கை அரசிற்கு எதிராக போர்க்குற்றம், பொருளாதாரத் தடை ஆகியன குறித்து மகிந்தவுடன் விவாதிக்கவில்லை என்றும் தங்களைப் பொறுத்தவரை இந்தியாவில் மத்திய அரசோடு மட்டுமே உறவு கொண்டுள்ளதாகவும், இலங்கை அரசு கூறியதாக சிவ்சங்கர் மேனன் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

ஆனால் இன்று (நேற்று) காலை வெளியான ஆங்கில நாளிதழில் அதன் கொழும்புப் பேச்சாளர் விடுத்துள்ள செய்தியில் தமிழக சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அதன் சட்ட ரீதியான அடிப்படை குறித்து இலங்கை அரசு கேள்வி எழுப்பியது என்றும் ஆனால் அதற்கு இந்தியக் குழு என்ன பதில் தந்தது என்பதை சிவ்சங்கர் மேனன் வெளியிடவில்லை என்றும் கூறியுள்ளார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, இலங்கைப் போர் குறித்து ஐ.நா. நிபுணர் குழு அளித்த அறிக்கையின் மீது இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்று கேட்டதற்கு ஐ.நா. மனிதவுரிமை மன்றத்தில் எந்தவொரு நாட்டையும் தனிமைப்படுத்தி கண்டனத்திற்கு உட்படுத்த இந்தியா விரும்பவில்லை என்று பதிலளித்துள்ளார்.

இது மனிதவுரிமை மன்றத்தில் இலங்கை அரசை இந்தியா காப்பாற்றும் என்ற நேரடியான பதிலாகும்.

மேலும் இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் 40 ஆயிரம் பேர் வரை அப்பாவிப் மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. அமைப்புகளும் மனிதவுரிமைக் குழுக்களும் குற்றம் சாட்டுகின்றன. இது குறித்து என்ன கூறுகிறீர்கள் என்ற வினாவிற்கு, அப்படிப்பட்ட தகவல்களில் உண்மை உள்ளதா? என்பதை கேள்விக்கு உட்படுத்தலாம் என்று சிவ்சங்கர் மேனன் கூறியுள்ளார்.

முள்ளிவாய்க்காலிலும் வட்டுவாகலிலும் நடந்த போரில் 10 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டிருப்பார்கள் என்று ஐ.நாவின் கொழும்புத் தூதரகப் பேச்சாளராகவிருந்த கார்டன் வீஸ் போன்ற நேர்மையான அதிகாரிகள் கூறியிருந்தனர். பல்வேறு ஆதாரங்களை ஆராய்ந்த ஐ.நா நிபுணர் குழு பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளது.

ஆனால் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அப்படிப்பட்ட தகவல்கள் கேள்விக்கு உட்படுத்தக்கூடியவை என்று கூறியதிலிருந்து தமிழினப் படுகொலை பற்றிய உண்மையை இந்தியா புதைக்க முயற்சிப்பதும் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள அது இலங்கை அரசின் பக்கமே நிற்கும் என்பதையும் தெளிவாக்கியுள்ளது.

தன்னைச் சந்தித்துப் பேசிவிட்டு கொழும்பு சென்ற சிவசங்கர் மேனன் எப்படிப்பட்ட நபர் என்பதை அவர் வெளிப்படுத்திய வார்த்தைகளிலிருந்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் புரிந்துகொள்ளவேண்டும்.

இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு உடந்தையான இந்திய அதிகாரி சிவ்சங்கர் மேனன் என்பதனையும், ஈழத் தமிழர்கள் அரசியல் சம உரிமை பெற எந்தவிதத்திலும் இந்திய மத்திய அரசு உதவாது என்பதையும், தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முன்னெடுக்க மத்திய அரசு ஒருபோதும் முன்வராது என்பதை தமிழக முதல்வரும் தமிழர்களும் புரிந்துகொள்ளவேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.