குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 10 ம் திகதி வெள்ளிக் கிழமை .

சுவிசில் இலங்கையர் எண்ணிக்கை 978 பேரால் வீழ்ச்சி!

 வெள்ளி, 10 .06.2011 22:58    . சுவிற்சலாந்தில் தங்கி இருக்கின்ற இலங்கையர்களின் எண்ணிக்கை கடந்த ஒரு வருட காலத்துக்குள் 978 பேரால் குறைந்து உள்ளது. சுவிஸ் நாட்டு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இப்புள்ளிவிபரத்தை வெளியிட்டு உள்ளது.

புள்ளிவிபரத்தின்படி கடந்த ஏப்ரல் வரையான ஒரு வருட காலத்துக்குள் சுவிஸில் நிரந்தர வதிவிட உரிமை பெற்ற வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 17.34,561. இது 4.1 சதவீத அதிகரிப்பு ஆகும்.

சுவிஸில் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றவர்களாக ஐரோப்பியர்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். ஐரோப்பியர்களின் எண்ணிக்கை 1,114,626. இவர்களுக்கு அடுத்த நிலையில் நோர்வே, ஐஸ்லாந்து, லீக்டன்ஸ்டைன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளார்கள்.

ஆனால் சேர்வியா, பொசுனியா - எர்செகோவினா, குரோவாசியா, துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து வந்து சுவிஸில் தங்கி இருப்போர் எண்ணிக்கை வீழ்ச்சி கண்டு உள்ளது. இந்த எண்ணிக்கைக்குள் நிரந்தர வதிவிட உரிமை பெற்று இருப்பவர்களின் தொகையும் உள்ளடங்குகின்றது.

குறிப்பாக 978 பேரால் இலங்கையர்களின் எண்ணிக்கை குறைவடைந்து உள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.