குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 10 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தீர்வுகாணும் நோக்கமில்லாத இலங்கை - காணி. கா.து அதிகாரங்களை வழங்க மறுப்பு இந்தியாவின் கண்ணில்மண்ணைத்

 ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூன் 2011 14:13    . தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் 13ஆவது அரசியல் அமைப்பை நடைமுறைப்படுத்தும் அதேநேரம் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை மாகாணசபைக்கு வழங்க முடியாது என இலங்கையின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வு விடயத்தில் இலங்கை அரசு முனைப்பு காட்டுவதாக இந்திய அரசின் தேசிய பாதுகாப்புச் செயலாளர் சிவசங்கர்மேனன் தெரிவித்திருக்கும் அதேவேளையிலேயே ஜனாதிபதி மகிந்தரால்இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் கூட்டத்தின் போது இந்த அதிகாரங்களை வழங்குவதற்கு கட்சி தலைவர்கள் எதிர்ப்பை தெரிவித்ததாக இந்திய குழுவிடம் மகிந்த ராசபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மாநிலங்களுக்கு காணி காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டது போல் இலங்கையில் மாகாணங்களுக்கு இந்த அதிகாரங்களை வழங்கி 13வது அரசியல் அமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்திய குழு வலியுறுத்திய போது மாகாணசபைகளுக்கு காணி காவல்துறை அதிகாரங்களை வழங்க முடியாது என மகிந்த ராசபக்ச தெரிவித்துள்ளார். திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களும்.

தமிழ் மக்களுக்கான பாதுகாப்புமே இனப்பிரச்சினையில் முக்கிய விடயமாக காணப்படுவதாகவும். காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை மத்திய அரசாங்கம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் இனப்பிரச்சினை ஒரு போதும் தீராது என தமிழர் தரப்பில் சுட்டிக்காட்டப்படுகிறது.Share 0

இந்தியாவின் கண்ணில் மண்ணைத்தூவிய இலங்கை இராணுவம்!
சனி, 11 ஜூன் 2011 15:28    .
இந்தியாவில் இருந்து இலங்கையில் நடைபெற்ற பயங்கரவாத அனுபவங்கள் தொடர்பான மாநாட்டுக்கு சென்ற இந்திய இராணுவத்தினரை மிகவும் சாதுரியமாக ஏமாற்றியுள்ளனர் இலங்கை இராணுவத்தினர்.

அண்மையில் இந்திய இராணுவ அதிகாரி மேஜர். ஜெனரல் மிஸ்ரா தலைமையில் ஒரு அணியினர் இலங்கை சென்றனர்.

இவர்களுக்கு முன்னாள் புலிப் போராளிகளின் முகாங்களும் புனர்வாழ்வு அளிக்கப்படும் இடங்களும் காண்பிக்கபட்டன.

எனினும் இந்திய தூதுக் குழுவான இவர்களுக்கு உண்மையான முன்னாள் புலி போராளிகள் 1000 பேரை வைத்து கொத்தடிமைகளாக நடத்தப்படும் வெலிகந்தை புனர்வாழ்வு முகாம் என கூறப்படும் சித்திரவதை முகாம் காட்டப்படவில்லை என தெரியவருகிறது.

இந்த முகாமில் பல முன்னாள் புலி உறுப்பினர்களும் புலிகள் அமைப்பில் இருந்து விலகி இருந்தவர்களும் கைது செய்யபட்டு சிறையிடப்பட்டுள்ளனர்.

இவர்கள் தினமும் 16 மணித்தியாலங்கள் காடு வெட்டுதல், கத்தரி நடுதல், மரவெள்ளிக்கு தண்ணி விடல், தோட்டம் செய்தல், அங்கவீனர்களான புலி உறுப்பினர்களுக்கு மலம் எடுத்தல், அங்கவீனமானவர்களின் அசிங்கங்களை துப்பரவு செய்தல், மலம் சலம் அள்ளி அகற்றல், மலசலகூடம் கழுவுதல், மலசலக் குழி துப்பரவு செய்தல், இராணுவத்தினருக்கு சமைத்தல், இராணுவத்தினருக்கு உடுப்பு தோய்தல், இராணுவத்தினரின் வாகனம் கழுவுதல், இராணுவத்தினரின் செல்ல பிராணிகளை குளிப்பாட்டல்.

போன்றவையே இங்கு கொடுக்கப்படும் புனர்வாழ்வு. இவற்றை இந்திய படைகளுக்கு காட்டாமல் மறைத்துள்ளது இலங்கை இராணுவம்.!
தமிழ் இளைஞனை அடித்து குருடாக்கிய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகருக்கு பதவி உயர்வு!
சனி, 11 ஜூன் 2011 15:42    .
பத்து உயர் காவல்துறை அத்தியட்சகர்கள், பிரதி காவல்துறை மா அதிபர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த பதவி உயர்வுகள் எதிர்வரும் 13ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என அரச சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த 10 பேரில் தமிழ் இளைஞன் ஒருவரை பணத்துக்காக புலி என கைது செய்து அவரை சித்திரவதை செய்து கடுமையாக கண்ணில் தாக்கி குருடனாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கை எதிர் நோக்கிய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரும் உள்ளடங்குகிறார்.

ஆர்.எம் வீரசூரிய, டி.எல்.எஸ்.ஜி.எல். பீரிஸ், ஜே. குலத்திலக, ரி.கே.பி. டி சில்வா, மற்றும் ஜி. திசாநாயக்க ஆகிய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்களே இவ்வாறு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

இது தவிர, எம்.கே.டி. டபிள்யூ. அமரசிங்க, டபிள்யூ. அபேநாயக்க, ஆர்.டபிள்யூ. எம். சி. ரணவண, என்.டி. தலுவத்த மற்றும் ஏ.ஆர்.வைத்தியலங்கார ஆகிய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்கள் பிரதி காவல்துறை மா அதிபராக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.