குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 10 ம் திகதி வெள்ளிக் கிழமை .

சீதைக்கு இராமன் சித்தப்பனா? அண்ணனா? கணவனா?

வால்மீகர் இராமாயணத்தை வடமொழியில் செய்தார். இன்று, வடமொழியில் காணப்படும் இராமாயணம் வால்மீகியால் செய்யப்பட்டதன்று ! என்பது, ஆராய்ச்சி அறிஞர் கருத்து. முன் இருந்த இராமாயணம் பல கூட்டல், கழித்தல், திருத்தல்களோடு புதிதாக அமைக்கப்பட்டிருக்கிறதென்பதை எவரும் ஒப்புக் கொள்ளாமல் இருக்கமுடியாது ! என, c.v.வைத்தியா கூறியுள்ளார். (The Riddle of Ramayana p. 7) கி.மு.1000 வரையிலான காலத்தில் இராமாயணக்கதை வழங்கியிருக்குமேயானால், அது வடநாடு தொடர்புடைய கதையாயிருக்குமே யன்றித் தென்னாடு தொடர்புடைய கதையாக இருக்க முடியாது! காரணம், கி.மு.1000 க்கு முன் ஆரியர் விந்திய மலைக்குத் தெற்கே வரவில்லை. அவர்கள், விந்தியதுக்குத் தெற்கிலுள்ள நாடுகளைப் பற்றி அறியவுமில்லை! என்பது, வரலாற்றாசிரியர்கள் கொண்டுள்ள முடிவு .தசரத சாதகம்:

கௌதம புத்தர் கி.மு.ஆறாம் நூற்றாண்டில் விளங்கினார். அவர் காலத்தோ அதற்குச் சிறிது முன்போ புத்தரின் பழம் பிறப்புகளைக் கூறும் சாதகக் கதைகள் எழுந்தன. அக்கதைகளுள் ஒன்றாகிய "தசரத சாதகத்தில்" "இராம கதை " பின் வருமாறு கூறப்பட்டுள்ளது.

'முன்னொரு காலத்தில் வாரணவாசியில் தசரதன் என்னும் அரசன் வாழ்ந்தான். அவனுக்கு அறுபதினாயிரம் மனைவியர் இருந்தனர். அவர்களுள் பட்டத்துத் தேவி இரு குமாரர்களையும் ஒரு குமாரத்தியையும் பெற்றாள். மூத்த குமாரன் இராமன், இரண்டாம் குமாரன் இலக்குமணன்; புதல்வி சீதை. பின்பு அரசி இறந்து போனாள் . அவள் இறந்ததும் தசரதன் இன்னோருத்தியை மணந்தான். அவன் அவளிடத்தில் மிக மயங்கியிருந்தான். அவள் வயிற்றில் ஒரு மகன் பிறந்தான் . அவனுக்குப் பரதன் என்று பெயர். மகன் மீது கொண்ட பற்றினால் அரசன் பட்டத்துத்தேவியை ஒரு வரம் கேட்குமாறு கூறினான். அவள் தான் வேண்டும் போது வரத்தைக் கேட்டுக் கொள்வதாகக் கூறினாள்.

பரதனுக்கு எட்டு வயதாயிற்று. அப்போது அவள் அரசனிடம் முன் கொடுப்பதாகக் கூறிய வரத்தின்படி இராச்சியத்தைத் தன் மகனுக்குக் கொடுக்கும்படி கேட்டாள் . அரசன் கையை உதறி, "நாயே எனது அழகிய இரண்டு மக்களையும் கொன்றுவிட்டு இராச்சியத்தை உன் மகனுக்குக் கொடுக்கும்படி கேட்கிறாயா?" என்றான். அவள் அரசனின் கோபமான சொற்களைக் கேட்டுப் பேசாது அறையினுள் சென்றாள். அவள் தினமும் அரசனை அடைந்து நாட்டை மகனுக்குக் கொடுக்கும்படி கேட்டு வந்தாள் . அவன், "பெண்கள் தீயவர்கள்; இவள் பொய்யான கடிதம் எழுதி அல்லது எவருக்காவது கைக்கூலி கொடுத்து என் புதல்வர்களைக் கொன்று விடுவாள் " என்று தனக்குள்ளே நினைத்தான். அவன் தன் புதல்வர்களை அழைத்து, "நீங்கள் இங்கிருந்தால் உங்களுக்குப் பல் துன்பன்கள் நேரும்; நீங்கள் அடுத்த இராச்சியத்துக்கு அல்லது காட்டுக்குச் செல்லுங்கள்; எனது மரணக்கிரியை நடக்கும்போது வந்து இராச்சியத்தைக் கைப்பற்ரிக் கொள்ளுங்கள் " என்று சொன்னான். அவன் சோதிடரை அழைத்தான்; தனக்கு இன்னும் எவ்வளவு கால வாழ்நாள் இருக்கிறது? என்று பார்க்கும்படி சொன்னான். அவர்கள் இன்னும் பன்னிரண்டு ஆண்டுகள் இருக்கின்றன என்று சொன்னார்கள். பன்னிரண்டு ஆண்டுகள் கழித்துவரும்படி அரசன் தன் புதல்வர்களுக்குச் சொன்னான் . "நானும் எனது சகோதரர்களுடன் செல்லப் போகிறேன்" என்று சீதை சொன்னாள். பலர் பின் தொடர மூவரும் நாட்டுக்கு வெளியே சென்றார்கள். அவர்கள் உடன் வந்தவர்களைப் போகும் படிச் சொல்லிவிட்டு ஹமவந்தா என்னும் காட்டை அடைந்தார்கள். அங்கே இலைகளால் வேய்ந்த குடிசை ஒன்றை அமைத்தார்கள். இராமனைக் குடிசையில் இருக்கும்படிச் சொல்லிவிட்டு இலக்குமணனும் சீதையும் பழங்கள் கொண்டுவர வெளியே சென்றார்கள். அன்று முதல் இராமன் குடிசையில் இருந்தான்; மற்ர இருவர் பழங்களைக் கொண்டு வந்தார்கள். இவர்கள் இவ்வாறு இருக்கும் போது தசரதன் மக்களைப் பிரிந்த கவலையினால் ஒன்பதாவது ஆண்டில் மரணமானான் . ஈமக்கிரியை முடிந்ததும் "எனது குமாரனுக்கு முடி சூட்டுங்கள்" என்று அரசி மந்திரிமாரிடம் சொன்னாள். அவர்கள் அதற்கு இணங்கவில்லை . பரதன் இராமனைக் காட்டிலிருந்து அழைத்துவருவதாகக் கூறி நால்வகைச் சேனைகளுடன் புறப்பட்டான்.


அப்போது இலக்குமணனும் சீதையும் பழம் பறிக்க வெளியே சென்றிருந்தனர். பரதன் இராமனைக் கண்டான். அவன் பாதங்களில் விழுந்து வணங்கித் தந்தையின் மரணத்தை கூறினான்.


இராமன் கவலை கொள்லவும் இல்லை. அழவும் இல்லை. பரதன் அழுதுகொண்டிருந்தான். அப்போது மற்றவர்களும் வந்தார்கள். தந்தையின் மரணத்தைக் கேட்டு மயங்கி விழுந்தார்கள். பரதன் இராமனை நோக்கி ' நீர் அழாமல் உறுதியாக இருப்பதற்குக் காரணம் என்ன?" என்றான் . "மனிதனால் ஆகாத ஒன்றிற்காகப் புலம்புவதால் பயனில்லை. பழுத்தப் பழம் எப்பொழுதாவது நிலத்தில் விழுந்துவிடும். பிறந்தவர்கள் எல்லாரும்
ஒரு நாளைக்கு இறந்துவிடுவர்" என்று இராமன் சொன்னான். இதைக் கேட்டு மற்ரவர்கள் ஆறுதல் அடைந்தார்கள். பரதன் இராமனை வணங்கி , வாரணவாசியை ஆளும்படி இராமனைக் கேட்டான். "இலக்குமணனையும் சீதையையும் அழைத்துச் சென்று நீயே ஆட்சி செய்! எனது தந்தை பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து வரும்படிக் கட்டளையிட்டார் . இப்போது வந்தால், நான் தந்தையின் கட்டளையைக் கடந்தவனாவேன். நான் இன்னும் மூன்று ஆண்டுகளின் பின் வருவேன்" என்றான். " அவ்வளவு காலமும் யார் ஆட்சி புரிவார்?" என்று பரதன் கேட்டான். இராமன் " எனது மிதியடிகள் ஆட்சி புரியும்" என்று சொல்லித் தனது புல்லால் முடைந்த மிதியடிகளை அவனிடம் தந்தான். மிதியடிகளை எடுத்துக் கொண்டு மூவரும் வாரணவாசிக்குச் சென்றனர். மந்திரிமார்கள் மிதியடிகளை சிங்காசனத்தின் மீது வத்து ஆட்சி செய்தனர். மூன்று ஆண்டுகள் கழிந்தன. இராமன் காட்டினின்றும் வந்தான் அவன் பதினாறாயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்தான் . பின்னர் வானுலகம் அடைந்தான்." என்று, தசரத சாதகம் கூறுகிறது.

இவ்வரலாற்றில் இராவணன் சீதையைக் கவர்ந்ததைப் பற்றியோ இராம இராவணப் போர்களைப் பற்றியோ யாதும் கூறப்படவில்லை

கட்டுரையாளர் : இரவா

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.